Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

உரிமை கிடைத்ததா ஒடுக்குமுறை ஒழிந்ததா?

இலங்கையின் 66வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த 66 வருடங்களை திரும்பிப் பார்போமானால் இந்த நாட்டின் சகல மக்களிற்கும் சுதந்திரம் மறுக்கப்பட்டு அவர்கள் ஆளும் வர்க்கத்தால் தொடர்ச்சியான அடக்குமுறைக்கு உள்ளாகி வருவதனையே காணலாம்.

Read more ...

அமெரிக்காக்காரன் ஜெனீவாவில் புடுங்குவான் என்றார்கள் பிழைப்புவாத தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள்!

ஈராக் போருக்கு முன்பு அந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக அமெரிக்க அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டது. மேற்குநாடுகளின் ஊடகங்களில் அமெரிக்க மந்திரிகள் உலக சமாதானத்திற்கான போர் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று ஊளையிட்டார்கள். பிரித்தானியாவின் தொலைக்காட்சியான சனல் 4இல் அப்போது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கொண்டோலீசா ரைஸ் அப்படியான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது யாழ்ப்பாணம் சென்று வந்த ஜோன் சிநோ (John Snow) தான் நிகழ்ச்சியை தொகுத்து நடத்தினார்.

கேள்வி நேரத்தின் போது ஒரு சோமாலியப்பெண் சொன்னார். "நான் பெரிதாகப் படிக்கவில்லை உலகத்து அரசியலும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும் உலகத்தின் முதலாவது பெரிய பயங்கரவாதி அமெரிக்கா தான். நீங்கள் தான் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக மற்ற நாடுகளுடன் போர் செய்திருக்கிறீர்கள்.

Read more ...