Fri01152021

Last updateSun, 19 Apr 2020 8am

கலை-இலக்கிய அரங்கம் – (பகுதி 2)

இக் குழப்பங்களுக்கு மத்தியில் முருகபூபதி அவர்கள் மாநாடு பற்றிய தற்போதைய நிலையை விளக்க வேண்டும், அதன்பின் எம் மதிப்பீட்டை முன்வைப்போம்!

அதற்கு முன்பாக  எஸ்.பொ.என்கின்ற (அறுபது ஆண்டு) பழம்பெரும் எழுத்தாளர் பற்றிய கடந்த கால செயற்பாடுகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம். இதை இவர் எழுதிய ‘வரலாற்றில் வாழ்தல்’ எனும் நூலுக்கு பெர்லின் தமிழரசன் அவர்கள் எழுதிய விமர்சனத்திற்கு ஊடாக பார்த்தால் போதுமென நினைக்கின்றேன். மிக நீண்டதுதான்!. ஆனால் இன்றைய இளம் சந்ததியினர், இவரின் அடியுண்ட—கலை-இலக்கிய அரசியலின் ஓட்டை—ஒடிசல்களை அறிய வேண்டும்!

அந் நோக்கில் இதை கூடியளவு சுருக்கிப் பிரசுரிக்கின்றோம்.

தமிழரசன் குறிப்புகள்!

எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் நூல் விமர்சனம்:

எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொ.வின் ‘வரலாற்றில வாழ்தல்’ எனும் நூல் இரண்டு பாகங்களில் வெளி வந்துள்ளது. தமிழ் மக்களின் அரசியல் என்பது எதிர்க் கருத்தற்ற அரசியல், இராணுவப் பயங்கரவாதமாய் புலிப்பாசிச சர்வாதிகார ஒழுக்கமாய் மாறியுள்ளநிலையில் எஸ்.பொ.வின் இந்த நூல் சுயசரிதைபோல சுயம் பேணுபவரின் தர்க்கமாக தத்துவம், அரசியல், இலக்கியம் சகலதையும் மழையாகப் புரிந்து கொள்ளும் உரிமையை தன்னிடத்தே கொண்டதாய் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் கருத்துக்கும் பின்னே அவர்கள் வாழும் வர்க்கமும் அதன் பொருளாதார விருப்பம்களும், அது சார்ந்த சமூகப் பார்வையும் இருக்கும். அதன் படி எஸ்.பெறுப்புக்கும் விதிக்கப்பட்டுள்ளது. எஸ்.பொ.இன் எழுத்தில் கடந்த  காலத்திய அல்லது நடப்பின் எமது மதிப்புகளைச் சரி பார்த்துக் கொள்ள முடியாது. அவரைத் தவிர வேறு மனிதர்களின் இதயத் துடிப்பை எம்மால் கேட்க முடியவில்லை. அவர் தன்னைத் தானே கௌரவிக்கிறார். விசுவாசித்து எழுதுகிறார். எஸ்.பொ. எழுத்துக்கள் அழகுணர்வோ, மென்மையோ அறியாதவை. அவை நயமற்ற கந்தக எழுத்துக்களாகும். அவரது அறிவெல்லையுள் தீர்க்கப்பட்ட முடியாத விடயங்கள் பல் தொகையாகப் பெருகி அவரைத் துரத்திச் செல்கின்றன. எனவே அவர் அடிக்கடி தப்பியோடுகிறார். மறைகிறார் வேடம் தரிக்கிறார். மிகைச் சொற்களைக் குவித்து வாசிப்போரை அலைக்கழிக்கிறார். இலக்கியவாதி என்ற வகையிலாவது அவரிடம் அழகியல் அனுபவமோ உயர் கலை தகுதியோ இல்லை. ஆழ்ந்த மனித இருப்போ மக்கள் சார்ந்த அனுபவச் செறிவோ இல்லாத வெறும் நேர்க்காட்சிவாதி, அவர் காண்பதைக் கேட்பதை கண்டுயிர்க்கத்தெரியாத சிறந்த உணர்வுகளைத் தூண்டத் தெரியாத மனிதராவார். தகவல்றிந்த வாசனையாளன் முன்பு எழுத்துக் குழப்படி செய்யும் தமிழ் தேசியவாதச் சண்டியராகிறார்.

தனித்தனி மனிதர்கள் அம்சங்களில் தங்கியிருப்பதாய் கூறித் தேடத்தொடங்குவார்கள். மனிதர்கள்வர்க்க சமூகப் பொருளாதார விதிகளின் கட்டளைகட்கு ஏற்பவே செயற்படுகிறார்கள். படைத்து உலாவவிடப்படுகிறார்கள் என்று இவர்கள் விளங்கமாட்டார்கள். புற உலகக்காணிகள் மனிதர்களின் அக உலகை ஆட்சிபுரிவதை ஆராயமுடியாதவர்கள் சமுதாயத்தைவிட்டு சமூக எழுச்சியற்ற காலங்களில் மாக்சியம் தேங்கிவிட்டதாகவும் தத்துவம் கண்ணியத்தை இழந்துவிட்டதாயும் தான்தோன்றும் எஸ்.பொ.போன்ற எழுத்து லும்பன்கள் தோன்றி தாமே அனைத்துக்கும் உரியோம் என்று வாதிடுவார்கள் நல்லதும் தீயதும் கதாநாயகனும், வில்லனும் தனித்தனி மனிதர்களின் அம்சங்களில்மனிதர்களின் அக உலகை பண்படுத்த முயற்சிக்கிறார்கள். இது கடினமான சித்தாந்தத் தொந்திரவுகள் இல்லாத பிரதேசமாக இருக்கிறது. எனவே இலகுவாக அங்கு இவர்கள் குடிபுகுந்துகொள்கிறார்கள் பைபிளும், பகவத்கீதையும், பழந்தமிழ் நூல்களும், இவர்கட்கு ஒத்த அம்சமுள்ளதாய் தெரிகிறது. மாக்கியத்தையும் அதன் பொருள்முதல்வாத மற்றும் இயக்கவியல் அம்சங்களைவிட்டு வெளியேற்றி ஆன்மீகத்துக்கு அருகில் அகவயவிசாரனைகட்கு உதவியாக நிறுத்தமுடியும் என்று நம்புகிறனர். இலங்கையில் எஸ்.பொ. மு.பொன்னம்பலம் முதல் தமிழ்நாட்டில் ஞானி, ஜெயமோகன் வரை இதற்கே முயல்கிறார்கள் இவர்கள் வெற்றிகரமான முதலாளியப் பொருளாதாரச் செழுமைக் காலத்தில் தோன்றி அடுத்துவரும் முதளாய நெருக்கடிகளில் காற்றில் கரைந்து இருந்த இடம் தெரியாமல் போவார்கள். மேசைகளிலும், எழுத்துக்களிலும் புதையுண்டுபோன இந்த முதலாளித்துவ சித்தாந்த அறிவாளிகள் அவர்களது கவனக்குறைவாலேயோ, திறமைமிகுந்தவர்களாக இல்லாததாலேயே இவை நிகழ்வதில்லை முதலாளித்துவ அறிவுத்துறை இத்தகையவர்களையே உற்பத்தி செய்கிறது. இத்தகையோர் தம்மையறியாமலே, இடதுசாரிச் சொற்றொடர்களுடன் அதற்கு தம்மை ஒப்புக்கொடுப்பார்கள். நடப்பிலுள்ள முதலாளிய சிந்தனை வலிமைகயை சகல திசைகளிலும் வெல்லும் பக்குவம் இல்லாதவர்கள் இலகுவாக இதற்கு ஆட்படுவார்கள் ஆனால் தாம் தூய சுதந்திர சிந்தனைகளால் இயங்குவதாக இவர்கள் சபதம் செய்வார்கள்.

கட்சி அமைப்பு, தத்துவம் இவைகளை நிராகரி;த்து இவர்கள் தனிமனிதப் பெருவெளியில் நின்று ஓங்காரமாக அலறுகிறார்கள். பொருளாதார வஞ்சனையுடைய முதலாளித்துவத்தில் மனிதர்களின் அக உலக அலைச்சல் அதிகம். பொருளாதார மீட்சிக்காக மக்கள் தம் எல்லைக்குட்பட்ட எல்லா வழிகளிலும் நுழைவார்கள். விடிவு தேடித்திரிவார்கள். எஸ்.பொ போன்றவர்கள் புற உலகின் அல்லல்கட்டு தீர்வுகளை அகவுலகத் தீர்மானங்களால் நிiவேற்றுகிறார்கள். சமுதாயத்தின் மேல் பரிவுணர்ச்சியோ, மனித அனுதாபமோ இல்லாத தனியுடமைச் சமூகத்தில் அவமானப்படுத்திச் சிதைக்கப்பட்ட கோபம் கொண்ட மனிதர்களோ உலாவுகின்றனர். பண்பழிந்த பிணமான மனிதர்களே இங்குள்ளனர். இவர்கள் புத்தர், யேசு, போதனையாலோ, காந்தி, ராதாகிஷ்ணன் போன்ற முன்னுதாரணங்களாலோ, கருத்துமுதல்வாதக் கற்பனைகளாலோ, நற்லொழுக்கப்போதனைகளாலோ மாறுவதில்லை. புற உலக உறவுகள் மனிதத்தன்மை படைத்தiவாக மாறாமல் அக உலகு பண்புடையதாக மாறாது. பகவத்கீதை, காந்தியம், விவேகானந்தர், தமிழ்த்தத்துவம் சகலதும் ஒருங்கே வாய்ந்த எஸ்.பொ.வின் அக உலகம் ஏன் இத்தனை அழுக்காறு மனித வெறுப்பும் படைத்ததாகவுள்ளது? ஏன் தன்னைத்தவிர எல்லோரையும் மனிதப்பதர்களாக எண்ணுகிறது. கைலாசபதியை, இடதுசாரிகளை மட்டுமல்ல எல்லோரையும் முந்திச் செல்லும் உளவியல் ஏன் தோன்றுகிறது? தன்னைவடக்கெட்டிக்காறர் சிறந்தவர் என எவரையும் அவர் ஒப்பவில்லை அவர் எதிரிகள் எல்லாவிதமான மனிதப் பெறுமானத்தையும் இழந்து போய்விடுகிறார்கள். எஸ்.பொ. மனித நடத்தைகளை இலக்கியத்திற்குரிய அழகியல் விதிகளின்படியோ, சமுகவியல் இலட்சணங்களுடனோ ஆராய்வதில்லை சகலதிற்கும் அவர்களது சொந்த தனிமனிதவாத அளவு கோலையே பயன்படுத்துகிறார்.இவர் எழுத்து ஒரு உணர்வற்ற சுயநலமியின் நேரடி அஞ்சல்முறையாகிறது.

