கருணாநிதி கோமாவில் உள்ளார்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
28 Apr 2012
- Hits: 2204
கருணாநிதி கோமாவில் உள்ளார்! தமிழக சஞ்சகை ஓன்று சரியாகத்தான் சொல்லியுள்ளது!
"தமிழீழக் கனவை நனவாக்க வாழ்வை அர்ப்பணியுங்கள் தி.மு.க. தொண்டர்களுக்கு அறைகூவல் ! தமிழினம் தலை நிமிர - உடல் - பொருள் - ஆவியை தர தயார்!
இறுதி யுத்தம் நடைபெற்றபோது அதை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசும் மத்திய அரசும் இயன்றவரை எல்லா நடவடிக்கைகளையும் செய்தது. ஆனால் இலங்கை அரசு கொடுத்த உறுதி மொழிகளையெல்லாம் மீறி தமிழ்ப் போராளிகளைக் கொன்று குவித்தது."
அரசிலில் கோமா!?.....கருணாநிதிக்கு இந்த வயதில் வரக்கூடிய வருத்தம்தான்!
கருணாநிதிக்கு அரசியலில் கோமா என்றால், அரியாசனத்தில் இராமாயணத்தின் தசரதனின் நிலை! கைகேகி—கோசலை போன்று, தயாளு-ராசாத்தி அம்மாக்கள்! இராமன்--பரதன் போன்று, அழகிரி--ஸ்டாலின்! இவர்களில் யார் நாடாள்வது என்பதில் தந்தைக்கும்--தாயார்களுக்கும் பனிப்போர்! இதில் "கைகேகி வரம்" ஏதாவது இருந்தால்?….கருணாநிதியின் ராமனை? "கைகேகி காடேகச் சொல்லி தசரதன் உயிர் போனதுபோல", இல்லாதிருக்க கடவது….இதன்றி தமிழ் ஈழத்திற்காவது….உங்கள் உயிராவது?..........
--அகிலன் 28/04/2012