Tue10042022

Last updateSun, 19 Apr 2020 8am

Karl Marx- Who is he, Who are We?

கார்ல் மார்க்ஸின் 200 வருட பிறந்தநாளை ஒட்டி மே மாதம் 31 ம் திகதி கொழும்பு புகையிரத கேட்போர் கூடத்தில் நடந்த கலந்துரையாடல் மற்றும்  «Karl Marx- Who is he, Who are We?» என்ற நூல் வெளியீடும் நடந்தது. நிகழ்வின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

.

போலியான எதிரியை காட்டி பொது எதிரியை மறக்கச்செய்வதையே தற்போது செய்கிறார்கள் - குமார் குணரட்னம்

இனவாத  மதவாத மோதல்கள், வன்செயல்கள்  மூலம்  சிங்கள, தமிழ்,  முஸ்லீம்  மக்களின் பொது  எதிரி  அவர்களுக்கு  மறக்கடிக்கப்பட்டிருப்பதாக  முன்னிலை  சோஷலிஸக்  கட்சியின் அமைப்பு  செயலாளர் குமார் குணரட்னம்  கூறுகிறார்.

தற்போதுள்ள   முறுகல்  நிலைமை  தொடர்பாக  ” திவயின”  ஞாயிறு பத்திரிகை   அவரை  தொடர்பு கொண்ட வேளை அவர் இவ்வாறு  தெரிவித்தார்.  கீழே  வருவது  அவருடனான  நேர்காணல்  ஆகும்

கேள்வி :  நாட்டில் தற்போது  ஏற்பட்டிருக்கும்  கலவர நிலைமையை  முன்னிலை  சோஷலிஸக்  கட்சி  எவ்வாறு  பார்க்கிறது. ?

 

பதில் :  நாட்டின் பொது  முற்போக்கு  மக்கள் நினைப்பது  போலவே  எம்மிலும்   இது தொடர்பாக  பெரிய   அதிர்ச்சி  காணப்படுகிறது. இந்த  பிரச்சினையை  உடனடியாக  தீர்க்கவேண்டும்  என்ற  நிலைப்பாட்டில்   நாம்  இருக்கிறோம் . இது  முற்றுமுழுதாக  இனவாதத்தை  அடிப்படியாகக்கொண்டது.  எமது  நாட்டில்   இனவாதமானது  காலத்திற்குக்காலம்  அந்தந்த  அரசியல்  கட்சிகளின்  தேவைக்கு  ஏற்ப  வளர்த்து விடப்படும்  சூழ்நிலை  காணப்படுகிறது.

 

கேள்வி :  நீங்கள்  குறிப்பிட்டீர்கள்  இது  இனவாத  பிரச்சினை என்று . ஒவ்வொரு  இனமும்  ஒவ்வொரு  இனத்தவரை  இனவாதிகள்  என்று  குற்றம்சாட்டிக்  கொண்டுள்ளனர்.

Read more ...

2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலும் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிலைப்பாடும்

 

   தேர்தல் முடிவுகள் என்பது மக்கள் கருத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாகும் எனவும், தேர்தல் என்பது மக்கள் கருத்தை அளவிடும் கருவியாகுமெனவும் ஒரு கருத்து நிலவுகின்றது. ஆனால் அது உண்மையல்ல என்பது பகுத்தறிந்து பார்க்கும் எந்தவொரு நபரும் புரிந்து கொள்வார். நாம் வாழும் இந்தச் சமூகத்தில் ‘மக்கள் கருத்து’ என்பது மக்கள் மத்தியில் தானாகவே உருவாகிய ஒன்றல்ல. பணபலம், ஊடகபலம், குண்டர்பலம் மற்றும் அரசியற்பலத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக மக்கள் மனதை சலவை செய்யும் (மூளைச் சலவை) விடயத்தில் ஊடகங்கள் முன்னின்று உழைக்கின்றன.  சாதாரண காலங்களிலும் மக்கள் கருத்தென்பது அப்படியானதாக இருக்கும் பட்சத்தில், தேர்தல் காலங்களில் அது மேலும் தீவிரமடையுமே தவிர வேறொன்றும் நடக்காது. ஆகவேதான் தேர்தல் முடிந்த பின்பு வெளிவரும் தேர்தல் முடிவுகள் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட ‘மக்கள் கருத்தின்’ வெளிப்பாடெனக் கூற முடியும்.