சமூகத்தின் பல நூற்றாண்டுத் தப்பபிப்பிராயங்கள் எமக்கு பழகிச் சலித்த கிளர்ச்சிதராத பழம் கருத்துகளே எஸ்.பொ.வுக்கு துணை நிற்கிறது. வர்க்கம் என்றால் என்ன என்று அதன் நீள அகலம் தெரியாத எஸ்.பொ.தான் கார்த்திகேயனிடம்; மாக்சியம் பயின்றேன் அக்காலத்தில் நான் பயங்கரமான கொம்யூனிஸ்ட் என்று இசைகிறார். சில சுலோ கம்களைத் திரும்பிச்சொல்வதோ பொருளறியாமல் கலைச்சொற்களைப் பாவிப்பதோ மாக்சியவாதியாக இருப்பதற்கு அடிப்படை என்றால் எஸ்.பொவும் மாக்சியவாதிதான். ஏகாதியத்தியம், மூலதனம் உலகம்சார்ந்த பொருளாதாரச் செயற்பாடு, இவைபற்றிச் நாம் எஸ்.பொ.வோடு கட்டாயமாக உரையாட முடியாது அவர் ஆசிரியர், எழுத்தாளர், என்பதால் இந்த கலைச்சொற்களின் விளக்கத்தைக் கொண்டிருப்பார். உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகளை விளக்கி வைத்திருப்பார் என்றெல்லாம் நாம் நம்ப எந்த சின்ன தரவுகூட அவர் எழுத்தில் கிடையாது. தான் இடதுசாரியாக இருந்து சனங்களோடும் கட்சியோடும் ஏதோபட்டுப்பழுத்து இறுதியாக கொம்யூனிஸ்டுகளால் ஏமாற்றப்பட்டதான ஒரு காட்சிப்பதிவை அவர் எமக்குக் காட்டுகிறார். ஆன்மீகத்துள்புகுந்துவிட்டு ஏதோ பிரபரஞ்சம் தழவிய அறிவையும் பார்வையும் பெற்றுவிட்டதாய் அவர் எழுத்துக்கள் வேசமிடுகின்றன. மாணவப்பருவத்தில் கொஞ்சக்காலம் தேசாபிமானிவிற்றதாலோ, கடவுளை நம்பமறுத்ததாலோ ஒருவர் மாக்சியவாதியாக ஆவதில்லை, பாசிஸ்ட் பிரபாகரன் கூட தொடக்ககாலத்தில் இளம்பருவத்தில் இடதுசாரிகள் கூறும் கருத்துக்கள் அடிநுனி தெரியாமல் ஆடாமல் அசையாமல் நின்று கேட்டதுண்டு எஸ்.பொ. சோசலிசம் பேசி இவர்காலத்தில் இடதுசாரிகள் எவரும் கேட்டதில்லை. எம்.சி.சுப்பரமணியத்தின் மச்சான் என்ற அறிமுகத்தை வைத்துக் கொண்டு எஸ்.பொ.விலாசமெழுப்பியனதத்தான் எல்லோரும் நினைவில் வைத்துள்ளார்கள். கொம்யூனிஸ்ட் கட்சியில் அப்போ இருந்தவர்கள் வெரும் இவரைத் தோழராகக் கருதியதாகவே கட்சியில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராக இருந்து செயற்பட்டவராகவோ எவரும் கருதவில்லை. 14 வயதிலேயேதான் நாத்திகவாதியாகி விட்டதாய் எஸ்.பொ கூறுகிறார். ஆடு, மாடுகள்கூடச் சீவியம் முழுக்க நாத்திவாதிகள்தான். இவர் அப்போ நாத்திவாதியாக இருக்க திராவிடர் கழகம், தி.மு.க என்பவை மட்டுமே போதும் அதற்கு இடதுசாரி என்ற தகுதிகள் தேவைப்படாது. மாக்சியவாதிகள் கடவுள் மறுப்பை தனித்து வெளியிடுவதில்லை. நாத்திகம் தனியே பேசுவதில்லை கடவுள் நம்பிக்கையின் தோற்றம் சார்ந்த வரலாற்று மூலம்கள் அவர்கட்குத் தெரியும்.

ஆனால் தற்கால நவீன எஸ்.பொ.வோ தனது இளமைக்காலக் கடவுள் மறுப்புக்கொள்கையை தனது இளம்பிள்ளை வயதுக் கோளாறாகவே புரிந்துகொள்கிறார். அவரது ஆன்மீகமானது உயர்வானது காந்தி, யேசு, ராதாகிருஷ்ணன், விவேகானந்தர், சங்கராச்சாரி என்று எல்லோரையும் வழிபாட்டு நிலைக்குக்கொண்டு வருகிறது. இவர்களிமிருந்து பொறுக்கிய அன்பு, அகிம்சை, தியானம், வேதம்கள் மூலம் மனித அக உலகு தூய்னையுறும் என்று புரிந்துணரச் செய்ய முற்படுவதுடன் தான் “மாக்சியத்தையும் வேதமாய்” மதிப்பதாய்க் கூறுகிறார். ஆக மாக்சியம் இருக்கு, சமர், யாமம், சம்பந்தருடைய தேவாரம் போல் வேதமாகிவிடுகிறது. கருத்துமுதல்வாதம். பொருள்முதல்வாதம் போன்ற பிரிவுகளின் இட்டுஇடைஞ்சல்கள் எதுவும் எமது இலக்கியப்போராளி எஸ்.பொவுக்குக்கிடையாது. மாக்சியத்தின் இரக்கமற்ற கட்சி, அதிகாரம்,தத்துவம் இவைகளைக் கழைந்து புதிய தத்துவங்களைப் புனையவே எஸ்.பொ. உயிர்த்தெழுந்துள்ளதாகவே நாம் நம்பவேண்டும் என்பதே அவரின் அவர். அவரின் ஆசையை நாம் நிதர்சனமாக்க விரும்பினால் நாம் வெட்கம் இல்லாமல் எமது பிள்ளைப்பிராய்த்து அறிவுப் பொழுதுகட்கு திரும்பிச்சென்றால் மட்டுமே சாத்தியம். எஸ்.பொ. மனிதர்களின் புற உலகின் பொருளாதார உற்பத்தி உறவுகளுடன் தொடர்பற்ற அகஉலகம் பற்றியே சிந்திக்கிறார். எம்மைச் சுற்றியுள்ள உலகை சமத்துவமாக எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கத்தக்கதாக மாற்றியமைக்காமல் மனித மனம்கள் பண்படமாட்டா சம நுகர்வும் சமவாய்ப்பும் உள்ள சமுதாயம் வராமல் மனிதர்கள் நாகரீகமும், கருணையும், அதிகார உணர்வு அற்றவர்களாகவும் மாறமாட்டர்கள். கிறிஸ்துவும், புத்தரும், சாராதூஸ்ராவும், மகாவீரரும், நபியும் போதித்துப்போதித்து மனித மனம்களை ஈரமாக மாற்றி விட்டார்களா? கடவுளை நம்பி தினம் தினம் ஒதி உணர்ந்தவர்கள் புனிதர்களாக மாறினரா? கிறிஸ்துவையும், ராமரையும் நம்பியர்கள் பாசிஸ்டுகளாக மாறிய படிப்புகள்தான் இருக்கிறது. புலிப்பாசிச இயக்கத்தலைவர் உட்பட முக்கியமானவர்கள் ஆழமான மத நம்பிக்கை படைத்தவர்கள் கிட்லர் தன்னை தீவிரகத்தோலிக்கண் எனக் கருதினான்.

எஸ்.பொ. சட்டம்பி என்பதால் சனம்களில் கற்கத்தயாரில்லை மாறாக அவர் அவர்கட்கு கற்பிக்க மட்டுமே முயன்றார் போலும். எஸ்.பொ. நினைப்பதுபோல் சமூகக்கலகம் என்பது இடதுசாரிகளின் திணிப்பல்ல அமைதியாகவுள்ள சமூகத்தை குலைப்பதுமல்ல மாறாக முதலாளியத்தின் சமூக அநீதிகளே மக்களின் கலகம்களாக வெடிக்கின்றன. தொழிலாளர்கள் புதிய சமூகமொன்றை நோக்கி மாற முயல்கிறார்கள் மாக்கியவாதிகள் கடினமான தத்துவத்தை திணிபவர்களாகத் தோன்றுவது முதலாளித்துவம் எளிமையானதும் அற்பமானதுமான கருத்துக்களாலும் சொற்களாலும் மனிதர்களை பழக்கியிருப்பதுதான்.

