Wed05012024

Last updateSun, 19 Apr 2020 8am

"சம உரிமை இயக்கத்திற்கு" கண்டியில் நேற்று அச்சுறுத்தல்! (படங்கள்)

சம உரிமை இயக்கத்தினால் நேற்று(16) கண்டியில் கையெழுத்து வேட்டை இடம் பெற்றது. பெரும் அச்சுறுத்தலுக்கும் இடையூறுகளுக்கும் மத்தியில் மக்கள் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மத்திய மாகாணசபை உறுப்பினர் துஷார குணரத்ன மற்றும் அவரது குழுவினர் சம உரிமை இயக்கத்திற்கும் கையெழுத்திட்ட மக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Read more ...

சம உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் ஜீட் சில்வா புள்ளேயுடனான நேர்காணல்

"சிஸ்டத்தை மாற்றி சம உரிமையைப் பெறுவோம்"

கேள்வி:

யுத்தம் முடிவடைந்து 3 வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிந்த கையோடு வடக்கு கிழக்கு மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாக அரசாங்கம் கூறியது. அந்த வாக்குறுதி நிறைவேறியுள்ளதா?

ஜுட்: வடக்கு கிழக்கு ம்களுக்கு உரிமைகளை பெற்றுக் கொடுப்பதாக கூறிய அரசாங்கம், உரிமைகளுக்குப் பதிலாக மக்களுக்க மிலிடரி மாதிரியான ஆட்சியைக கொடுத்திருக்கிறது. தொடர்ந்தும் தமிழ் மக்களை அடிமையாக்கி வைத்துக் கொண்டு தமது இனவாத அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்துகொள்வதற்காக யுத்த வெற்றியை பயன்படுத்தி வரும் அரசாங்கம், தமிழர் என்ற காரணத்தாலேயே இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மீது தொடுக்கப்பட்டு வரும் விஷேட அடக்குமுறை வேலைத் திட்டம் பாரதூரமானதாகும்.

Read more ...

காலி மாவட்டத்தில் இனவாத்திற்கு எதிராக சம உரிமை இயக்கம் இன்று துண்டுப்பிரசுரம் விநியோகம்! (படங்கள் இணைப்பு)

 

இனவாதம் மற்றும் மதவாதத்திற்கு எதிராக மக்களை தெளிவுபடுத்தும் துண்டுப்பிரசுர விநியோகம் இன்று (27) காலி மாவட்டத்தில் சம உரிமை இயக்கத்தினால் விநியோகிக்கப்பட்டது.

Read more ...

சமவுரிமை இயக்கம் பிரான்ஸ் அங்குரார்ப்பண உரைகளின் காணொளிகள்

சமவுரிமை இயக்கம் பிரான்ஸ் அங்குரார்ப்பண உரைகளின் காணொளிகள்

Movement for Equal rights – Inauguration – France – 10.02.2013- Video footages

Movement for Equal rights – Inauguration – France – 10.02.2013

Speeches delivered by

Read more ...

சம உரிமை இயக்கத்தின் கையெழுத்து - பிரச்சாரப் போராட்டம் கிழக்கில் தொடர்கிறது.. (படங்கள் இணைப்பு)


இலங்கை இனவாத அரசின் திட்டமிட்ட வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் மண் அபகரிப்பை நிறுத்தக் கோரியும், இராணுவ ஆட்சியை நீக்கக் கோரியும்  சமஉரிமை இயக்கத்தினால்  மட்டக்களப்பு நகரில் இன்று இடம்பெற்ற கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு கையெழுத்து இட்டதாக அங்கிருத்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more ...

பாரிஸ் சம உரிமை இயக்கத்தின் கூட்ட செய்தி (படங்கள் இணைப்பு)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சமவுரிமைக்கான அறிமுகக் கூட்டம் 10.02.2013 நடைபெற்றது. அண்ணளவாக 125இற்கு மேற்பட்ட தமிழ், சிங்கள மொழி பேசுகின்றவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தினை தொடர்ந்து கலந்துரையாடல் ஆரோக்கியமாக நடைபெற்றது. முரண்பட்ட அரசியல் கருத்துக்களை கொண்ட பலர் மத்தியில் இணைந்து செயற்படும ஆர்வம் காணப்பட்டது. விரைவில் வீடியோ வெளியிடப்படும்.

Read more ...

ஏன் இந்த குழப்பம் சிங்கள - முஸ்லிம்

சம உரிமை இயக்கதினால் நாடு பூராகவும் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களுல் ஒரு நிகழ்வாக நேற்று ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள என்.எம். பெரேரா ஞாபகார்த மண்டபத்தில் ஏன் இந்த குழப்பம் சிங்கள - முஸ்லிம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு  ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள சிங்கள,முஸ்லிம்,தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர்  ரவீந்ர முதலிகே...

Read more ...

அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம்

2009 மே மாதத்தில் அரசாங்க ஆயுதப் படைகளினால் எல்.டீ.டீ.ஈ.யின் தலைமை, அதன் உறுப்பினர்கள் உட்பட பெருவாரியான சாதாரண தமிழ் மக்களின் மரண ஓலத்தோடும், படுகொலையோடும் பல தசாப்தங்களாக நீடித்த  வந்த யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்தகால கட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் இனவாதத்தையும் ஒவ்வொரு இன மக்கள் மத்தியிலும் போர்க்குணத்தையும் புகுத்தி அதன் தீவிர யுத்தச் செயற்பாட்டின் மூலம் இந்த வெற்றி வெளியிடப்பட்டது. யுத்தத்தின் முடிவு வீரதீரமிக்க சிங்கள இனவாதத்தின் வெற்றியாக சிங்கள இனவாதிகளால் கொண்டாடப்பட்டது.   ராஜபக்ஷ அரசாங்கம் அந்த யுத்த வெற்றிக்கான உரிமையை தன் கையில் எடுத்து அதனை தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு போஷனை செய்து, தனது இருப்பிற்கான முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.

Read more ...