Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய ஜனநாயக மாக்சிச லெனினசக் கட்சியின் 34வது ஆண்டு விழா பொது கூட்டம்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினசக் கட்சியின் 34வது ஆண்டு விழா பொது கூட்டம் கட்சியின் வடபிராந்திய செயலாளர் கா. கதிர்காமநாதன் தலைமையில் யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி மக்கள் மண்டபத்தில் 2012.08.26 ம் திகதி  இடம்பெற்றது.  இதில் பு.ஜ.மா.லெ கட்சியின் பொதுச் செயலாளர். சி.கா. செந்திவேல், தேசிய அமைப்பாளர் வே. மகேந்திரன், அரசியல் குழு உறுப்பினர்கள் க.தணிகாசலம், சோ. தேவராஜா, புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி உறுப்பினர்கள் த. பிரகாஸ், சு.விஜயகுமார், க.சீலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Read more ...

திருமுருகண்டி போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கிறது NDMLP

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 26.06.2012 அன்று திருமுருகண்டியில் மக்களது மீளக்குடியமர்வை வலியுறுத்தியும் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் நிலப் பறிப்பு நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரியும் சிறைகளில் இருந்து வரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வற்புறுத்தியும், காணாமல் போனோர் பற்றிய விபரங்களை வெளியிடுமாறும் கோரி நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி தனது பூரண ஆதரவைத் தெரிவிப்பதுடன் மேற்படி போராட்டத்தில் கலந்தும் கொள்கிறது.

Read more ...

சரத் பொன்சேக்காவுக்கு விடுதலை; அரசியற் கைதிகளுக்கு ஏனில்லை?

அரசியல் பழிவாங்கலுக்காகத் தடுத்து வைக்கப்பட்டு நீதி மன்றத் தீர்ப்புகள் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமானால் ஏன் நீண்ட பல வருடங்களாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியாது?

அந்த வகையில் தமது விடுதலைக்காக நீதி கோரி கடந்த 5 நாட்களாகச் சிறைகளில் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமானவையாகும். அவர்களின் விடுதலைக் கோரிக்கையை அரசாங்கம் முழுக் கவனத்தில் கொண்டு உடன் விடுதலைக்கு ஆவன செய்தல் வேண்டும்.

Read more ...

அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு, நில பறிப்பு மற்றும் பாசிசப் போக்கு குறித்து கண்டனம் - NDMLP

வடக்கு கிழக்கில் இடம் பெற்று வரும் நில அபகரிப்பு, நில ஆக்கிரமிப்பு என்பனவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று முன்தினம் யாழ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தைப் பொலிசார் நீதிமன்ற ஆணை பெற்றுத் தடுத்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத மக்கள் விரோதச் செயற்பாடேயாகும். பொலிசாரின் இந்நடவடிக்கை வடக்கு கிழக்கில் ஜனநாயகம் சுதந்திரம் இயல்பு வாழ்கை என்பன தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதன் எதிரொலியே ஆகும்.

Read more ...

ஹட்டன் மேதினத்தில் மலையக மக்களை தேசிய இனமாக அங்கிகரிக்க வலியுறுத்தி முழக்கம்

கீழ்வரும் கோரிக்கைகளை முன்னிறுத்தி புதிய ஐனநாயக மாக்சிய லெனிய கட்சியின் மேதினம் ஹட்டனில் நடந்தது.


1)மலையக மக்களை தேசிய இனமாக அங்கரித்து சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
2)வாழ்க்கை செலவுக்கு ஏற்ப நியாமான சம்பள அளவுத்திட்டம் உறுதி செய்யப்பட  வேண்டும்.

Read more ...

Subcategories