இங்கு தத்துவம் கடினமாய் படித்து விளங்க இயலாததாய் தோன்றுகிறது. இந்த நிலை பௌதீகத்தையோ, இரசாயனத்தையே கற்கும் ஒருவருக்குக் கூடத் தோன்றலாம். இந்தக்கல்விசார்ந்த சொற்களை விளங்கத்தவறுபவர் பௌதீகத்தையும், இரசாயனத்தையும் விளங்கத்தவறுபவராவர் அவர் மாக்சியம் ஒரு துறைசார்ந்த கல்வியாய் கற்பிக்கப்படாமையால் அதை கற்றறிவதில் உள்ள சிரமம் எஸ்.பொ. போன்ற ஆன்மீகமும், தமிழ் தேசியமும் கலந்தவர்கட்கு சாதகமாகிறது. மக்களின் தகவலின்மையை இவர்கள் தமக்குச் சாதகமாக்கிச் கொள்கிறார்கள். சகஜமாய் நிலவும் மலிந்த பழைய கருத்துக்களை பெரும் அறிவுக்கருவூலம்போல் எஸ்.பொ. போன்றவர்கள் எழுதிப் பரப்புகின்றார்கள்;. இடதுசாரிகளைப் பற்றி பயமுறுத்தும் எஸ்.பொ. முதலாளியமும், தமிழ்க் தேசியமும் தெந்தரவு இன்றி சுகந்திரமாக விடப்படல்வேண்டும் என்ற கருதுகின்றார். தமிழ்த் தேசியவாதத்துக்கோ புலிப்பாசிசத்துக்கோ எதிரான ஒரு சிறு எதிர்கருத்துதைக்கூட எஸ்.பொ. பொறுக்காதவர் என்பதுஎதைக்காட்டுகிறது. அக உலக விடுதலை பேசும் எஸ்.பொ இங்கு ஏன் தனித்தனி மனம்களின் தீர்மானங்கள் அகவிருப்புகளை எதிர்கிறார். துரோகி, காட்டித்தருவோர், ஈட்டித்தருவோர் என்று பெயர் புணர்ந்து தனி மனிதர்கட்குள்ள சிந்தனா சுதந்திரத்தை தடைசெய்கிறார். தமிழ்; மக்களின் எழுத்து, பேச்சு, கருத்து சுதந்திரத்தைப் புலிகள் போல் தடு;த்துவிட்டவர்களே இலங்கை அரசை விமர்ச்சிப்பதுபோல புலிப்பாசிஸ்டுக்களை நோக்கி ஒரு சிறு விமர்சனம் எஸ்.பொ. செய்வாரா? இங்கு தமிழ்மக்களின் விருப்புகளை புலிப்பாசிச சர்வாதிகாரம் அழித்தொழிம்பதை அவர் காணத்துணிவுபெற மாட்டர்.

ஆனால் இடதுசாரிகள் அதிகாரத்தைப் போற்றுவதாய்க் கூறும் எஸ்.பொ. முதலாளித்துவம் அதிகாரமில்லாமலா ஆட்சிப்புரிகிறது? கிறிஸ்துவின் உபதேசம்களாலும், புத்தரின் பொன் மொழிகளாலுமா அவர்கள் மக்களை ஆளுகிறார்ள்? இந்தியாவில் காந்தியின் அகிம்சையா ஆட்சி நடத்துகிறது? அவர்கட்கு, பொலிசும், இராணுவமும், உளவுத்துறையும், துவக்கும், அணுகுண்டும் ஏன் தேவைப்படுகிறது? இந்தியத்தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து, காந்திபோல் பட்டினிகிடந்து பாகிஸ்தானின் மனதை இழகப்பண்ணாமல் ஏன் இராணுவத்தை அனுப்பி யுத்தம் புரிந்தனர். நக்சலைட்டுகள் ஆயுத்தை கிழே போடவேண்டும் வன்முறையைக் கைவிடவேண்டு;ம். என்று ராஐPவ்காந்தி உண்ணா நோன்பு இருந்ததூண்டா? எனவே இங்கு முதலாளித்துவம் ஆயுதபாணியாக இருந்த கொண்டு ஆன்மிகமும் அகிம்சையும், கருணையும், ஐனநாயகமும் பேசுகிறது. இடதுசாரிகள் இதற்கு முன்பு என்ன செய்யவேண்டும் தீனியாகவேண்டும் என்கிறாரா எஸ்.பொ? பாசிஸ்ட் பிராபாகரனுக்கும், அவுஸ்ரேலியா அரசிற்கும் கொலை செய்யாதே யுத்தம் புரியாதே அதிகாரத்தை மக்கள் மேல் பிரயோகிக்காதே என்று எஸ்.பொ. முதலில் போதிக்கட்டும் அவர்கள் மாறுகிறார்களா என்று பார்ப்போம்? முதலாளியம் நிலவும்வரை சோசலிசம் எப்படி ஆயுதம் தரிக்காமலும் அதிகாரத்தைக் கைக் கொள்ளாமலும் நிலவமுடியும்?

காந்தியவாதி மார்க்கண்டன் சொற்படிதான் தான் செல்வநாயகத்தை ஆதரித்துப்பிரச்சாரம் செய்ததாக எழுதியுள்ள எஸ்.பொ. செல்வநாயகத்தை தந்தை என்று அழைக்கிறார். முதலாவதாக செல்வநாயகத்தை இடதுசாரிகள் தந்தை என்று அழைப்பதில்லை காங்கேசன்துறைத் தொகுதியில் கிராமப்புறங்களில் மக்கள் செல்வநாயகத்தை ‘கிழவன்’ என்றுதான் குறிப்பிடுவார்கள். இந்த தந்தை என்ற பட்டத்துக்கு தீப்பொறி பத்திரிகை அந்த நாளில் அடிக்காத நக்கல் இல்லை. ஆனால் எமது எஸ்.பொ.வோ தமிழரசுத் தந்தைக்கு தனயராகி தந்தை! எந்தை! என்று அழைக்கிறார். அடு;த்து செல்வநாயகம் காந்தியவாதியா? அகிம்சைவாதியா? தமிழரசுக் கூட்டங்களில் எதிர்த்துக்கேள்வி கேட்டவர்களை தந்தையின் தனயர்கள் அடித்துதுவைத்த போது எப்போதாவது எமது தந்தை அடியாதே, உதையாதே அகிம்சைநியதிப்படி ஒழுகு என்று கூறிய வரலாறு இருக்கிறதா? எஸ்.பொ.வைப் பொறுத்து இடதுசாரிச் சிந்தனைக்கும், காந்தியத்தியத்திற்கும், தமிழ்த்தேசியத்திற்கும் எந்தவிதத்தில் தொடர்பு? செல்வநாயகம் பெயருக்கு அகிம்சைபேசியபோதும் அவர் ஏகாதிபத்தியம்களின் நேரடி நபர் முக்கியமாக பிரிட்டன் தூதரலயத்தில் அவர் கட்சி ஆலோசனை நடாத்தியது. அறிவுரைகள் பெற்றது. செல்வநாயகம் மிஞ்சி மிஞ்சிப்போனால் ஒரு நாள் அதுவும் 8-10 மணி நேரமே உண்ணாவிரதம் இருப்பார். காந்தியாவது சாகப்போகிறேன். என்று பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஆட்களை வெருட்டுவார் ஆனால் நமது ஈழத்துக்காந்தியோ காந்திபோல் சாகும் வரையில் உண்ணாவிரதம் என்று சும்மா அறிவிக்கக்கூட மாட்டார். செல்வநாயகம் போன்றவர்கட்கும். ஐp.ஐp.பொன்னம்பலம், சுந்தரலிங்கம், டி.எஸ்.சேனநாயக்காவுக்கும் எந்த வித்தியாசமுயில்லை. அனைவரும் பிரிட்டனின் வளர்ப்புதான் ஒரே ஒரு வித்தியாசம் ஒரு பகுதி தமிழத்தேசியவாதமும், மறுபகுதி சிங்களத் தேசியவாதமும் பேசியது என்பதுதான். ஆனால் நமது எஸ்.பொ. தான் இடதுசாரிகட்சியில் இருந்தவர் என சொல்லிக்கொள்வாரே தவிர அவர் தமிழரசு, தமிழ்க்காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக்கட்சி, யு.என்;.பி, என்று பேதமில்லாமல் எல்லாக்கட்சி மேடைகளிலும் தோன்றிய வரலாற்றிச்சிறப்புமிக்க சந்தாப்;பவாதி. செல்வநாயகம், பொன்னம்பலம், ஜே.ஆர்.ஐயவர்த்தனா, சிறிமாவோ பண்டாரநாயக்கா, தொண்டமான், குமரசூரியர், திருச்செல்வம், காமினி திசாநாயக்கா போன்ற பலவிதக்கட்சித்தலைவர்கள் மந்திரிகளோடு ஒரே மேடையில் அமர்ந்து அவர்களை வாழ்த்திப்பேச வாய்ப்புப்பெற்ற கொள்கைக் குன்றாகும், இத்தகைய எஸ்.பொ.வுக்கு கொள்கைப்பிடிப்பு, தமிழ்த்துவம் என்பன உள்ளன என்று நாம் நம்பவேண்டும். ஆனால், இடதுசாரிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் அது துரோகமாகும் தமிழ்விரோதமாகும் என்பதை நாம் இத்தால் அறியக்கடவோம்.

