Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்!

இது,  இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள் எதிர்ப்பு உருவாகியுள்ளதருணமாகும்அதற்கான ஆரம்பம் இலங்கையில் முதலாவது தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து உயர்கல்வியைவியா பாரப்பண்டமாக ஆக்கும் முயற்சியோடு தொடங்கியது. இலங்கை அரசாங்கத்திற்கு கடந்தவருடம் 1.5 மில்லியன் டொலர் கடனை வழங்கிய சர்வதேச நாணயநிதியம் விதித்த நிபந்தனைகளில் சமூக பாதுகாப்பு சேவைகளை வர்த்தகச் சந்ததைக்கு திறந்துவிட வேண்டுமென்பது முக்கிய இடத்தை வகிக்கின்றதுஇலங்கையில் மாலம்பேபிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரி அதற்கு அத்தியாவசியமான சட்டபூர்வ நிபந்தனைகள்எதையும் பூர்த்திசெய்யாமல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன்இலங்கை மருத்துவசபை அதன் பட்டத்தை ஏற்றுக் கொள்வதை நிராகரித்துள்ளதுஇந்தபட்டத்தைவிற்கும் நிறுவனத்தைரத்துச் செய்யுமாறும்இலங்கையில் கல்வி – சுகாதாரசேவை உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளை தனியார்மயப்படுத்தும் திட்டத்தை சுருட்டிக்கொள்ளுமாறும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் இப்போது ஏகாதிபத்திய நவதாராளமய திட்டங்களுக்கு எதிரான பரவலானமக்கள் இயக்கமாக ஆகியுள்ளதுஅரசாங்கம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதற்குப் பதிலாகஅதற்காகப் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள்பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்மருத்துவர்கள்,  ஏனையசுகாதார  ஊழியர்கள்தொழிற்சங்கமற்றும் அரசியல்கட்சிகள்  மீதுஅடக்குமுறையை கட்டவிழ்த்து விட தீர்மானித்துள்ளது. 

இப்போராட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அரசாங்கம் மாணவர் இயக்தோடு பேசி இப்பிரச்சினைக்கு தீர்வுகான இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுடன், பின்னர் பல்கலைக் கழக விரிவுரையாளர்களுடன் இது குறித்து பேசுவதையும் நிறுத்தியது. சமீபகாலம் வரை மருத்துவர்களின் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும் அவர்களுடனான இணக்கப்பாட்டை மீறி மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஆறு மருத்துவ பீடங்களுக்கு முன்பாக மாணவர்கள் அமைதியான முறையில் சத்தியாக்கிரகத்தை தொடங்கி 500 நாட்களும் கடந்துவிட்டன. இலங்கையின் சகல மருத்துவ பீடங்களினதும் மாணவ மாணவியர் ஜனவரி மாதத்திலிருந்து 6 மாதகாலமாக தொடர் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் பல்வேறு சந்தரப்பங்களில் ஒரு நாள் அடையாள பணி பகிஷ்கரிப்பில ஈடுபட்டதோடு சில சந்தர்ப்பங்களில் ஏனைய துறைகளைச் சார்ந்த தொழிற் சங்கங்களும் பணி பகிஷ்கரிப்போடு இணைந்தனர். பல்கலைக் கழக விரிவுரையாளர்களும் அடிக்கடி இந்தப் பிரச்சினை தொடர்பில் ஒருநாள் அடையாள பணி பகிஷ்கரிப்பிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர் என்றாலும் எந்த நடவடிக்கைக்கும் அரசாங்கம் பதிலளிக்கவில்லை. இந்த நிலைமையில் ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்ததோடு அரசாங்கம் அவ்வார்ப்பாட்டங்களை பயன்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சக்திகளின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துள்ளது.

அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர், அனைத்து பல்கலைக் கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உட்பட மாணவர் செயற்பாட்டாளரகள் 5 பேர் கைது செய்யப்பட்டு பிணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், மேலும், 100க்கும் அதிகமான பல்கலைக் கழக மாணவ மாணவியர்களை கைது செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதே போன்று, அரச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்களையும் கைது செய்யப்போவதாக அரசாங்கம் அச்சுறுத்தி வருகின்றது. கடந்த ஜூன் 21ம் திகதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரை ஈடுபத்தி மிருகத்தனமாக மாணவர்களை தாக்கியதால் 96 மாணவர் மாணவியர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். பல்கலைக் கழக மாணவர்களின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்த நடைப்பயணத்திற்கும் சத்தியாக்கிரகத்திற்கும் இவ்வாறு அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அது மட்டுமல்ல, இப்பிரச்சினை தொடர்பில் போராடும் எந்தவொரு பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்ற அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும். ஜனநாய உரிமைகள் தொடரபில் கோசங்களை எழுப்பி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இப்போது பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்து, மாணவர்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை கட்டவிழ்த்துள்ளது.

சமூக பாதுகாப்பு சேவைகளில் முக்கியமானதாக உள்ள கல்வி, சுகாதார சேவை போன்ற சேவைகளின் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகி மூலதனம் முதலாளிகளின்; இலாப நோக்கத்திற்காக இவற்றைப் பலியிடும் திட்டம் தொடர்பிலும் அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமானதும் ஜனநாயகத்திற்கு முரணான நடவடிக்கைகள் தொடர்பிலும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளின் எதிர்ப்பை வெளியிடுவதுடன் அடக்குமுறையை உடனடியாக நிறுத்தி மக்கள் உரிமைகளை உறுதி செய்யுமாறும், கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்துகின்றோம். அதற்காக, உங்களது தோழமையுடனான ஒத்துழைப்பை எதிர்ப்பார்கின்றோம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற ஏகாதிபத்திய நிதி அமைப்புகளின் ஊடாக உலகம் முழுக்க எடுத்துச் செல்லும் இந்த நாசகார வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்காகவும் அவ் ஏகாதிபத்திய நவ தாராளமய வேலைத் திட்டத்திற்கு எதிராகப் போராடும் சக்திகளினது ஜனநாய உரிமைகளை பறித்து அவர்கள் மீது அடக்குமுறை தொடுப்பதை தடுப்பதற்காகவும் சர்வதேச ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதற்கு நீங்களும் இணையுங்கள்.

இலவசக் கல்வியிலும் இலவச சுகாதாரத்திலும் கை வைக்காதே!

சைட்டம் உட்பட பட்டக் கடைகளை மூடு!

தொழிற் சங்கங்கள் மற்றும் மாணவர் அடக்குமுறையை நிறுத்து!

கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்!

 

இலங்கையர் அமைப்புகளின் ஒன்றுகூடல் - இத்தாலி