Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

கொள்ளைக்கார வரவு செலவு திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

கல்வி மற்றும் மருத்துவம் விற்பனைக்கு, அநியாய வரிகள், அபதார கட்டணங்கள்.

எதிர்வரும் 17ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு, கொழும்பு பெற்றாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

வரவு செலவு திட்டத்திலுள்ள பரிந்துரைகள் சில...

• அரச சேவைக்கு புதிதாக இணைத்துக்கொள்வதை வெட்டுவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதனால், தொழில் பிரச்சினை உக்கிரமடைவது நிச்சயம்.

• அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை ஒழித்துவிட்டு அதற்காக சம்பளத்திலிருந்து தவணைப் பணம் அறவிடப்போகிறார்கள். 

Read more ...

கொள்ளைக்கார வரவு செலவு திட்டத்தை எதிர்க்க மக்களே முன் வாருங்கள்!

2017ம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை நவம்பர் 10ம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் அரசாஙகத்தின் வருமானம் மற்றும் செலவீனங்கள் சம்பந்தமான விபரங்களைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது அநேகமானோருக்குத் தெரியாது. வருடாந்த வரவு செலவு அறிக்கையானது அடுத்த வருடம்  நாட்டின் பொருளாதாரம் எந்தப் பாதையில் செல்கின்றது என்பதை விளக்குகின்றது. நாட்டின் பொருளாதாரம் செல்லும் பாதைக்கு ஏற்பவே எமது வீடுகளில் பொருளாதாரம், தனியார் பொருளாதாரம் ஆகியன தீர்மானிக்கப்படுகின்றன. இம்முறை வரவு செலவு திட்டம் காட்டியிருக்கும் பாதையில் சென்றால் எமக்கு, அதாவது, உழைக்கும் மக்களின், பணக்காரர்கள் அல்லாத எமது வர்க்கத்தின், எமது மக்களின் தலைவிதி என்னவாகும்? எமது எதிர்கால வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய படு மோசமான ஆலோகனைகள் இந்த வரவுசெலவு திட்டத்தில் அடங்கியுள்ளன. கீழ் வரும் ஆலோசனைகளை பார்த்தாலே அவற்றை விளங்கிக் கொள்ள முடியும்.

Read more ...

தோழர் குமாரின் அரசியல் உரிமையை உறுதி செய்! - சம்பா சோமரத்ன

1989 ஜேவிபி அழித்தொழிப்பிற்கு பின்னர் ஜேவிபியை மறுபடியும் கட்டியமைத்தவர்களில் ஒருவரும், குமார் குணரத்தினத்தின் துணைவியாரும் ஆன "சம்பா சோமரத்ன" அவர்கள் நாட்டு மக்களிற்கு எழுதிய பகிரங்க கடிதம் இது.

மௌனம் பிற்போக்குவாதிகளுக்கே சேவை செய்கிறது. எனவே, மௌனத்தை கலைக்கும் வேளை வந்து விட்டது வாய் சவாடல்களுக்கும், கயிறிழுத்தல்களுக்கும் மத்தியில் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமையை திறந்துவிட வேண்டும். இறுதி முடிவு மக்களிடமே உள்ளது.

இன்று அதிகாரமும், அகங்காரமும் தலைக்கேறி; சிறு கட்சிகள் தமக்கு சவாலாக இல்லையென வாய்ச்சவாடல் விடும் ஜேவிபியை பார்த்து இலங்கை இடதுசாரிய வரலாற்றை மீண்டும் கற்க வாருங்களென அழைப்பு விடுக்க வேண்டியுள்ளது. 60களில் ஜாம்பாவான்களாக இருந்த பழைய இடதுசாரியத்தின் முன்னால், சேறு பூசல்களையும் அவதூறுகளையும் தோற்கடித்து வர்க்க ஒத்துழைப்பிற்கு எதிராக, இதேபோன்று சிறு எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் ரோஹன விஜேவீர ஜேவிபியை உருவாக்கினார். சரியான வர்க்க அரசியலை கட்சியின் அரசியலாக தேர்ந்தெடுத்தார். பாட்டாளிகள் தமது உரிமைகளை வெல்வதற்கு போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாதென்பதையும், உரிமைகளை வெள்ளித்  தட்டில் வைத்து முதலாளிகள் தரமாட்டார்கள் என்பதையும் வர்க்கத்திற்கு உணர்த்தினார். வர்க்க ஒத்துழைப்பு மற்றும் மறுசீரமைப்புவாதம் என்பது பாட்டாளி வர்க்கத்திற்கு அழிவைத் தரக்கூடிய, எதிரிக்கு சேவை செய்பவையாகும் என துணிந்து அச்சமின்றி வர்க்கத்தை அறிவுறுத்தியமையால்தான், 80களில் நடந்த கொடூர அடக்குமுறையின் முன்னால் கூட கட்சியால் தளராது செயற்பட முடிந்தது.

Read more ...

குமார் குணரத்தினத்தின் குடியுரிமையினை ஏற்றுக் கொள்! - துண்டுப்பிரசுர விநியோகம் (படங்கள்)

குமார் குணரத்தினத்தை விடுதலை செய்து, அவரின் குடியுரிமையினை உறுதிப்படுத்துமாறு அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க கோரி துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் சுவரொட்டிகள் நாடு முழுவதும் இன்று முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களால் பரவலாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக யாழ் குடாநாட்டில் முன்னிலை சோசலிச கட்சியினரால் பல்வேறு பகுதிகளில் துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றதுடன், பிரதான நகரங்களில் குமார் குணரத்தினத்தின் குடியுரிமையினை  ஏற்றுக் கொள்ளக் கோரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more ...

குமார் குணரத்தினத்திற்கு அரசியல் உரிமையை வழங்க வேண்டியது ஏன்?

மத குருமார்களே, அன்புத் தாய்மார்களே, தந்தையரே, தோழரே, தோழியரே!

சட்டத்தைப் பயன்படுத்தி தோழர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமையையும், அரசியல் உரிமையையும் பறிப்பதற்கான முயற்சியில் இன்றைய கூட்டாட்சி ஈடுபட்டு வருகிறது. இலங்கையில் பிறந்து வளர்ந்த, கல்விகற்ற, அரசியலில் ஈடுபட்ட தோழர் குமார் குணரத்தினத்திற்கு அவர்கள் தரும் பதில்தான் "நீ ஒரு அவுஸ்திரேலிய குடிமகன், விசா இன்றி தங்கியிருப்பவன்; எனவே, நீ நாட்டை விட்டு வெளியேற வேண்டும்" என்பது. அவரை நாடுகடத்த எத்தனிப்பது அவரை மட்டும் பாதிக்கக்கூடிய விடயமல்ல. அதனூடு எதிர்காலத்தில் இந்நாட்டுத் தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாயத் தலைவர்கள், மீனவர் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர் தலைவர்கள் போன்றோர் மீதான எதிர்கால சவாலின் அறிகுறிகள் தென்படுகின்றன.

Read more ...