இடதுசாரிகள் சேர்ந்திருந்த சிறிமா அரசு ஒரு சோசலிச அரச அல்ல மாறாக ஒரு சீர்திருத்தவாத அரசியலையுடைய முதலாளிய ஐனநாயக அரசாகும், அங்கு தனிச்சொத்துடை ஒழிக்கப்படவில்லை முதலாளிகள் இருந்தார்கள். இடதுசாரிகள் அந்த அரசில் இணைந்து சில இடதுசாரித்திசையிலான சீர்திருத்தங்களே செய்தனர். வி.பொன்னம்பலம், எம்.சி.சுப்பிரமணியம் போன்றவர்கள் தம் மட்டத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்தனர். கைலாசபதி, சிவத்தம்பி, பிரேம்ஐp, டொமினிக்ஜீவா, டானியல் போன்றவர்கள் நேரடியாக அரசோடு சம்பந்தப்பட்டிக்கவில்லை, இலக்கியம், கவிதை, எழுத்துறைகளிலேயே செயற்பட்டனர். இடதுசாரிப் போக்குகளை ஊக்குவிக்கமுயன்றனர். அவர்கள் கொமிசார்களாக நடந்துகொண்டார்கள் என்பது கயமை நிறைந்த பொய்யாகும். வெறும் சோடனை எழுத்துக்களாகம். சோசலிஸ் சமுதாய அமைப்பா அப்போ இலங்கையில் நிலவியது? இடதுசாரிக்கருத்துக்களைவிட முதலாளித்துவக்கருத்துக்கள்தான் அப்போ அதிகம் நிலவியது. எஸ்.பொ.எப்படியானவர் என்றால் 1977 தேர்தலில் இடதுசாரிகள் தோற்க வேண்டும் யு.என்.பி வெல்ல வேண்டும் என ஆசைப்பட்ட சமூக உணர்வாளரல்லவா? எஸ்.பொ.தான் கொம்யூனிஸ் கட்சியிலிருந்து விலகியதற்குச் காரணம் கைலாசபதி, வைத்திலிங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்றவர்களே காரணம் என்கிறார். ஆனால் எஸ்.பொ.கட்சியில் முக்கியமானவராகவோ இயக்க நடவடிக்கைகளில் தீவிரமாக உழைத்தார் என்பதெல்லாம் இல்லை அவர் கட்சி உறுப்பிராகக்கூட இருந்ததாக ஞாபகமில்லை சும்மா இடையிடையே வந்து போகும் நபராகவே இருந்தார். கட்சியைவிட தன் சொந்தச் சோலிகளில்தான் அவர் ஈடுபாடு காட்டிவந்தார். என்று கொம்யூனிஸ்ட் கட்சியிள் பழைய உறுப்பினர்கள் திருமார்க், இரகுநாதன் போன்றவர்கள் இப்போழுது நினைவுகூர்கிறார்கள். மேலும் தனது தொழில் உத்தியோகம் என்று அவர் குடாநாட்டை விட்டு வெளியேறிவிட்டார். கைலாசபதி கொழும்பில் இருந்தார். இவர்களிடையே கட்சிரீதியான நெருக்கமோ தனிப்பட்ட உறவோ இருந்ததாக ஆதாரமில்லை. கட்சியில் எஸ்.பொ. செயல்வீரராகவோ, அர்ப்பணித்தவராகவோ போராட்டங்களில் ஈடுப்பவராவோ இருந்து இல்லை. சுந்தர ராமசாமி போன்றவர்கள் கொம்யூனிஸ்ட் கட்சியின் அற்பதொடர்புடன் கட்சியில்; இருந்து செயற்பட்டதான தோற்றத்துடன் எழுதி வந்தது போலவே எஸ்.பொ.வும் கட்சியில் தன் பாத்திரத்தை பெரும்பகுதி கற்பனையால் இட்டு நிரப்பியுள்ளர். இ.மு.எ.சங்கத்தில்கூட அவர் தொடர்ச்சியாக வந்தார் என்பதில்லை. உறுப்புரிமை பெறாமலே ஒட்டியும் ஒட்டாமலே இருந்து வந்துள்ளதாய் தெரிகிறது. கைலாசபதியை அவர் எதிர்த்துப் போராடியதாகக் இன்றைய கதையாடல்கள் சம்பந்தப்பட்டவர்கள் இல்லை என்ற தைரியத்தில் கூறப்படும் மிகையான எழுத்துக்களாகும்.

இடதுசாரித்திசையில்தான் எஸ்.பொ. சீர்கெட்டெழிந்தவராக இருந்தார் என்பதில்லை. மாறாக காந்தியம் பேசிய நம்பியதாகக்கூறும் அவர், தன் சொந்த வாழ்வில் மதுவிலக்கையோ வன்முறையை நிராகரித்தவராகக்கூட இருக்கவில்லை. எளிமையாக வாழந்தவரல்ல. காந்தியர் ஒப்புக்காவது தன்னை இனம், மதபேதம் காட்டாதவராக காண்பித்hர். எஸ்;.பொ. தமிழினவாதி முஸ்லீம், பௌத்த மதவிரோதி ஆக, அவர் காந்தியத்துக்குக்கூட பொருத்தமற்றவர், ஈழகேசரி நிறுவனர் நா.பொன்னையாவின் சன்மார்க்க சபையில் அங்கத்துவம் வகித்த மதவாதி எஸ்.பொ.வுக்கு எத்தனை முகம்கள் எஸ்.பொ. கருதுவது போல் ஒருவர் ஒரே சமயத்தில் இடதுசாரியாகவும், காந்தியவாதியாகவும் இருக்க முடியுமா? ஒரே சமயத்தில் சுத்த சைவத்தையும், மரக்கறி மட்டுமே புசிப்பவராகவும் அதே தருணத்தில் மச்சம் சாப்பிடுபவராகவும் இருக்க முடியுமா? எஸ்.பொ.அப்படியிருந்தார். எழுத்துத்தவம் இயற்றுவராகச் சொல்லும் அவரை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். எம்.சி.சுப்பிரமணியத்தி;ன் மச்சான் என்ற தகுதியைக்காட்டி எஸ்.பொ.தன்னை வளர்த்துக்கொண்டார். உத்தியோகம், பதவி உயர்வு, இடமாற்றம், அரச நியமனங்கள் பெற்றார், ஆளானர் கட்சிக்கு எதையும் செய்யாமலே கட்சிக்காக எதையும் இழக்கமலே கட்சியால் பயன்பெற்றார். கட்சியின் பல நூற்றாக்கணக்கான தோழர்களின் பிரதிபலன்கருதாத உழைப்பு தியாகங்களின் பயன்பாட்டை இவர் அறுவடை செய்து கொண்டார். கட்சியில் பயனடையாமலே கட்சிக்காக தம்மை இழந்த இடதுசாரிகளை இவர் பின்பு பழித்தார். சுயநலமிகள் அதிகார அவர் படைத்தவர்கள் என்று தீர்ப்புத்தந்தார். 30 வருடத்துற்கு மேலான இடதுசாரி அரசியல் இருந்த கார்த்திகேயன் போன்ற வர்களுக்கு ஒரு சொந்தவீடு இருக்கவில்லை, குடும்பத்துக்கு சொத்து சேர்க்க வில்லை வாடகை வீட்டீல் கடைசி மட்டும் இருந்து இறந்து போனர்கள் 1964 அக்டோபர் 21இல் தீண்டாமை இழிப்புப் போராட்டம் நடந்தபோது அது சார்ந்த ஆயுதச் செயற்பாடுகள்கூட இடம்பெற்றபோது எஸ்.பொ. எங்கே போனார் என்று பழைய கொம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களிடம் கேள்விகள் இருக்கிறது கட்சியில் போராட்டம்களில் கலந்து கொள்ளாத எஸ்.பொவுக்கு தான் கட்சி ஆள் என்று நடிக்க மட்டும் தெரிகிறது.

