Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அடங்கியிருக்கலாமோ உன்ர விண் தோள்கள்..

குறுக்குகட்டோட விறுக்கென்று

மணலில் எட்டி நடக்கின்ற மீன்காரப் பெண்டு

குனிந்து மீன்கூடை இறக்கி வைக்கையில்

மொய்க்கிற ஈயோடு அவளுடல் மேயும் உன் கண்கள்

Read more ...

மகிந்தா தலைமையில் ஆடிய கிரிக்கெட்டில் தோற்றுப்போன சிங்களப் பேரினவாதம்


கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. வெறும் பொழுது போக்கும் அம்சமல்ல. கிரிக்கெட்டுக்கு குறுகிய மத இன சாதிய உணர்வு உண்டு. இப்படி அதற்கு ஒடுக்கும் பல உணர்வுகள் உண்டு. அப்படித் தான் அது விளையாட்டாகக் காட்டி வாழ்கின்றது. இதனால் தான் ஆளும் வர்க்கத்தால் அது போற்றப்படுகின்றது.

கிரிக்கெட் மக்களை அடிமை கொள்ளும் ஒரு போதைப் பொருள். ஆளும் வர்க்கத்துக்கு அடக்கியாளும் கருவி. மூலதனத்துக்கோ செல்வத்தை குவிக்கும் வியாபாரம். இதை சுற்றித்தான் தேசபக்திக் கூச்சல்கள். விளையாட்டு ரசனை பற்றி தர்க்கங்களும் வாதங்களும். தனிமனித சுதந்திரம் பற்றிய பிரமைகள், புலம்பல்கள் உருவாக்கப் படுகின்றன.

இலங்கை இந்தியாவை வென்றிருந்தால் இதை சிங்கள பெருமிதமாகக் காட்டி கொண்டாடும் வாய்ப்பை இலங்கை ஆளும் கூட்டம் இழந்து போனது. இந்த சிங்கள இனவாதத்துக்கு எதிரான தமிழ் உணர்வு, வடக்கில் இந்தியா வென்றதை கொண்டாடியது. சிங்கள இராணுவத்துடன் முறுகிக் கொண்டு கூச்சல் எழுப்பியது. மலையத்தில் தமிழ் சிங்கள மோதல். இலங்கை தோற்க வேண்டும் என்று கருதுமளவுக்கு, அடக்கு முறையின் கருவியாக உணருகின்ற எல்லையில் கிரிக்கெட் ஒரு தேசத்தின் இனம் சார்ந்த போதைப் பொருளாக உள்ளது. இங்கு அது விளையாட்டல்ல.

Read more ...

பாக்கியசாலிகளின் வாழ்வால் எழுதப்பட்ட அந்த அற்புதமான இலக்கியம்

1930.10.17ம் திகதி பகத்சிங்குக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. கூடவே ராஜ்குருவுக்கும், சுக்தேவிற்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.


இற்றைக்கு 80 வருடங்களுக்கு முன்பு இவ் அழகிய இலக்கியம் படைப்பாகியது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிப்பட்டபோது அது பிறந்தது. பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்டவுடன் பிரிட்டிஷ் அரசு இவர்கள் பற்றிய நூல்கள் அனைத்தையும் தடைசெய்தது. தமிழ் நாட்டில் மட்டும் 11 தமிழ் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆனாலும், பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட ஐந்து மாத இடைவெளிக்குள் அவர்கள் பற்றிய புத்தகமொன்று 6தடவைகள் பதிப்பைப் பெற்றிருந்தது. ஆறாவது பதிப்பு மட்டும் 5000 பிரதிகளைப் பெற்றிருந்தது.

Read more ...

கடந்த வரலாற்றில் அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள் நிகழ்காலத்திற்கு ஒருநாளும் ஒளி கொடுக்க முடியாது

 

கடந்து போன எம் வரலாற்று இருட்டுக்கு எதிராக நடைமுறையில் தொடர்ந்து போராட முடியாது அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், புதிய வரலாற்றுக்கு எப்படித்தான் அரசியல் ரீதியாக ஒளிகொடுக்க முடியும்?! மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்?!


இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை. இதைச் செய்யமுனையாத அனைத்தும், தன்னுடன் எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறை உள்ளடக்கியபடி தான் முன்நகர முனைகின்றது. இது இன்று வெளிப்படையான உண்மை.

Read more ...

நடையண்ணை பறைஞ்சா - கதை கேட்டவர் முத்தையா

இன்றைக்கு இருக்கின்ற இந்தச் சமுதாயம் நேற்று இருந்திருக்கேலாது எண்டது விளங்குதோ உனக்கு?


அப்படி விளங்கியிருந்தா சமுதாயம் எண்டா என்னடாப்பன் சொல்லு பாப்பம். தலையைச் சொறியிறது உனக்குத் தொழில். உனக்கு விளங்கப்படுத்த படாதபாடு படுகிறது என்ர தொழில் தம்பி.


மனிசராகப்பட்ட நாங்கள் தனிச்சு வாழலேலாது தம்பி. மற்ற மனுசர்களோட ஒரு ஒழுங்கு முறையுக்குள்ள சேர்ந்து பகிர்ந்து வாழுறது தான் சமுதாயம் எண்டிறம் தம்பி. தனிச்ச மனிசனாக சமுதாயத்தினுடைய எந்தப் பொருளையோ உறவையோ தீண்டாம வாழ ஏலாது தம்பி. நாங்க ஒவ்வொருத்தரும் சீவிக்கிறதுக்கு மற்ற மனிசர் கைபட்டு உருவாகின பொருள் எதையுமே தீண்டாம, மனிசரிட தொடர்ப முற்றுமுழுசாக அறுத்துக் கொண்டு வாழ ஏலாது தம்பி. பிறந்தவுடனேயே தாய்ப்பாலுக்கும் அணைப்புக்கும் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் எண்டு ஆரம்பிக்கிற வாழ்க்கை அதின்ர ஓட்டத்தில மனிசர்களோட சங்கிலித் தொடரா இணைஞ்சு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கோ இல்லையோ?

Read more ...