காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையும் இனவாத பொறியிலிருந்து மீள்வதும்
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
17 Sep 2016
- Hits: 919
காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலம் தொடர்பில் முன்னனி சோசலிச கட்சியின் நிலைப்பாடு.
காணாமல் போனவர்கள் தொடர்பான காரியாலய சட்டமூலம் என்ற பெயரில், காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணை செய்வதற்கான சட்டமொன்று 2016 ஆகஸ்ட் 23-ம் திகதி சபாநாயகரின் கையெழுத்துடன் சட்டமாக்கப்பட்டது. இது 2016 மே மாதம் 24-ம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு, கெபினட் அனுமதியுடன் ஜூன் மாதம் 22-ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்த சட்டமூலமாகும். இதற்கான வாக்கெடுப்பானது ஆகஸ்ட் மாதம் 11-ம் திகதி பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் இனவாத அடிப்படையிலான பலமான எதிர்ப்புக்களின் மத்தியில் நடந்தது. அன்றைய தினமே சட்டமூலத்திற்காக வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும், அந்த விவாதம் தொடர்பான சட்டமுறையை அறிந்து கொள்வதற்கும் இன்னும் கால அவகாசம் தேவை என்பது எதிர்க்கட்சி அணியின் சில உறுப்பினர்களின் எண்ணமாக இருந்தது. எது எப்படி இருப்பினும் அரசாங்கத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சியினரதும், சிறிலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினதும், எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினரினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் ஆதரவுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
"துயரத்திற்கு அப்பால்" விவரணப்படம் வெளியீடு (படம் இணைக்கப்பட்டுள்ளது)
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
01 Sep 2016
- Hits: 1066
"துயரத்திற்கு அப்பால் - இலங்கையின் ஜனநாயகம் தொடர்பான அனுபவங்கள் மூன்று" விவரணப்படம் இன்று 01-09-2016 கொழும்பு மாவலி நிலைய கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில் மக்களுக்காக போராடிய நான்கு தமிழர்கள் பற்றிய விவரணப் படம் இது. இந்நிகழ்வில் ஜேர்மன், கியுபா, சீனா தூதரக பிரதிநிதிகள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பல மனித உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆவணப்படம் இலங்கையில் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து மூன்று சம்பவங்களை உதாரணமாக முன்வைத்து விபரிக்கின்றது.
அரசியல் கைதிகள் இல்லாத நாட்டில், காணாமல்போனவர்களை தேடுவது எவ்வாறு?
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
20 Aug 2016
- Hits: 793
காணாமல் போனவர்கள் தொடர்பில் ஸ்தாபிக்கவிருக்கும் காரியாலயம் சம்பந்தமாக முன்னிலை சோஷலிச கட்சியினர் தமது கருத்தை தெரிவிப்பதற்காக ஊடக சந்திப்பு ஒன்றை கடந்த 17 ம் திகதி மாலை ராஜகிரிய எம் .டி.டி. ஆர் மண்டபத்தில் நடாத்தினர். இவ் ஊடக சந்திப்பில் முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக மற்றும் அரசியல் குழு உறுப்பினர் சமீர கொஸ்வத்த ஆகியோர் பங்குபற்றினர்.
இங்கு சேனாதீர குணதிலக கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் போனவர்கள் தொடர்பில் தற்போது உருவாகி இருப்பது பிரச்சினையை விட்டு விலகி செல்லும் கருத்தாடலே. நாங்கள் நினைக்கிறோம் உண்மையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் கலந்துரையாடல் இந்த நாட்டு மக்களிடையே ஏற்பட வேண்டும்.
''துயரின் விளிம்பில்" வீடியோ விவரணம் வெளியீடு
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
26 Aug 2016
- Hits: 940
பிரியமான சகோதர, சகோதரிகளே...
''துயரின் விளிம்பில் - இலங்கையின் ஜனநாயகம் தொடர்பான அனுபவங்கள் மூன்று" என்ற தொனிப்பொருளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் வீடியோ விவரண அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி (01.09.2016) காலை 10.00 மணிக்கு மகாவலி நிலைய கேட்போர் கூடத்தில் வெளியிடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இனவாதம் என்பது ஒரு போதைப் பொருள். சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
23 Jul 2016
- Hits: 1246
கடந்த 16ம் திகதி சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் நடந்த மோதல் சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சிகளும், தனி நபர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளர். அதோடு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட விடயத்தில் தலையீடு செய்ய அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தோழர் துமிந்த நாகமுவ ஊடக சந்திப்பின்போது கூறிய கருத்துக்கள்.
“யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு வடக்கில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் தென்பகுதி மாணவர்கள், விஷேடமாக சிங்கள மாணவர்கள உள்நுழையத் தொடங்கினர். இந்த நடைமுறை நான்கு வருட காலமாக இருந்து வருகின்றது. யாழ். பல்கலைக்கழக சூழுலுக்குள் இருந்தே அனைவரும் இது குறித்து பேசுகின்றனர். நாம் இந்த உரையாடலை தொடங்குவதற்கு முன்பு ஒரு விடயத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.