   என்றாலும், தேர்தல் நேரத்திலும் அதற்கு முன்பும் நடக்கும் விசேட பரப்புரைகளின்; ஊடாக இடதுசாரிய கருத்தியலை சமூகமயப்படுத்த முடியாதென்பது இதன் கருத்தாகாது. குறிப்பிட்டளவு முயற்சி செய்தால் தேர்தலில் இடதுசாரிய அமைப்புகளுக்கும் ஓரளவு மக்கள் பிரதிபலிப்பை பெற்றுக்கொள்ள முடியும். என்றாலும், அதற்கு ஒரு வரையறை இருப்பது சம்பந்தமான புரிந்துணர்வும் வேண்டும்.

   அதேபோன்று, இடதுசாரிய கட்சிகள் தேர்தலில் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்களில் பங்கேற்பது (நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளுராட்சி நிறுவனங்கள்) குறித்து தமது நிலைப்பாட்டை அமைத்துக் கொள்ளும்போது வரலாற்றில் பெற்றிருக்கும் அனுபவங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமென்பதையும் மறக்கக் கூடாது. இலங்கையிலும், சர்வதேச அரசியலிலும் தேர்தல் மற்றும் பிரதிநிதிகள் நிறுவனங்கள் சம்பந்தமாக தலையீடு செய்வது எப்படி என்பது குறித்து தேவையானளவு உதாரணங்கள் கிடைக்கின்றன. பிரதிநிதிகள் நிறுவனமொன்றிற்காக நடக்கும் இவ்வாறான தேர்தல் களங்களை இடதுசாரிய இயக்கம் தனது அரசியல் போராட்டத்தின் பிரதான அல்லது ஒரே போராட்டக் களமாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும்.  மக்கள் கருத்தின் மீது தiலையிடுவதற்கான சந்தர்ப்பமாக அதனை பயன்படுத்த வேண்டும் என்பதோடு ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்ள முடியுமாயின் அதற்கும் முயற்சி செய்ய வேண்டும்.

Read more ...

மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வெற்றியை விட கூட்டரசாங்கத்தின் கொள்கைகள் மீதான வெறுப்பையே இத்தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன - புபுது ஜயகொட

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்றை முன்னிலை சோஷலிஸக்கட்சி இன்று (11) நடத்தியது. இதன்போது அக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் துமிந்த நாகமுவ, இந்திரானந்த சில்வா மற்றும் புபுது ஜயகொட ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் சம்பந்தமாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் சார்பில் கல்விச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம்:

“தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளிவந்திராத போதிலும் தற்போதைய தகவல்களுக்கமைய அது சம்பந்தமாக கருத்து தெரிவிக்க முடியும். சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு பெரும்பான்மையான வாக்குகள் கிடைத்துள்ளன. என்றாலும் அந்த உள்ளுராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவது யார் என்பது குறித்து தெளிவில்லாத நிலை உருவாகியுள்ளது. இப்போது நாம் பேசிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி 42 வீத வாக்குகள் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கு கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை வழங்கும் குழு பெரும்பான்மை வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பது தெரிகின்றது.

2015ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை நிராகரித்து வாக்களித்த மக்கள் ரணில் - மைத்திரி கூட்டணியிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்கள். இப்போது இந்த கூட்டரசாங்கம் நிராகரிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்போவதையே இத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இதனை மிகப் பாரதூரமான நிலைமையாகவே நாம் காண்கிறோம். 2015ல் மஹிந்த ராஜபக்ஷவை படுதோல்வியடையச் செய்த மக்கள்தான் தற்போதைய அரசாங்கத்தையும் அதிகாரத்திற்கு கொண்டுவர வாக்களித்தார்கள். நிராகரிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அந்த அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. மூன்று இளைஞர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ரத்துபஸ்வல மக்களின் போராட்டம், ரொஷான் சானக என்ற தொழிலாளர்- தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய தனியார்துறை தொழிலாளர்களின் போராட்டம், சிலாபத்தில் அந்தோனி என்ற மீனவத் தோழர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மீனவ மக்களின் போராட்டம், சானக மற்றும் சிசித ஆகிய இரு மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட கல்வி உரிமைகளை பாதுகாக்கும் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டம் ஆகியவற்றை ராஜபக்ஷ அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு அடக்கியதை நீங்கள் அறிவீர்கள்.

