Wed02242021

Last updateSun, 19 Apr 2020 8am

இப்போதாவது காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடு!

இற்றைக்கு 11 மாதங்களுக்கு முன்பு ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்கப்படும்போது எமது நாட்டில் ஆயிரக்கணக்கான குடிமக்கள் காணாமல் போயிருந்தனர். தமது பிள்ளை- அல்லது கணவர்- அல்லது மனைவி, தாய், தந்தை பற்றிய தகவல்களைத் தேடி இராணுவ முகாம்களுக்கு அலைந்து திரிந்து கதறியழும் மனிதர்களின், பெண்களின் கண்ணீரால் இந்த வடக்கு தீபகற்பம் நிரைந்து வழியுமளவிற்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.

தேடிச்சென்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு கிடைத்த பதில்
"அப்படி ஒருவரை நாங்கள் கைது செய்யவில்லை"  என்பதுதான்.

அது மாத்திரமல்ல, காணாமலாக்கப்பட்ட தமது உறவினருக்காக மெழுகுவர்த்தி ஏற்றவும் வாய்ப்பளிக்கவில்லை. முழு வடக்கு கிழக்கையும் இரும்பு சப்பாத்தால் மிதித்துக் கொண்டே ராஜபக்சக்கள் தமது ஆட்சியை நடாத்திச் சென்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க போன்றோர், காணாமல் போன சகலரினதும் தகவல்களை வெளியிட்டு, அவர்களது குடும்பங்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதாக வாக்குறுதியளித்தனர். அன்று அவ்வாறு வாக்குறுதியளித்தவர்களின் ஆட்சிதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. என்றாலும், இந்த நல்லாட்சிக்காரர்கள்  யுத்தத்தினால் துன்பத்திற்காளான எங்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றார்கள். கடந்த ஆட்சியாளர்களைப் போன்றே இன்றைய ஆட்சியாளர்களும் தமது காணாமல் போன உறவினர்களுக்காக ஒரு விளக்கையாவது ஏற்ற வடக்கு மக்களை அனுமதிப்பதில்லை. கைது செய்யப்பட்ட சில நபர்களை வழக்கு தொடுக்காமல் 10 வருடங்களாக சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மஹிந்த ஆட்சியை விரட்டியடிப்பதற்காக லட்சக்கணக்கான வடபுல மக்கள் வரிசையில் நின்று வாக்களித்தமையால் தான் இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கட்டில் அமர்ந்திருக்கின்றார்கள். வாக்குகளை பெறுவதற்கு மாத்திரமே அவர்கள் வடக்கு மக்களின் பிரச்சினையை ஏலமிட்டார்கள் என்பது இப்போது வெளிப்படை.

2012ல் முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினத்தை படுகொலை செய்வதற்காகவே கடத்தினார்கள். என்றாலும், தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் எழுந்த எதிர்ப்பலைகள் காரணமாக அவரை வதை செய்து, கண்களை கட்டி தெமட்டகொட பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் விட்டுச் சென்றனர். இந்தக் கடத்தலை செய்தது பாதுகாப்புப் படையினர் அல்லவென அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஸபக்ஷ சத்தியம் செய்தார். அன்று அப்படிச் சொன்ன கோட்டாபய தமது பரிந்துரையின்படி பாதுகாப்புப் படையினர் குமார் குணரத்தினத்தை கடத்தியதாக சமீபத்தில் ஊடகங்களிடம் கூறினார். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் கோட்டாபயவை இன்னும் கைது செய்யவில்லை. வடக்கில் காணாமல் போனவர்கள் குறித்து நியாயமான விசாரணை நடக்கும் பட்சத்தில் அவர்களை காணாமலாக்கியது யார்? யாருடைய உத்தரவின் பேரில் என்பதை கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமல்ல. இந்த கடத்தல்களை செய்தது யாரென வடக்கின் பெரும்பாலான மக்களுக்குத் தெரியும்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச பிரஜைகள் செய்வதும் பொய். இன்றைய ஆட்சியாளர்கள் செய்வதும் பொய். சம உரிமை இயக்கம் என்ற வகையில் நாம் உங்களிடம் கூறுவதாவது வடக்கிலும் தெற்கிலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து "இப்போதாவது சகல காணாமாலாக்கல்கள் சம்பந்தமான உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்து" என இன்றைய ஆட்சியாளர்களை வற்புறுத்த வேண்டும். இதற்கு முன்பு அப்படிக் கூற 100 அல்லது 1000 வாய்களே திறக்கப்பட்டன. இப்போது இலட்சக்கணக்கான வாய்களை நாம் திறக்க வேண்டும். நாம் முன்னரை விடவும் அதிகமாக துனிவோடு அந்த போராட்டத்தை உயிரூட்ட தயாராகவே இருக்கின்றோம்.

இப்போதாவது சகல காணமலாக்கல்கள் குறித்து தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்து!

இப்போதாவது சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்!

சம உரிமை இயக்கம்

தொடர்வுடைய கட்டுரைகள்

கைதிகளை விடுவிக்க சட்டம் தடையாக இருக்கின்றது என்பது உண்மையா?

காணாமல் போனவர்களின் தகவல்களை உடன் வெளியிடு! யாழில் ஆர்ப்பாட்டம்

கடத்தப்பட்டுக் காணாமல் போனோரை விடுவிக்கக்கோரி யாழில் சமவுரிமை இயக்கம் போராட்டம்

போராடுவோம்.., போராடுவோம்.., எமது உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம்..!