கார்த்திகேயன், வி.எ.கந்தசாமி, ஏ.சி.இக்பால், திரு.மார்க், முந்தையா, ஆகியோர் மாவிட்டபுரம் போராட்டத்தில் ஈடுப்பட்டபோது டானியல், ரகுநாதன், எழுத்தோடுமட்டுமல்ல சமூகப்போரட்டங்களிலும் கட்சியுடன் நின்றார்கள். 1971 ஏப்ரலில் கிளர்ச்சியில் சண்முகதாசன் போன்றவர்களுடன் கைது செய்யப்பட்டபோது டானியலும் கைது செய்யப்பட்டார். இவர்கள் சனங்களோடும் போரட்டங்களோடும் நின்றபோது எஸ்.பொ. தானும் தன்பாடுமாக இருந்தார். உயர் அரசியல் வாதிகளை கட்சி கடந்து சினேகிதம் பிடித்தார், அவர்களின் தேர்தல் மேடையில் ஏறி இறங்கினர். கட்சிக்காக அலைந்து உள்ளதையும் இழந்து பொலிசில் அடிபட்டு சாதி வெறியர்களுடன் மோதி கோடேறிய துன்பப்பட்ட வரலாறு எஸ்.பொ.வுக்கு இல்லை. அவர் அக்காலம்களில் சமூகத்தைத்துறந்து சுயஉணர்ச்சிகளைப் படைக்குப் தன்னுணர்ச்சி எழுத்தாளராக இருந்தார். இப்போ புலிப் பாசிஸ்டுகளின் திண்ணையில் இருந்து கொண்டு இடதுசாரிகளைத் தூசணை பேசுகிறார் இடதுசாரிகள் ஸ்டாலினிஸ்டுகளாக இருந்தபோதும் அவர்கட்கு ஒரு வரலாறு சாட்;சி சொல்ல இருக்கிறது. அந்தத் தலைமுறை எதிர்காலத்திலும் நினைவில் கொள்ளத்தக்க மனிதர்களாக இருக்கிறார்கள் ஆனால் எஸ்.பொ. எதிர்காலத்துக்கு எதை விட்டுச் செல்கிறார். என்றால் ஒரு புலி;ப்பாசிச ஆதரவு பெற்ற நபர் என்ற பெரும் பழியைத்தான் பழைய இடதுசாரிகள் பெரும்பகுதி இறந்துவிட்டார்கள். சிலர் புலிகளால் கொல்லப்பட்டார்கள். இன்னும் சிலர் வயது முதிர்ந்து வெளிநாடுகளிலோ, இலங்கையிலோ செயலிழந்துள்ளனர். இந்த நிலை எஸ்.பொ. போன்றவர்களுடன் எழுத்துத்தூசனம் பேசி மல்லுக்கட்ட விரும்பாத இடதுசாரிகள் சிலர் அமைதியாக உள்ளனர். இந்த நிலை எஸ்.பெ.வுக்கு உரிய பொழுதாகிவிட்டது. அவர் தன் விருப்புக்கு நம்பகமற்றவைகளையும் உண்மையற்ற செய்திகளையும் எழுதிச் செல்ல வாய்ப்பாகிவிட்டது.

எஸ்.பொ.தான் மாணவராக இருந்த காலத்தில் ‘தேசாபிமானி’ விற்றமைக்காக பள்ளியில் இருந்து வெளியேற்றட்டதாக தியாகக்கதை எழுதுகிறார். இவர்காலத்தின் முன்பும் பின்பும் பல மாணவர்கள் இடதுசாரி நூல்கள், பத்திரிகைகளைப் பள்ளியில் விற்று இருக்கிறார்கள். அக்காலம் முழுவதும் பல்கலைக்கழங்களில் இடதுசாரிகளே பலம்படைத்தவர்களாக இருந்தனர். யாழ்குடாநாட்டுடன் எஸ்.பொ. மட்டுமல்ல இன்னும் பெருமளவு உயர்வகுப்பு மாணவர்கள் தேசாபிமானி விற்பனை செய்தார்கள். மாணவர்கட்கு ஆதரவாக சில ஆசிரியர்களும் இருந்தனர். இவை பள்ளிகளில் கண்டும் காணமலும் விடப்பட்டன. அப்படியிருக்க எஸ்.பொ. மட்டும் பள்ளியில் இருந்து விலக்கப்படக்காரணம் என்னவென்றால் அவரின் தனிப்பட்ட சித்து விளையாட்டுக்களே என்று பழைய கொம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் ஒருவர் குறிக்கிறார். எஸ்.பொ.வுக்கு கட்சியின் போக்கில் விரக்தி, வெறுப்பு ஏற்படுமளவு அவர், அத்தனை நெருக்கமாகக் கட்சியில் இருந்து செயற்பட்டவர் அல்ல அந்தளவு அரசியல்தத்துவத் தராதரமோ தீவிரமோ அவரிடம் நிலவவுமில்லை. ‘வந்தாவா போனாப்போ’ என்று தனது கல்வி, தொழில் சொந்த வாழ்வுக்கு வெளியே நேரம் கிட்டும்போது சில கட்சித் தலைவர்களோடு மட்டு;ம் சிறிது தொடர்பை வைத்திருந்த எஸ்.பொ. தான் அப்போ இலட்சியவேங்கையாக, பெரிய புரட்சியாளராக இருந்ததாக இப்போ எழுத்;துக்கள் அதிர கதை நடத்திச் செய்கிறார். தமிழ்த்தேசிய வாதத்தின் பக்கமிருந்து இடதுசாரிகட்கு எதிராகப் பொருதுகிறார். ‘இந்தியா டுடே’ மாலனைப் புழகவந்த எஸ்.பொ. ‘அமெரிக்காவில் அவர் பத்திரிகைத்துறையில் புலமைப்பரிவில் பெற்றுப்படித்தவர்’ என்று பெருமை சான்ற அறிமுகம் தருகிறார். மாலனுக்கு முதல் இந்தியா டுடே யாருடைய பத்திரிகை எந்த அந்நிய சக்திக்காக கருத்துபிரச்சாரம் செய்கிறது. யாருக்கு எழுதுகிறது என்பதை அறிய எஸ்.பொ.தன் புத்தியைக் கொஞ்சநஞ்சமாவது செலவிட்டு இருக்கலாம். மாலனைப் போன்றவர்கள் தமது அமேரிக்க விசுவாசத்தை நிரூபிக்காமல் புலமைப் பரிசில் கிடைத்திருக்குமா? மாலன் எத்தகையை அரசியலை எழுதிவருகிறார்? அவர் அமெரிக்காவில் பத்திரிகைத்துறையில் படித்தால் அவர் என்ன பெரிய கொம்பா? பாரதி என்ன பத்திரிகையாளராக அமெரிக்க புலமைப்பரிசிலா படித்தார்? சிஐஏ இன் செய்திகளைப் பரப்பும் ஊNNஇல் பணிபுரியும் ஊடகவியலாளர்கட்கு இதைவிடப் பெரிய ஊடகத்துறை சார்ந்த பட்டம் பதவிகள் எல்லாம் வைத்திருக்கிறார்கள். முதலாளிய ஊடகத்துறையின் இலக்கு என்ன சமுதாய நலனா? மனிதகுல சேவையா?

தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களில் அரசியல் கட்சிகள் முதல் சினிமாக்காரர்களிடம் என்வலப் பெறும் திருக்கூட்டம்தானே அதிகம், இங்கு மேற்குலகில் மாலனைவிட ஊடகத்துறை புலமை சார்ந்தவர்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் மக்கள்சார்ந்த எழுத்தாளர்களை எழுதாமல இந்த மாலன் “முற்போக்கு அணியினருக்கு எதிரான கருத்துக்களை வைக்ககூடிய வகையில் தன்னிடம் கேள்விகளைக் கேட்டதாக” அவரே எழுதும்போது மாலனையும் எஸ்.பொ. வையும் ஒன்று சேர விளங்;கும் தருணமும் எம்மை வந்தடைகிறது. எஸ்.பொ. எழுதும் விடயங்கள் மிகச் சாதாரணமான வியங்களாகும். புதுத்தகவலோ, ஆய்வுககுரியவைகளோ அவரிடம் வெளிப்படுவதில்லை. மாலன், ‘இந்தியா டுடே’ பற்றிய மதிப்பீடுகள் இடதுசாரிகளிடம் ஏற்கனவே உண்டு. எஸ்.பொ. ஒரு சிங்களப்பத்திரிகையாளரை இலங்கையில் சகோதர சிங்கள எழுத்தாளரை அறிந்திருந்தார் எனக்கூற முடியாது. தனது சொந்தநாட்டுக்குள் உள்ள சிறந்த ஊடகவியலாளரை அறியமாட்டார். ஆனால் தமிழ்நாட்டில் லட்சுமிகாந்தன் முதல் மாலன் வரை உடனே தெரிந்துவிடுகிறது.