Read more ...

புகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்! -முன்னிலை சோஷலிஸக் கட்சி

புகையிரத தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தோற்கடிப்போம்!

தமது  சம்பளமுரண்பாட்டை  உடனடியாக தீர்க்குமாறு  வற்புறுத்தி புகையிரத  சேவைகள் பலவற்றில் உள்ள தொழிலாளர்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு செயற்பாட்டுக்கு அரச அடக்குமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

புகையிரத சங்கங்கள் நீண்டநாட்களாக தமது சம்பள உயர்வு தொடர்பாகவும், மற்றும் சம்பள முரண்பாடு தொடர்பாகவும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால்  அது தொடர்பாக அதிகாரிகளின் எவ்வித பதிலும் கிடைக்காதனால் இன்று அது வேலைநிறுத்தம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது.

தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக ஆரம்பத்திலேயே தீர்வு பெற்றுக்கொடுக்காது பிரச்சினை  வளர்க்கும் ஆட்சியாளர்கள் இந்த வேலைநிறுத்தம் காரணமாக மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்திற்கு வகை கூறவேண்டும்.

அந்த வகைகூறலோடு ஆட்சியாளர்கள் வேலைநிறுத்தத்தின் மூலம் பொதுப் போக்குவரத்து சேவை  பாதிப்படைவதைப் பாவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் மீது  அடக்குமுறையை பாவித்து வருகின்றனர்.

புகையிரத சேவையையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தல், குறித்த நேரத்திற்குள்   சேவைக்கு திரும்பாத புகையிரத தொழிலாளர்கள் சேவையை விட்டு வெளியேறியவர்களாக கருதப்படுவதாக அறிவித்தல் போன்ற அச்சுறுத்தல் தற்போது அரசாங்கத்தினால் விடப்பட்டுள்ளதோடு எதிர்வரும் நாட்களில் பாரிய அடக்குமுறையாக அது அமையும்.

புகையிரதம்  உட்பட  பொதுப் போக்குவரத்துச்  சேவை அத்தியாவசிய சேவையாக அரசாங்கத்திற்கு தெரிவது தொழிலாளர்கள் வேலைநிறுத்த செயற்பாட்டில் ஈடுபட்ட பின்னரே.

இதற்கு முன்னர் புகையிரத திணைக்களத்தை தனியார் கம்பெனிக்கு விற்கும் தீர்மானம் எடுக்கும்போது  அல்லது அரசாங்க நிதி ஒதுக்கீட்டை வெட்டிவிடும்போது அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகள்  செயற்பட்டது அத்தியாவசியதன்மையை கவனத்தில் கொள்ளாது.

தற்போது இந்த சந்தர்ப்பத்தில் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தலைவர்களிடம் எமக்கு கேட்க வேண்டியிருப்பது 2015 இல் 78 பில்லியன், 2016 இல்  58 பில்லியன், 2017 இல் 51 பில்லியன் என பொதுப் போக்குவரத்து செலவுகளை குறைத்தபோதும்,  2018 வரவுசெலவு திட்டத்தில் அது 43 பில்லியன் வரை மேலும் வெட்டப்பட்டுள்ளபோதும் அது  அத்தியாவசிய சேவையாக ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

இவைகளில் உள்ள சமூகமய அத்தியாவசிய பாவனை உள்ளது.  அந்த சேவைகள் தொடர்பாக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கு அல்ல அந்த சேவைகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் தொழில் உரிமையை இல்லாதொழிக்கவே என நாங்கள் மக்களுக்கு மீண்டும் ஞாபகமூட்டுகிறோம்.

Read more ...