Thu11212019

Last updateTue, 19 Nov 2019 11am

இனவாதிகளின் கட்டுத்துவக்கு யாரைக் குறி வைக்கிறது?

அன்புக்குரிய அன்னையரே, தந்தையரே, சகோதர, சகோதரிகளே, மீண்டும் பற்றவைக்கத் துடிக்கும் இனவாத தீயின் கொடிய மரணச் சுவாலை இலங்கை சமூகத்தை தொட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. அவ்வாறான துரதிஷ்ட நிலைமையை தோற்கடிப்பதற்கு நீங்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சமூகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய கருத்தாடலுக்கு அழைப்பு விடுவதற்காக, அதற்காக அனைத்து மக்களிடையே, பரந்த மக்கள் ஒன்றிணைப்பை கட்டியெழுப்புவதற்காகவும், அதன் ஆரம்பப் படியாக இந்த துண்டு பிரசுரத்தை உங்கள் கைகளுக்கு கிடைக்க, நாங்கள் சிந்தித்தோம்.

 

(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

Read more ...

முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மீண்டும் பெற்றுக்கொடு!

தமது காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டு முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் தாம் குடியிருந்த காலத்தில் தம்மால் கட்டப்பட்ட முருகன் கோவில் முன்றலில் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கிய பின்பு அவர்களால் வெளியேற முடியாதவாறு பாதையை மூடிவிட அரசாங்க பாதுகாப்புப் பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதனை வன்மையாகக் கண்டிக்கும் சம உரிமை இயக்கம் அவர்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றது.

Read more ...

முல்லைதீவு கேப்பாபுலவில் போராடும் மக்களுடன் சேர்ந்து சமவுரிமை இயக்கம்

முல்லைதீவு கேப்பாபுலவில் போராடும் மக்களுடன் சேர்ந்து இயங்கிவரும் சமவுரிமை இயக்கத்தின், மட்டக்களப்பு, கேகாலை, அனுராதபுரம், கம்பகா, நீர்கொழும்பு போன்ற பிரதேசத்தின் தோழர்கள் மற்றும் போராடும் மக்களில் ஒருபகுதியினர்- அரச படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் நுழைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Read more ...

வடக்கு-கிழக்கில் பறிக்கப்பட்ட காணிகளை மக்களுக்கு வழங்கு - சமவுரிமை இயக்கம்

சமவுரிமை இயக்கம், வடக்கு - கிழக்கு மக்கள் யுத்தத்தின் பின்னர் முகம்கொடுத்து வரும் பாரிய பிரச்சனைகள் குறித்து தென்னிலங்கை மக்களுக்கு பிரச்சாரப்படுத்தும் நோக்கத்தில் பல பிரச்சாரம் மற்றும் சத்தியாககிரக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. கடந்த மாதம் நுகேகொட மற்றும் கண்டியில் சத்தியாககிரக போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று (19/5/2017) அநுராதபுர நகரத்தில் ஒரு நாள் சத்தியாககிரக போராட்டம் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

Read more ...

ஜனநாயக உரிமைகளுக்காக மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்!

காணாமலாக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும், பறிக்கப்பட்ட காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறும் வற்புறுத்தும் தொடர் போராட்டத்தில் வடக்கு கிழக்கு மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மட்டுமல்ல திருகோணமலை முதற்கொண்டு தொடர்ச்சியான சத்தியாக்கிரக வடிவத்தில் நடத்தப்படும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை இரு மாதங்களை கடந்துள்ளது. ஆனாலும், அரசாங்கத்தின் எந்தவொரு அதிகாரியும் இது விடயத்தில் பொறுப்புடன் தலையீடு செய்யவில்லை என்பதுடன் தீர்க்கப்படாமலிருப்பது காணாமல் போனவர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. ஆரம்பத்தில் அரசியல் சிறைக்கைதிகளை விடுதலை செய்வதாக தேர்தல் வாக்குறுதியளித்த அரசாங்கம் இலங்கையில் அரசியல் சிறைக்கைதிகள் கிடையாதென இப்போது கூறுகின்றது. பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட அடக்குமுறை சட்டங்களை ரத்துச் செய்வதாக கூறிய வாக்குறுதியும் மீறப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டது. யுத்த காலத்தில் மக்களிடமிருந்து கையகப்படுத்திய காணிகள் சம்பந்தமான பிரச்சினை கூட இதுவரை தீர்க்கப்படவில்லை.

Read more ...

தங்களது நிலத்திற்காக போராடும் கேப்பாபுலவு மக்களுடன் சமவுரிமை இயக்கம்

முல்லைத்தீவில் அரசியல் கைதிகள் விடுதலை கோரியும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை கண்டு அடைய கோரியும், அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள வழங்கக்கோரியும் பல நாட்களாக இடம்பெற்று கொண்டிருக்கும் சத்தியாகிரக போராட்டங்களில் இன்று (07/04/2017) சமவுரிமை இயக்கத்தின் தோழர்கள் பலர் கலந்து கொண்டு தமது ஆதரவினை வழங்கி இருந்தனர்.

Read more ...

கண்டியிலும் நீர்கொழும்பிலும் வடக்கு கிழக்கு போராட்டங்களிற்கு ஆதரவு தெரிவித்து சமவுரிமை இயக்கம் அடையாள சத்தியகிரகப் போராட்டம்!

இன்று 20-4-2017 வடக்கு கிழக்கில் தமது அபகரிக்கப்பட்ட நிலங்களை மீள வழங்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், அனைத்து வலிந்து காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்தக்கோரியும் போராடும் மக்களிற்கு ஆதரவு தெரிவித்து கண்டி மற்றும் நீர்கொழும்பில் சமவுரிமை இயக்கம் ஒருநாள் அடையாள சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

Read more ...

சமவுரிமை இயக்கத்தின் அடையாள எதிர்ப்பு சத்தியாககிரக போராட்ட இறுதி நாள்

கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் மக்களால் பரவலாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்களிற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கத்தினரால் கடந்த 17ம் திகதி ஆரம்பித்த ஒரு வாரகால அடையாள எதிர்ப்பு சத்தியாககிரக போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய தினம் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒத்த ஆட்சியையே மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விசனப்பட்டதுடன்; ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இன்றைய ஆட்சியாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Read more ...