Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இன்று நடைபெற்ற சமவுரிமை இயக்கத்தின் போராட்டம் (படங்கள்)

சம உரிமை இயக்கத்தின் போராட்டக்குழுவினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய ஒழுங்குபடுத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது இன்று கொழும்பில் புறக்கோட்டை புகையிரதத்திற்கு முன்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்கு பின்னராக முதன் முதலில் சிங்கள உழைக்கும் வர்க்கத் தோழர்களினால் சிறுபான்மை இனத்தவரின் உரிமைக்கான போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் பின்னால் இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும், நல்லிணக்கத்தையும் செயல்பாட்டின் ஊடாக காணமுடிகின்றது.

Read more ...

யாழ் -மாணவர் விடுதலை கோரி சம உரிமை இயக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

முன்னிலை சோஷலிச கட்சியின் முன்னணிகள் மற்றும் தோழமைக் கட்சிகளின் இனவாதத்திற்றிற்கு எதிராக இயங்கும் அமைப்பான சமவுரிமை இயக்கம், மார்கழி 18 ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை, கொழும்பு புகையிரத நிலையத்திற்கு எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளது.

Read more ...

பாசிச அரசிற்கு எதிராக போராட நாட்டின் சகல மக்களையும் அழைக்கின்றோம்! பத்திரிகையாளர் மாநாட்டில் ரவீந்திர முதலிகே அழைப்பு!

சமவுரிமை இயக்கத்தின் பத்திரிகையாளர் மநாடு பகுதி 1

தெற்கில் இருக்கும் சிங்களவர்கள் அனுபவிக்கும் உரிமைகள் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்களுக்கு இல்லை.அது அரச பாதுகாப்பு படையினரால் பறிக்கப்பட்டுள்ளது.வடக்கில் உரிமை கேட்டு போராடுபவர்களுக்கு ஒயில் வீசப்படுகின்றது, கடத்தப்படுகின்றார்கள், கொலைசெய்யப்படுகின்றார்கள். இவை அனைத்தையும் அரச படைகளே செய்து கொண்டிருக்கின்றது. குடும்பங்களை புகைப்படம் எடுக்கும் திட்டத்தை உலகில் ஜேர்மனியில் உள்ள நாசிகளே முதலில் பாவித்தார்கள். அதே மிலேச்சத்தனமான நடவடிக்கையையே ராஜபக்ச அரசாங்கம் பயன் படுத்துகின்றது. நீங்கள் உரிமை கேட்டு பேச வேண்டாம் மீறி பேசினால் உங்களை கொலைசெய்வோம்.

Read more ...

சமஉரிமை இயக்கத்தின் விசேட பத்திரிகையாளர் மாநாடு

சமஉரிமை இயக்கத்தினால் நடாத்தப்பட்ட விசேட பத்திரிகையாளர் மாநாடு இன்று காலை பத்து மணியளவில் கொழும்பு மருதானை சமூக மற்றும் மதங்கள் கேந்திர நியைத்தில் நடைபெற்றது. இம்மாநாடு தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், வடக்கில் நடைபெறும் போராட்டங்கள் பற்றியும் தென்பகுதி மக்களுக்கு விளக்கும் ஊடகப் பிரச்சாரமாகவும் சமஉரிமை இயக்கம் முன்னெடுத்துள்ளது. இதில் சகல தமிழ்-சிங்கள ஊடகங்களும் கலந்து கொண்டன.

Read more ...

ஒன்றுபடுவோம் உரிமையை வெல்வோம் - சம உரிமை இயக்கம்

 

alt

சம உரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளார் ஜுட் பர்னாந்து புள்ளே தனது உரையில் இந்த நாட்டு குடிமக்களை சிங்களவர்தமிழர்முஸ்லீம்கள் என்று பிரித்து வைத்து ஆள்வதே இவ்வளவு காலமும் இந்த நாட்டை ஆண்ட மற்றும் ஆளும் அரசாங்கங்களின் நோக்கமாக இருக்கிறது. 

Read more ...

சமவுரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வு

இனவொடுக்குமுறையும் பேரினவாதமும் தலைவிரித்தாடும் எம் தேசத்தில் இனவாதிகளையும் ஒடுக்குமுறையாளர்களையும் தோற்கடிக்க இன, மத பேதமின்றி மக்களை அணித்திரட்டி போராட புறப்பட்டிருக்கும் சமவுரிமை இயக்கத்தினருடன் கைகோர்த்து சமவுரிமையை வென்றெடுக்க போராடிட விடுக்கும் அறைகூவல் இது .

Read more ...

சமவுரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வாழ்த்துச் செய்தி

எமது தோழமை அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்டத்தை முன்னிறுத்தி உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவை வளரக்க, பிளவுகளை நீக்கும் முகமாக, உழைக்கும் மக்களை இனப்பாகுபாட்டிற்கு எதிராக போராடும் முகமாக சமஉரிமை இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர்.

இனவாதிகள் எவரும் இனப்பிளவை முன்வைத்து, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அதுபோல் இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காணவும் முனையவில்லை. உண்மையில் இன ஐக்கியம் என்ற அடிப்படை அரசியலை முன்வைத்து, மக்களை எவரும் அணுகவில்லை.

Read more ...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காலி நகரில் இன்று கையெழுத்து வேட்டையும் ஆர்ப்பாட்டமும்!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பகிரங்க மனுவில் கையெழுத்திடும் இயக்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் அமைப்பினால் இன்று நண்பகல்  காலி நகரில் நடைபெற்றது.

Read more ...