தனது எழுத்தானது தவம், ஊழியம், யோகம், தமிழ்த்துவம் வாய்ந்தது என்ற தன்னைத்தானே எஸ்.பொ. பெருமையோடு சுயபதிவு செய்யும்போது அளவுக்கு மீறிய சுயம்பேணும்போக்கு எவருக்கும் எரிச்சலைத்தரும். சிறந்தவைகட்கு தானே உரியவன் எனறு உரிமைகோருவது எஸ்.பொ.வின் பண்புதான் கைலாசபதி போலாக ஆசைதான் ஆனால் மூலச்சித்திரத்தை பிரதிசெய்யும் போலியாக கேலிச்சித்திரமாக ஆகிவிடுகிறார். அவரது எழுத்து தவமா? அவர் படைப்பை ஊழியமாய்த் தான் கருதினரா? சொந்த விருப்பு, வெறுப்புகளின் பாற்படாத உயர்நேர்மைக்கு அடையாளமாகவா அவர் எழுத்துக்கள் உள்ளன. தமிழ்; தேசியவெறியையும் சிங்கள, முஸ்லீம் வெறுப்பையும் கொண்டுள்ள எஸ்.பொ. ஒரு சிந்தனை ஆரோக்கியமுடைய மனிதனாகவே முதலில் இல்லை பின்பு எப்படி அவர் எழுத்து தவம் செய்யமுடியும்? இனவெறி கொண்ட மனிதர்களின் எழுத்து எப்படி தியானத்தன்மை வாய்ந்ததாய் அமைதிபூண்டதாய் நல்லொழுக்கம் பொருந்தியதாக இருக்க முடியும். அடக்கமற்ற மனிதமற்ற எஸ்.பொ. இன் எழுத்து உண்மையில் புலிப்பாசிச் வெறியாட்டுதலுக்குரியதாகும். புறநானூற்றில் மனித மண்டையோட்டிலிலே பேய்கள் கூடியிருந்து கூழ் உண்டமை கூறப்பட்டுள்ளதுபோல் அதே புறநானூற்றின் தமிழ்த்துவத்தை மீறாமல் எஸ்.பொ.வும் புலிப்பாசிஸ்டுகளால் மனித எலும்புக் கூடுகளாக மாற்றப்பட்ட பல பத்தாயிரம் மகாதர்களைப் பேசலாம் தமிழர்களே தமிழர்களை கொன்று புதைத்ததை துரோகி-மாவீரர் கதையாடல்களுடன் வீரகாவியமாய்த் தீட்டலாம். தேசியத்தலைவரிடம் ‘பொற்கிளி’ பரிசும் பாராட்டும் பெறலாம். முதலாளித்துவ ஊடகப்பயங்கரவாதத்திற்கு துணைபோகும் எழுத்துத்தான் எஸ்.பொ. வினுடையது. புலிப்பாசிசத்துக்க ஆதரவு தரும் எழுத்;தாளர்களுடன் கருத்துச்சுதந்திரம் எழுத்துத்சுதந்திரம் என்ற உரையாடல்கள் அர்த்தமற்றவை, ஏதோ மனிதகுல அறிவையெல்லாம் திரட்டிக்குறுக்கி தன் எழுத்தினுள் நுழைத்திருப்பதாக எஸ்.பொ. வார்த்தையாட முயல்கிறார். மாக்சியத்தின் பார்வையில்லாவிட்டால், அகன்ற மனிதத்திறமை வராது சமூகத்தின் சகல முழுமையான கருத்தைச்சொல்ல முடியாது. ஒரு செயற்பாடு என்பது தனித்தல்ல அது ஒரு ஒட்டுமொத்த இயக்கத்தின் கூறு, அல்லது விளைவு தொடர்ச்சியாக மாற்றமடையும், இங்கு எஸ்.பொ.வுக்கு சமூக இயக்கியல் விளக்கமின்மையால் ஒரு விளைவின் பிரதான மற்றும் துனை அம்சங்களை தொடர்ந்து சென்று விசாரணை செய்ய முடியவில்லை. அவரின் தமிழ்தேசியவாத அற்ப மூளையானது, மாக்சியத்தை வழக்கொழிந்த போக்காகக் கருதத்ங்லைப்படுகிறது. இவர்களின் ஒடுங்கிக்குறுகிய இந்தப்பிராந்தியங்கள் தத்துவத்தில் இறங்கிக் களைப்படைய விரும்புவதில்லை.

முதலாளிய ஐனநாயகம், சுதந்திரமான கருத்துப்பரிமாறல் என்பனகூட தேசியவாதிகட்கு தமது கருத்துக்கட்கு எதிரான அச்சறுத்தலாகவேபடுகிறது. எனவே விளக்கம், வாதிடலுக்குப் பதில் துரோதி, மாவீரர் எல்லைகளுள் இவை தடுக்கப்பட்டு விடுகின்றன எஸ்.பொ. ஒருபக்கம் தன்னை ஈழத்தவன், இன மானஉணர்வு கொண்டவன் என்று நாட்டிக்கொண்டே மறுபுறம், தன்னிடம் இடதுசாரிப் பாரம்பாரியங்களும் நிலவுவதாக அடிக்கடி எழுதுகிறார். புலிப்பாசிதத்தை தொழும் ஒருவர் எப்படி மாக்சை மதிப்பவராக இருக்க முடியும்? சிங்கள, முஸ்லீம் மக்களை தமிழ் மக்களின் எதிரிகளாக காண்பிப்பவருக்கு இடதுசாரிக்கருத்தை உச்சரிக்க என்ன உரிமையிருக்கிறது. செல்வநாயகத்தை தீர்;க்கதரிசி எனும் எஸ்.பொ. செல்வநாயகம் சாதித்த அரசியல் என்ன? ஈழத்துக்காந்தி மூதறிஞர் என்று செல்வநாயகத்தக்கு மேல் சுமத்தப்பட்டம்கட்கு ஏதாவது பெறுமானம் உண்டா? அவர் மேற்குலகால் தூண்டிவிடப்பட்ட இலங்கையின் ஐpன்னா தன்னை இலங்கையன் என்பதைவிட பிரிட்டிஸ் மகாராணியின் பிரசை என்று பெருமைப்பட விரும்புவர். பிரிட்டிஷ் ஆட்சி சிங்கள அரசைவிடத் திறம் என்ற கருத்தைப் பரப்பியவர் இன்றை தமிழ் மக்களின் அவலம்கட்கு புலிப்பாசிச கொடுமைகளுக்குப் செல்வநாயகமும் பொறுப்பு இன்று தமிழ் மக்களில் யாரவது செல்வநாயகத்தை தேடுகிறார்களா?

அவர் ஒரு உபயோகமற்ற அரசியல் பண்டம் அவரின் தனிப்பட்ட நற்குணம்களாகக் காட்டப்பட்ட பண்புகளைக்கூட முதலாளித்துவ நல்லொழுக்க விதிகட்கு உட்பட்டவைதான் தமிழ் ஈழக்கோரிக்கையைக் கிளப்பிவிட்டு அதற்கு வழிகாட்டத் தெரியாத செல்வநாயம் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பற்றவேண்டும் என்று கடவுளிடம் சகலதையும் பொறுப்புக்கொடுத்தார். கிறிஸ்தவரான செல்வநாயகம் இயேசு கிறிஸ்துவிடமா தமிழ்ழக்கோரிக்கையையும் யாழ்ப்பாண சைவ-நடுத்தர வர்க்கத்தையும் பாதுகாக்கும் பொறுப்பையும் கையளித்தார்? சிங்கள, முஸ்லீம் மக்களுடன் இலங்கையில் சேர்ந்து வாழமாட்டோம் எனற தமிழ்த்தேசிய வாதிகளை இன்று ஆசிய வளர்ச்சி நிலைமைகள் ஒரு ஆசிய நிலைமைகளுள் அடங்கும்படி பொருளாதார ரீதியான கட்டளையை இடுகிறது. இலங்கையுள் ஒத்துவாழ முடியாது என்பவர்கள் ஆசியாக்கண்டத்துள் துளியாகக்கலந்துகரையும் காலம் தொடங்கியுள்ளது. சிங்களம், தமிழ் போன்ற மொழிகடகுக்கூட இனி எதிர்காலமில்லை இலங்கையர் நிலைகூட அற்ப நிலையாக மாறி ஆசியர் என்ற முதலாளிய வகைப்பட்ட இணைப்பு ஏற்பட்டு வருகிறது.

நடிகர் எம்.ஐp.ஆர் இலங்கை வந்தகாலத்தில் ‘எம்.ஐp.ஆர் வருகிறார்’ எனறு துப்பறியும் நாவல் ‘சினிமா லோலன்’ எனற சினிமாப்பத்திரிகையில் எழுதிய எஸ்.பொ. எல்லாம் ஒரு படைப்பாளி என்ற தரத்துக்கு இலக்கிய வாதிஎன்ற மரியாதைக்குரியவரா? இவர் எம்.ஐp.ஆரைப்பற்றி எழுதிக்கொண்டு இருந்தபோது டானியல் உட்பட இடதுசாரிப்படைப்பாளிகள் சீரழிவுச்சினிமாவை எதிர்த்து எழுதினர். சினிமா எனற கனவுத்தொழிற்சாலைகளைவிட்டு சாதாரண மக்களை எழுத்தாக்கி படைப்பாக்கி இலக்கிய மதிப்பு வழங்கி உலாவவிட்டனர். எம்.ஐp.ஆர் ரசனை என்பது வளர்ச்சியடையாத விவசாய சமூக ரசனையினதும், சிந்தனையினதும் அடையாளமாக இருந்தது. குழந்தைகளின் பாடநூல்களில் உள்ளது போன்ற ‘காவல்காரன்’ வேட்டைக்காரன், தாயைத் காத்ததனயன், தாய் சொல்வதைத்தட்டதே, போன்ற எம்.ஐp.ஆரின் படம்கள் தமிழகத்தின் பொதுப்புத்திக்கும் சிறு பிள்ளைத்தர ரசனைக்கும் விளக்கமாகும். ஏழைகளைக் காப்பவராகத்தோன்றும் எம்.ஐp.ஆர் தமிழ்நாட்டின் கல்வியறிவற்ற ஏழை மக்களையுடம், பின்தங்கிய விவசாயச் சூழலும் நிலமின்மையாலும் வாடிய மக்களை அரசியல் ரீதியில் திரளவிடாமல் செய்யும் மோசடியாகும். கல்வியறிவு பெற்ற ஒப்பீட்டு ரீதியில் பொருளாதார, சமூக நிலைமைகள் தமிழகத்தை விடச்சிறப்பான கேரளாவில் எம்.ஐp.ஆர் போன்ற காட்போட்கத்தி வீரர்களை தோன்றவில்லை என்பதை நாம்காண முடியும். இங்கு எம்.ஐp.ஆர் பெயரில் அதுவும் மேற்குலகை பிரதிசெய்து துப்பறியும் கதையெழுதும் எஸ்.பொ. என்ன எழுத்தாளர். இலங்கையிலோ இந்தியாவிலோ அத்தகைய துப்பறிவாளர்கள் உள்ளார்களா? மேற்குலக கொம்யூனிச எதிர்ப்பு எழுத்துகளுக்கும் இந்த துப்பறியும் கதைகட்கும் நெருக்கமான உறவு உண்டு. சினிமா Nஐம்ஸ்பொன்ட்கூட ஒரு பிரிட்டிஸ் உளவாளியை மூலமாய்க் கொண்டதுதான். பாரதியின் மரணத்துக்கு சென்றவர்கள் 20 பேர்தான் ஆனால் எம்.ஐp.ஆரின் மரணச் சடங்குக்கு ஒரு கோடிப்பேர் திரண்டனர் என்பதால் வரலாறு எம.ஐp.ஆரை பாரதிவிட மிஞ்சியவராகக் கணிக்கப்போவதில்லை. எம்.ஐp.ஆரைப் பாடிய எஸ்.பொவும், எம்.ஐp.ஆரின் பொதுப்புத்திக்கு சமமானவர்தான். சுந்தரராமசாமி முதல் சாருநிவேதிதா வரை சினிமா நடிக நடிகரைப் பேசும்போது அவர்களின் இலங்கைத் தமிழ்ப்பதிப்பான எஸ்.பொவும் பேசுவது இயல்புதானே? தினகரன், வீரகேசரி, தினபதி, சுதந்திரன் உட்பட சகல பத்திரிகைகளிலும் எழுதிய எஸ்.பொ.கொம்யூனிஸ்ட் கட்சிப்பத்திரிகையான தேசாபிமானியில் எழுதினாரா? ஒருவேளை எழுதவிரும்பி எழுத்துத்தகுதியற்றுப்போனரா?

