கோத்தபாய (வெள்ளைவான்) கடத்தலை "கைத்தொழிலாக" செய்கின்றார்! தடுத்து நிறுத்தக் கோரிக்கை!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
12 Apr 2012
- Hits: 2097
"சிறிலங்கா அரசு பாதுகாப்பு செயலாளர் கோதபாய, ஆட்கடத்தல் குழுவை வைத்து நடத்தி வரும் கைத்தொழிலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இது
தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது."
கோதத்பாய ஓர் பாதுகாப்புச் செயலாளர், அவரின் "சிறப்புக் கைத்தொழில் வெள்ளைவானில் ஆட்கடத்தல்"----காணாமல் போக்காட்டுதல்!
இவரின் இத்தொழிலால் கடந்த ஆறுமாதங்களில் 56-பேர் காணால் போயுள்ளனர்.
முன்னிலை சோஷலிசக் கட்சித் தலைவர்களின் கடத்தலால் இவரின் இக்கைத்தொழில் பெரும் தொழிலாகியுள்ளது! சர்வதேச மயமாகியுள்ளது! உலகமயமாதலிற்கு உந்துதலாகியுள்ளது! கடத்தல் கொலை கொள்ளைகளுடன் வெள்ளைவான்களின் பெருக்கமும் அதிவேகமாகப்போகின்றது!
வெள்ளைக்கும், (கோத்பாய) கொள்கை(ளை)க்கும் உள்ள பொருத்தத்தை எந்த சோஜியன்தான் கணித்தானோ?. ஏனெனில் வெள்ளையின் "ரான்ஸ்போட்"டால் தானே இலங்கை அரசியலே ஓடுது!
--அகிலன் 12/04/2012