மக்களுக்கான அரசியலை புதியதிசையில் முன்னெடுக்க யாழ்நகர் மேதினக்கூட்டத்தில் அறைகூவல்
- Details
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
-
02 May 2012
- Hits: 839
ஆட்சி மாற்றத்தால் தமிழர் உரிமை கிடைக்காது மக்களுக்கான அரசியலை புதியதிசையில் முன்னெடுக்கவேண்டும் யாழ்நகர் மேதினக்கூட்டத்தில் அறைகூவல்
இன்றைய மகிந்த சிந்தனை ஆட்சி நீடிப்பதால் தமிழ்,முஸ்லீம்,மலையகத்தமிழ் தேசிய இனங்களுக்கு விடிவு ஏற்படப்போவதில்லை. அதே போன்று ஏகப்பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எவ்வித பொருளாதார அரசியல் விமோசனங்களும் கிடைக்கமாட்டாது. அதேவேளை ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்கள் மாறுவார்களே தவிர இன்றைய பேரினவாத தரகு முதலாளித்துவ ஆட்சி அமைப்தே நீடித்துச் செல்லும்.
NDMLP யாழ்நகரில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் சுருக்கம்
- Details
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
-
23 Apr 2012
- Hits: 894
ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பின்பு நாட்டில் இனங்களுக்கிடையிலான துருவமயப்படுத்தல் செயற்பாடுகள் வேகப்படுத்தப்படுகின்றன. தீவிர பேரினவாத சக்திகளும் மதவாதிகளும் இவற்றில் முன் நிற்கின்றன. இவற்றுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆசிர்வாதமும் வழிகாட்டல்களும் உண்டு.
ஜெனீவா தீர்மானம் : அமெரிக்காவின் உள்நோக்கத்தினை முறியடிக்க இலங்கைக்கு உள்ள ஒரே வழி எது?
- Details
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
-
26 Mar 2012
- Hits: 894
ஊடகங்களுக்கான அறிக்கை 25.03.2012
ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையினதும் யுத்த வெற்றி என்ற மமதையினதும் எதிர்விளைவேயாகும்.
ஊடகங்களுக்கான அறிக்கை -புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி
- Details
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
-
09 Apr 2012
- Hits: 924
ஊடகங்களுக்கான அறிக்கை 09.04.2012ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைப்பதில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த பிரேமகுமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகிய இருவரும் கடந்த ஆறாம் திகதி இரவு வெவ்வேறு இடங்களில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இச்சம்பவத்தைப் புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் அரசியல் குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை இக்கடத்தலும் காணாமல் போயுள்ளமையும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் கட்சி சுட்டிக் காட்டுகிறது.
வெகுஜன எழுச்சியும் போராட்டங்களும் புதிய திசையில் பயணிக்க வேண்டும்.
- Details
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
-
25 Feb 2012
- Hits: 878
நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாகி வருகின்றன அவற்றின் வெளிப்பாடாகவே அண்மையில் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெயின் விலைகளும் மின்சாரக்கட்டணமும் உயர்த்தப்பட்டன. அதன்மூலம் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் போக்குவரத்துக் கட்டணங்களும் தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தொடர்ந்து விலை அதிகரிப்புக்களும் கட்டண உயர்வுகளும் இடம்பெறப்போகின்றன. இவை இன மொழி மத பேதமின்றி அனைத்து உழைப்புக்கும் மக்களுக்கு எதிரானவைகளேயாகும் தமது ஆட்சி அதிகாரத்தை தேவைக்காக மக்களை இனப்பகை மூலம் பிரித்து வைத்தும் பொருளாதார நெருக்கடிகளை எல்லா மக்களின் மீதும் சுமத்தியிருக்கின்றனர். இதனால் தெற்கிலே உழழைக்கும் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.