வீரகேசரி ஆசிரியர் கே.வி.எஸ்.வாஸ் மக்களைக் கவர்நத நாவல்களை எழுதியவராக எஸ்.பொ.ஆல் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் எத்தகைய நாவல்களை எழுதினார் என்று அவர் குறிக்கவில்லை அவர் பத்திரிகை வாசிப்புடைய நடுத்தரவர்க்கத்தின் கனவுகட்கு ஏற்பவே எழுதினார். வீரகேசரி நிறுவனத்தின் மற்றொரு பத்திரிகையான மித்திரன் கொலை, கொள்ளை, பாலியல் வகைகளையும் பட்லி, பூலான்தேவி, மான்சிங் போன்ற கொள்ளைக்காரர்களின் கதைகளையும் எழுதியது இக்கொள்ளையர்கள் சமூகக் கொடுமைகளால் இப்படி ஆகினர் என்பதைவிட அவர்கள் பாலியல் அவதாரம்களாகவே வர்ணிக்கப்பட்டனர். ஆனால் கைலாசபதி காலத்தினகரன் கதைதேடி இந்தியா போகவில்லை. இலங்கை மக்களின் எழுதாத கதைகளை எழுதியது. இடதுசாரிகள் தமிழ், மத்தியதரவர்க்கத்தின் முறைப்பாடுகளைவிட்டு சாதாரண மக்களைப் பாடுபொருளாய்க் கொண்டனவாக எழுதினார்கள். தாம் அழைந்த மண்ணையும் அதில் வாழ்ந்த புழுதி படிந்த மனிதர்களையும், கந்தலாடையுடன் வயல்களிலும் தெருக்களிலும் கிராமங்களிலும் உலாவியமனிதர்களைப் பேசப்புறப்பட்டனர். கள்ளத்தோணியில் வந்த அநாதை முனியாண்டியும், சிங்கள் வேலைக்காரப் பொடியன் சிரிசேனவும், ரிக்சா இழுக்கும் மனிதர்களும் டானியலின் கதைகளில் தோன்றினார்கள். ஆனால் இந்தத்தருணத்தில் எஸ்.பொ.துப்பறியும் நாவலும் சினிமாவையும் எழுதும் படைப்பாளியாக இருந்தார். கே.வி.எஸ்.வாஸ் மக்களைக்கவர்ந்த எழுத்தாளர் என்று மதிக்கும் எஸ்.பொ. டானியலுக்கு அந்த மரியாதையைத் தருவதில்லை. கே.வி.எஸ்.வாஸ் சமூக உணர்வுள்ள எழுத்தாளராக ஒரு போதும் அறியப்பட்டிருக்கவில்லை. அவரின் எழுத்தை ஒருமுறை கல்கி ‘அவரது பேனா அமெரிக்க டாங்கி போன்றது’ என வர்ணித்ததாக வ.அ.இராசரத்தினம் எழுதியுள்ளார். இது கே.வி.எஸ்.வாஸ் அவர்களை மட்டுமல்ல கல்கியையும் விளங்க வாய்த்த சம்பவமாகும்.

எஸ்.பொ ஏழ்மை எம்மைத் தீண்டியதில்லை ஒருபோதும் உணவுக்குப் பஞ்சப்படதில்லை நல்லாய்ச்சமைத்தோம் சாப்பிட்டோம் என்று எஸ்.பொ. தனது எழுத்தில் சாதிப்பது அவரது நடுத்தரவர்கக் வாழ்வுக்குச் சாட்சியமாகிறது. இதுதான் அவரை அரசியல் ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் ஏழை மக்களைப் பூரணமாக விளங்கத்தடையாயிருந்த காரணியாகும். வர்க்கக்குண நலம் அவரை பொருளாதார ரீதியாக தாழ்நிலைககுரியவராக கருதிவிட இடம் தரவில்லை ஏழ்மை கொண்ட மக்களுடன் தன்னை இனைத்துக்காட்ட அது விடாது தன்ர்க்கம் பற்றிய பெருன்மையை அவர் ஏழுத்துகள் மறைக்கவில்லை சிறந்த படைப்பாளியின் எழுத்தில் நாம் எழுதுவோனைத் தரிசிக்கமுடியாது. அவன் நிழலாய் மறைபொருளாய்த்தான் தென்படுவான் ஆனால் எஸ்.பொ. எழுத்துக்களில் அவர் பந்திக்குப்பந்தி பக்கத்துக்குப்பக்கம் வெளிப்படுகிறார். இந்த நூல்சுயசரிதைத் தோரணையை வெளியிட்ட போதும் எஸ்.பொ.வைப் படைத்து இன்றைய சிந்தனைகட்குப் பக்குவப்படுத்திய சமூக, பொருளியல் போக்குகளை அவர்விளக்க வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. எழுதுவோனுக்கு தன்பசியும் தன்துன்பமும் தன்தனிமையும் சமூகத்தில் இருப்பதைக் காண தெரியாமல் போவதேன்? பெரும்பான்மை மக்களின் சமுதாயப்பிரச்சனைகளை இவர்கள் ஏன் கண்டெழுதுவது. இல்லை, எஸ்.பொ. போன்றவர்கள் ஏன் மக்களை வஞ்சிக்கிறார்கள் மக்களுக்கு மேலாக தம்மை நிறுத்தி தரிசனம் தருகிறார்கள். தமது சொந்;த பாலியல் தாபங்களை சர்வ வியாபகமாக்கி ஏன் எழுத்தெங்கும் பரப்புகிறார்கள். தன்னைத் தானே போற்றும் எஸ்.பொக்கள் சமுதாயத்தின் பெறுமதியை உணர்வதில்லை. தாம் மட்டுமே பெறுமதிபடைத்தவர்கள் என்று உணரத்தொடங்குகிறார்கள். அடுத்த மனிதர்களின் வாழ்வுப்போரட்டத்தில் தம் பாத்திரம் என்ன என்று இவர்கட்கு புலப்பட்டாது போகிறது.

பாரதி தன்வீட்டில் மனைவி, பி;ள்ளைகளுடன் பட்டினி கிடந்துகொண்டுதான், ‘கஞ்சிகுடிப்பதற்கிலார் அதன் காரணம்கள் இவையெனும் அறிவுமிலார்’ என்ற கவிதை வரிகளை எழுதினார். பீஐpத் தீவில் கரும்புத்தோட்டங்களில் உழைத்து மாழும் மனிதர்களை எழுத்தில் வார்த்தார் மாக்சீம்கோர்க்கி முதல் எம்தேச டானியல் வரை மக்களோடு அலைந்து திரிந்து பட்ட அனுபவம்தான் அவர்களது எழுத்துக்களைச் செழிக்க வைத்தன. மாக்சிம் கோர்க்கி நாடோடியாய்த் திரிந்து பிச்சைக்காரர்கள், திருடர்கள், விலைமாதர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், கிராமமக்கள் என்று பலதிறப்பட்ட மனிதர்களை வாழ்பனுபவத்தை உள்வாங்கியே படைப்பாளியானார். டானியல் அடிநிலை மனிதனாக சமூக அகீங்காரம் இல்லாமல் அலைந்து பட்டழிந்துதான் எழுத்து அனுபவத்தை பெற்றார். மக்களது மொழியை உணர்வைக்கிரகித்து எழுத்துக்குக் கொண்டுவந்தார். ஆனால் எஸ்.பொ.வுக்கு வறுமையற்ற வாழ்வுச்சூழல் வாய்ந்ததாக அவரே எழுதுகிறார். நகர்ப்பற வாழ்வுச்சூழல், ஆங்கிலக்கல்வி, கல்விசார்ந்த உறவுகள் அடிமட்டமல்லாத பொருளாதார நிலை எனபன அவரை சாதாரண மக்களை அண்டி நிற்கவிட்டிராது. பின்பு அவர் ஆசிரியர், அரசு சேவையாளர் அரச தாபனங்களில் பதவிகள், எழுத்தாளர், இலக்கியவாதி, என்ற மதிப்புகள் என்று அவர் சாதாரண பெரும்பான்மை மக்களுக்கு அன்னியமாகிவிட்டார். அவர் சமூகத்தில் முக்கிய மனிதராக தன்னைக் கருதிக்கொண்டார். எஸ்.பொ. இடதுசாரிகட்குக்காட்டு எதிர்ப்பு என்பது அவர்கட்கு காட்டும் எதிர்ப்பல்ல சாதாரண உழைக்கும் மக்களுக்கு தெரிவிக்கும் எதிர்ப்பாகும். இவர் இந்த மக்களைக்கண்டு எரிச்சலூறுகிறார். அவர்கட்கு எதிரான எடுத்துக்களுடன் நிற்கின்றார்.

