Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

அளுத்கமவில் கலவரம் குறித்த செய்திகள் (படங்கள்)

அளுத்கம பகுதியில் கடும்போக்கு பௌத்த குழு ஒன்றுக்கும்இ அந்தப் பகுதியில் வாழும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையின் நடந்த மோதல் இன்று இடம்பெற்றது. உஜீர்தப்படுத்தப்படாத செய்திகளின் படி 7 பேர் இறந்துள்ளதாகவும் 10 இற்கு மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் அறியக் கிடக்கின்றது. இந்தப் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத்த மத குருவின் வாகன ஓட்டுனர் ஒருவருக்கும்இ சில முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் சிறு கைகலப்பு நடந்ததை அடுத்துஇ அங்கு இன்று பௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு ஊர்வலம் ஒன்றை நடத்த பொலிஸார் அனுமதி அளித்ததை அடுத்தே இந்த மோதல்கள் நடந்துள்ளன.

அளுத்கமையில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், வல்பிட்டிய பள்ளிவாசலுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்தி தெரிவிக்கிறது. பலர் காயமுற்ற நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருப்பதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவ்வுயிரிழப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு கேட்டபோது, இன்னமும் தங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

பொதுபல சேனா அமைப்பினர் முஸ்லிம்களின் பகுதிகளை நோக்கி, முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற போதே அந்த மோதல்கள் வெடித்துள்ளன.

அளுத்கமவில் இன்று நடந்த பொதுக் கூட்டமொன்றில் பேசிய பொதுபல சேனா தலைவர் கலகொட ஞானசேகர தேரோ, "ஒரு சிங்களவன் மேல் கை வைத்தால், இந்த நாட்டில் முஸ்லிம்களின் கதையை முடித்து விடுவோம்." என்று இனவெறி கக்கும் உரையாற்றி உள்ளார். அதற்குப் பிறகே, மாலையில் கலவரம் நடந்துள்ளது. 1977, 1983 ளில் நடந்த தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரங்களுக்கு முன்னரும், பலர் இதே மாதிரியான இனவெறியை கக்கினார்கள்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், இதே அளுத்கம நகரில், முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக ஸ்தாபனம் தீ வைத்துக் கொளுத்தப் பட்டது. வர்த்தகப் போட்டி, பொறாமை காரணமாக, அந்த நகரில் உள்ள சிங்கள வர்த்தகர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விடுவதாக, எரிக்கப் பட்ட வர்த்தக நிலையத்தின் சொந்தக்காரர் தெரிவித்தார்.

ஹக்கீமுக்கு அனுமதி மறுப்பு

---------------------------------------------------

அளுத்கம நிலைவரம் தொடர்பில் நேரில் கண்டறிவதற்காக அங்கு சென்ற அமைச்சர் ரவுப் ஹக்கீம் கலவரப் பகுதிகளுக்கு உள்நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

இதேவேளை ,பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா அங்கு சென்று நிலைமைகளைக் அவதானித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

இந்த சம்பவத்தினை சார்ந்த செய்திகள்:

முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக் கொடுக்க தாம் தயாராக இருப்பதாகவும் முஸ்லிம் இனவாதத் தலைவர்களையும் அந்த வகுப்புகளுக்கு வருமாறும் பொதுபல சேனா அழைப்பு விடுத்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பு கடந்த செவ்வாயன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டிலே அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாம் ஒருபோதும் முஸ்லிம்களின் விடயத்தில் கடுமையாகச் செயற்பட்டதில்லை. முஸ்லிம் தலைவர்கள் எமது பொறுமையைப் பரிசோதிக்கிறார்களா என்ற பிரச்சினை எமக்கு உள்ளது.

பௌத்தர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள அநீதிகளை நீக்குவதற்கு இந்நாட்டின் உயர் இடமோ உயர் நிலையிலுள்ளவர்களோ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

********************

நாட்டுத் தலைமையை குற்றவாளியாக காண்பிக்க முஸ்லிம் காங்கிர ஒருபோதும் துணைபோகமாட்டாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்

நாட்டுத் தலைவரை குற்றவாளியாகக் காண்பிப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணையாகமாட்டாதென அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கட்சியின் 25வது பேராளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார்.

மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியதாவது :-

நாட்டில் ஆங்காங்கே முளைவிடுகின்ற இனவாத, மதவாத செயல்களை குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை மு. கா. அவதானமாக நோக்குகின்றது. ஒருசிலரின் வீறாப்பு அறிக்கைகள், முரட்டுச் சம்பவங்கள், மத நிந்தனை காரணமாக ஒட்டுமொத்த சமூகத்தை குறைகூறுவது புத்திசாதுர்யமாகாது.

சிறு சிறு அசம்பாவிதங்களுக்காக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென்று கோருவதும் பொருத்தமான கோரிக்கையாகாது. நாட்டில் எங்கோவொரு மூலைக்குள் முஸ்லிம்களுக்கு எதிராக அநீதி நடந்தால் சிலர் மு. கா. வை விமர்சிக்கின்றனர். கட்சியை வேரோடு வீழ்த்த முயற்சிக்கும் சிலருக்கு பொதுபலசேனாவின் செயற்படுகள் துணை போகின்றன. ஆனால் எமது கட்சி ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் நம்பியுள்ளது.

எமக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கின்றோம். இதற்காக அரசாங்கத்தின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்ற நோக்கில் நாம் செயற்படுகிறோம். ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் எந்த நேரத்திலும் பாதுகாக்க மு. கா. தயாராகவுள்ள நிலையில் முஸ்லிம்களை பாதுகாக்க அரசாங்கமும் தயாராக வேண்டும். எமது நாட்டுத் தலைவரை குற்றவாளியாக காண்பிக்கும் எத்தகைய முயற்சிகளுக்கும் மு. கா. ஒருபோதும் துணைபோகமாட்டாது என்றும் தெரிவித்தார்.

*****************************