Sat04272024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை என்ற இழந்த சொர்க்கம் (பகுதி : ஒன்று)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு. கோடை கால வருகையை பறை சாற்றும் ஜூலை மாதம். விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு முன்னால் பயணிகளின் நெரிசல். உட்புகும் விசா குத்தி அனுப்புவதில் அவ்வளவு தாமதம். என்னை சுற்றி நின்ற பயணிகளில் புகலிடத் தமிழர்களே அதிகம் காணப்பட்டனர். சுவிஸ், பிரான்ஸ், கனடா என்று பல திசைகளில் இருந்தும் பிள்ளை, குட்டிகளுடன் வந்திறங்கியிருந்தார்கள். ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் மேற்கு நாடுகளில் பாடசாலைகளுக்கு கோடை விடுமுறை விட்டிருப்பார்கள். அதனால் விடுமுறையை தாயகத்தில் கழிக்க குடும்பத்துடன் வந்திருப்பார்கள். ஒரு மீட்டருக்கும் குறையாத பயணிகளின் வரிசை குடிவரவு சுங்க எல்லையைக் கடக்க ஒரு மணி நேரம் எடுத்தது. சுவிட்சர்லாந்து, பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் அதிக நேரம் காக்க வைக்கப் பட்டனர். வெள்ளயினத்தவர்களின் கடவுச்சீட்டுகள் கூட நேரமெடுத்து சோதிக்கப்பட்டதை அங்கே தான் பார்த்தேன்.

Read more ...

எந்தக் கட்சியும் வெற்றிபெறாத களத்தில் தோற்றுப்போன மக்கள்!

இன்றைய சுரண்டல் அமைப்பைப் பேணும் வகையில், அதற்கு எதிராக மக்கள் போராடும் உணர்வுக் கொள்ளலைத் தடுப்பது ஆளும் வர்க்கத்துக்கு அவசியமான ஒன்று. இந்த மோசமான சமூக முறைமை பற்றி அறிவதற்கு முயலும் முதல் முயற்சிகளையே தடுத்துத் தூக்க நிலையில் உணர்வை மரத்துப்போகச் செய்வதற்கு காலத்துக்குக் காலம் எதையாயினும் சிறப்பு மேளமாக உருவாக்கித் தாலாட்டுப்பாடுவர் (எப்போதும் நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்தும் தொடர்புசாதனங்கள் – சிறப்பு விருந்தாக முட்டாள் பெட்டியும் சினிமாவும் செய்யத் தவறும் பணியைக்கூட இவை சாத்தியமாக்கும்)

Read more ...

இனங்களும்…. ஒருமைப்பாடும்…..

70க்கு பிறகு பேரினவாதம் இலங்கை அரசியலினை ஆக்கிரமித்துக் கொள்ள இனவாதமும் மக்களை பற்றிக் கொண்டது. அது நாளுக்கு நாள் மக்கள் பேச்சிலும் மனதிலும் வளர்ந்து வந்து இன்று பல தமிழ்மக்கள் மத்தியில் சிங்கள, முஸ்லீம் மக்களை எதிரிகளாகப் பார்க்கும் மனநிலை கூடுதலாக காணப்படுகிறது. சிங்கள மக்களோடு நாங்கள் சேர்ந்து வாழ முடியாது என்ற கருத்தியலை இன்றைய தமிழ் அரசியல்வாதிகளாலும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலும் பரவலாக சாதாரண தமிழ் மக்களின் சிந்தனையில் பரப்பப்பட்டு வருகிறது. இது அரசியல்வாதிகளின் இனங்களை கூறு போடும் அரசியல் நடவடிக்கையாகும். இந்த அரசியல்வாதிகளின் சுயநல அர சியற் போக்கும், தவறான அரசியற் பார்வையுமே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

Read more ...