Wed12072022

Last updateSun, 19 Apr 2020 8am

"இயற்கைக்கு மாறான" அனர்த்தங்களின் குற்றவாளிகள்

"இயற்கை அனர்த்தங்கள்" குறித்து இந்நாட்களில் அதிகமாக பேசப்படுகின்றது. அதற்கான சமீபத்திய காரணம் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கன மழையும், அதனால் இலட்சக்கணக்கான மக்களை நிர்க்கதிக்குள்ளாக்கிய வெள்ளமும் மற்றம் நூற்றுக்கணக்கான மக்களை பலி கொண்டு மேலும் பலரை அனாதைகளாக்கிய மண்சரிவும் தான். கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவியது. பின்பு மழையால் துன்புற வேண்டிய காலம் உதயமாகியது. வெப்பநிலை காரணமாக மரணிக்க நேர்ந்த மக்கள் இப்போது மழையால் மரணித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கே எமக்குள்ள கேள்வி இதுதான். நாங்கள் முகம் கொடுப்பது “இயற்கை அனர்த்தத்திற்குத்தான்” என்பது உண்மையா? அல்லது மனித செயற்பாடுகள் தான் அனர்த்தத்திற்கு காரணமா?  மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச நிறுவனங்கள் தேவையான அளவிலும், வினைத்திறனுடனும் செயற்பட்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கும், இந்த பேரழிவின் முன்னால் பெரும்பாலான மக்கள் வெளிப்படுத்திய மனிதப் பண்புகளை சமூத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவது எப்படி என்ற கேள்விக்கும் பதில் தேடுவதற்கு முன்பு, அது குறித்து நாம் விளக்கமொன்றை பெற்றுக் கொள்ள வேண்டும். 

Read more ...

இன்னும் ஏன் பார்த்திருக்க வேண்டும்?

அன்புக்குரிய அன்னையே, தந்தையே, தோழரே, தோழியரே…

முழு வாழ்க்கையையும் நாசமாக்கிய யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்து விட்டன. நீங்களோ நாங்களோ இந்த யுத்தத்தை உருவாக்கவில்லை. இவ்வாறான கொடூர யுத்தத்தை உருவாக்கியதற்கு உங்களில் யாரும் பொறுப்பாளிகளல்ல.

அந்த யுத்தம் உங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இல்லாமலாக்கியது. வாழ இடமின்றி காணி, வீடு, கால்நடைகள் ஆகியவற்றை பறித்து உங்களை நிர்க்கதியாக்கியது.

யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களிற்கு பின்பும் இராணுவம் பறித்துக் கொண்ட மக்களின் காணிகளை அந்த மக்களிடம் ஒப்படைக்கவில்லை. நாசமாக்கிய சொத்துக்களுக்கு இன்று வரை 5 சதம் கூட இழப்பீடாக கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி எவ்வித நீதி விசாரணைகளும் இல்லை. அரசியல் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படவுமில்லை.

Read more ...

சாதி குடியிருக்கும் வரை நீதிக்கு இடம் கிடைக்காது

இலங்கையில் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் வெளியேற்றம் அதன் குடிமக்களுக்கு சுதந்திரத்தை வழங்காது என்பதனையும் மக்களை இன-மத-சாதி-பால்-பிராந்திய-வர்க்க ரீதியாகப் பிரித்து வைத்து மோத விட்டு அதன் ஊடாக தொடர்ந்தும் அந்நியர்கள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கும் அரசியல்(கட்டமைப்பு) வழிமுறையையே சுதந்திரம் என்கிற பெயரில் வழங்கப் போகிறார்கள் என்பதனையும் நன்குணர்ந்த திரு ஹன்டி பேரின்பநாயகம் "பாகுபாடுகள்-பேதங்கள்-ஒடுக்குதல்கள்-உயர்வுதாழ்வுகள்"அற்ற 'இலங்கைக் குடிமக்களுக்கான" சுதந்திரத்தை உருவாக்குவதற்கான அடித்தளக் கட்டுமானப் பணிகளுக்காக "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்" என்ற சமூக இயக்கத்தை முன்னெடுத்தார். அதனை ஆரம்பத்திலேயே எமது ஆண்ட பரம்பரையினரின் அரசியல் வியூகங்கள் முகவரி இல்லாமல் செய்து விட்டிருந்தன.

Read more ...

பூச்சி கொல்லியும் இரசாயன ஊக்கியும் தொலைபேசியும்

இயற்கையை அழித்து உணவை நஞ்சாக்கி விடுவதே, சந்தைச் செயற்பாடாகி இருக்கின்றது. பணத்தை குவிப்பதையே உற்பத்திக் கொள்கையாக்கிய உலகமயமாக்கம், விவசாயத்தை உயிருடன் கொன்று வருகின்றது. இதை பொருளாதார வளர்ச்சியாக, மக்கள் நலனாக அரசுகள் முன்வைக்கின்றது.       

இன்று இரசாயன பூச்சிக்கொல்லியும் உரமுமின்றி, விவசாயம் என்பது, பொதுப்புத்தியில் கற்பனையாக்கப்பட்டு இருக்கின்றது. நிலத்தையும் சுற்றுச்சூழலையும் நஞ்சாக்கி ஒரு தனிமக் கூறை வீரியமடையச் செய்யும் முறைமையே, இன்றைய விவசாயமாக மாறியுள்ளது. அதேநேரம் விவசாயத்தை பெரும்பான்மை மக்களின் வாழ்வில் இருந்தும் தனிமைப்படுத்தி அன்னியமாக்கப்பட்டு இருக்கின்றது. 

இரண்டாம் உலக யுத்தத்திற்கு முந்தைய இயற்கை சார்ந்த விவசாய முறையை யுத்தத்தில் மனிதனைக் கொல்ல பயன்பட்ட இரசாயனப் பொருட்களைக் கொண்டு அழித்ததையே விவசாய வளர்ச்சியாக காட்டுகின்றனர். பாரம்பாரியமாக விவசாயிகள் விதைகளைச் சேகரிக்கும் முறைமையை அழித்தும், மலட்டு விதைகளைக் கொண்ட உணவு உற்பத்தியை திணித்தும், மரபுரீதியான மாற்றங்களைச் செய்த பயிர்களைக் கொண்ட உணவு உற்பத்தி முறைமைகளை, உலகமயமாக்கம் பன்நாட்டு கம்பனிகளின் சொத்தாக்கி இருக்கின்றது.    

Read more ...

ஏகாதிபத்தியங்களின் திரிகோண(மலை)ச் சுழிக்குள்ளே சிக்கியுள்ள இலங்கை அரசியல்

காலனித்துவ காலம் முதற் கொண்டு இலங்கை தனது சுயாதீனத்தை என்றுமே கொண்டிருக்கவில்லை. அதன் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்ந்து அந்நியர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்புடையதாகவே எமது நாட்டு அரசியல் தரகர்களால் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. இன்றும் அதுவே தொடர்கிறது.

இந்த தரகு அரசியலை செயற்படுத்துவதற்காகவே இலங்கையில் "இனப்பிரச்சனை"யை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் யாப்பை ஆங்கிலேயர்கள் அன்றே எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றனர். நமது மேட்டுக் குடிக் கூட்டங்களும் தங்கள் தங்கள் சொத்துப் பத்துக்களை-வாழ்க்கை வசதிகளைப் பாதுகாக்கும் ஒரேயொரு இலட்சியத்துடன்  நாட்டு மக்களின் உயிர்களைப் பலி கொடுக்கும் அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more ...