மக்களின் சமூக வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்ககவல்லை பொருளாதார தேவைகளை எஸ்.பொ. ஒரு போதும் பேசுவதில்லை மாறாக அகவயப்பட்ட தியான நிலைகட்கு தனிமனித பண்புகளைத் சீர்ப்படுத்தும் போக்குக்கு செல்கிறார். மனிதர்கள் எல்லோரும் நற்பண்பு படைத்தவர்களாக மாறினால் அவர்கட்கு உணவும் ஆடையும் தொழிலும் கிடைத்துவிடமா? பசித்திருக்கும் வயிறுகட்கு நற்சிந்தனைகள் மதவாத ஆன்மீகம் உணவிடுமா? நோயுற்ற மனிதர்கட்கு மருந்துவ உதவி தருமா? பல ஆயிரமாண்டுகால ஆன்மீகம் தனிமனித ஒழுக்க நெறிகள் மனிதர்கள் உள, உடல்ரீதியில் அடிமை கொண்ட கதையே சுரண்டலைப்பாதுகாத்த வரலாறே அனுபவமாய் மிஞ்சி நிற்கிறது. இதையே எஸ்.பொ. போன்றவர்கள் திரும்பவும் சிபார்சு செய்கின்றார்கள், புரட்சி என்பது மக்கள் மாற்று வழியற்ற நிலையில் வரலாற்றின் கட்டளைப்படி எழுவதாகும். உழைக்கம் மக்கள், தாம் சாகாமல் இருக்க தேர்ந்தெடுக்கும் கடைசி வழியாகும். இது எஸ்.பொ. போன்ற நடுத்தரவர்க்க சிந்தனை வீங்கிகட்கு கடைசிமட்டும் விளங்காது. வண்டி, தொந்தி வைத்து வீங்கி முட்டி நிற்பவர்கள் உழைக்கம் மனிதர்களது சித்தாந்த மென்பது வன்முறையாகவும் அயலகச் சிந்தனையாகவுமே தெரிகிறது. அவர்கள் தம்மை வன்முறையை எதிர்ப்பவர்கள் என்று பிரகடன்படுத்த முயல்கி;ன்றார்கள். பண்பின் திருவுருவம்கiளாய்க் கொள்கின்றனர்.

எஸ்.பொ தான் அடிக்கடி தொண்டமானச் சந்தித்த கதை எழுதுகிறார். ஆனால் சாதாரண தோட்டத்தாழிலாளர்கள் பற்றி அவர்கள் வாழ்நிலைப்பற்றி, அரசியலைப்பற்றி எந்த சிறு குறிப்புமில்லை. 1976-இல் சிவனு லட்சுமணன் சுட்டுக்கொலை எல்.எஸ்.எஸ்.பி யின் தோட்டத்தொழிலாளர்களுடனான தொடர்புகள் பற்றி எழுத்தில் எந்தத் தடயமும் இல்லை. தொண்டமான் ஒரு தொழிற்சங்கச் சர்வாதிகாரி இடதுசாரிகள் அவர்களது தொழிற்ச்சங்கங்களை ஒழிக்க அவர் வன்முறையை நாடினர். 1976இல் சிவனு இலட்சுமணன் சுடப்பட்டபோது ‘புரட்சிக் கொம்ய+னிஸ் கழகம்’ நாவலப்பிட்டியில் கதிரேசன் கல்லூரி உட்பட பல இடங்களில் பாடசாலைப் பகிஷ்கரிப்புக்கு ஒழுங்கு செய்தது. கர்த்தால்கள் நடாத்தியது. அக்காலத்தில் நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த தோழர் அழகலிங்கம் அதற்காக உழைத்தார். அதற்காக அவரைத் தொண்டமான் ஒரு தந்தியோடு 24 மணி நேரத்தில் நாவலப்பிட்டியிலிருந்து இடமாற்றம் செய்தார். அத்தகைய சௌமியமூர்த்தி தொண்டமானுடன் கூடல் எஸ்.பொ.வுக்கு பிழையாகப்படவில்லை.  இதுவே இடதுசாரிகளாக இருந்திருந்தால் அவரது எழுத்து சாபமிடதொடங்கியிருக்கும்.

பிரமாண்டமான சமுதாய அனுபவமென்பது குறுகிய தனிமனிதமாக ஆன்மிக சார்ந்த சிறு சிந்தனையாடலாக குறுகிவிடுகிறது. எங்கும் எதிலும் எப்போதும் தன்னை நாட்டுப் தனிமனிதப் பெருவியாதி ஈழத்தமிழ் இலக்கிய உலகில் பெரும் புயல்களை வரவழைத்தவன் தானே என்ற நிரூபணம்கட்கு இட்டுச்செல்கிறது. ஆனால் இலங்கைத் தமிழ் எழுத்துப்பரப்பில் எஸ்.பொ.புயலல்ல மாறாக தமிழ் தேசியவாதத்தின் சிறு புழுதிக்காற்;றாகும், தூய இலக்கிய ஆழ்மனக்கட்டளைகட்கு செவிசாய்ப்பவராக அழிவற்ற எழுத்துளை எழுத்தில் வடிப்பவராக அவர் எமக்குத் தோற்றம் தர விரும்புகிறார். எஸ்பொ.தனக்குத்தானே இரங்கும் கோலம் கொண்டவராக ஒரு துன்பியல் நாயகனின் பண்புகளைக் கொண்ட பாரம்சுமந்த மனிதராக தன்னை உருவகின்றார் தான் எடுத்துக்கொண்ட பொருளை விளக்கமுடியாத தூய இலக்கியத்தவக் கோலம் அவரால் ஒரு படைப்பாளியின் பரவச உலகைக்காண்பிக்கப் போவதான மாயம்கள் எதுவும்வெற்றி பெறவில்லை. தம் சொந்த வாழ்வு மீது இருப்புடையோர் மனிதப்பொது நலன்களை முன்னிறுத்துவோர்களை பகைவராய் காண்கிறார் என்பது எஸ்.பொ.வின் வெறுக்கும் எழுத்துள் வெளிப்படுகிறது. இலக்கியம் என்பது தன்னனுபவமாக இருப்பினும் அது ஒரு சமூக அனுபவமாகும். தனியே தன்னுள் ஒழிவது சுயஅறிவித்தல் இலக்கிய மாவது இல்லை. எஸ்.பொ.வின் பொய்த்தவக்கோலம் புதிதாக எதையும் தன்னைதவிர எழுதவிடவில்லை. தனது வெறுமையை மேதமை மிக்க இலக்கிய மகானின் பண்பு என்று எஸ்.பொ.நிரூபிக்க முயற்சிக்கிறார். அவர் முதலாளித்துவத்த பட்டறிவோறி எதிர்க்கவில்லை மாறாக யதார்த்தின் கொடூரங்கள் அவருக்கு பழகியதாகிவிட்டது. எஸ்.பொ.வை இடதுசாரிகள் யாரும் சிதைக்கவில்லை அவர் முதலாளியத்தினால் சிதறிய விகாரமடைந்த மனிதர் ஆனால் சகலதுக்கும் இடதுசாரிகளைக் காரணமாக்குகிறார். அவரது அரசியல், சமூக, பொருளாதார விளக்கக்குறைவுக்கு இலக்கிய இயலாமைக்கு அவர் இடதுசாரிகளையே காரணமாக்க முயல்கிறார். நூல் முழுவதும் முதிர்ச்சியற்ற நிலை கடந்தகாலத்தின் மீது அவரால் ஆளுமை செலுத்த முடியவில்லை.ஒரு எழுத்தாளனை எப்படி விளக்குவது அவர் எதையெழுதுகிறார், எதை எழுதவில்லை என்பதனைவைத்துத்தானே சாட்சியமளிக்க முடியும் அவர் பலவீனங்கள், அற்பமான ஆசைகள் சுயநலம் இவைகளின் திரட்டலான தனிமனிதவாதமே தென்படுகிறது. அவர் எழுத்தில் சுய அகங்கார அலைச்சல் அதிகம். சுயதணிக்கைகள் ஏராளம் கள்ளமற்ற எழுத்து என்ற வாதிடலுடன் உளநோய்த்தன்மை வாய்ந்த மாக்சிய எதிர்ப்புடன் முதிர்ச்சியற்ற விளக்கங்கள் தரப்படுகிறது. எஸ்.பொ. புதுப்பித்துக்கொள்ள முடியாததளவு பழையவர். புலிப்பாசிட்டுகளின் தமிழ் மக்கள் மேலான இழிவுகள் அவமதிப்புகள் பயங்கரவாதம் எதுவும் எஸ்.பொ. அறியார் ஆனால் சிங்களப்பேரினவாதம் பற்றிய இரண்டு பத்தாண்டுகட்கு முற்பட்ட கருத்துக்களை அவர் புதுப்பித்துத்தர மறக்கவில்லை தமிழ், சிங்கள, முஸீம் மக்களின் ஒன்றிணைந்த கூட்டு வாழ்வு என்ற கருத்துக்கள் எஸ்.பொ.வைப் பொறுத்த ஒரு சிந்தனைப் பயங்கரவாதமாகும்.