Sat11262022

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையின் அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!

சமவுரிமை இயக்கம் தனது பிரதான நோக்குகளில் ஒன்றான அனைத்து அரசியற்கைதிகளையும் விடுதலை செய் என்ற கோரிக்கையை முன்வைத்து தனது போராட்ட நடவடிக்கைகளை இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் முன்னெடுத்து வருகின்றது. அதன் நீட்சியாய் அனைத்து அரசியற்கைதிகளுக்குமான விடுதலையைக் கோரி கனடிய சமவுரிமை இயக்கம் முன்னெடுக்க இருக்கும் போராட்ட நிகழ்வில் உங்களையும் கலந்து ஆதரவளிக்குமாறு கோருகின்றது.

30 வருடகாலமாக நீடித்த உள்நாட்டு யுத்தம் 2009 ம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இக் கொடிய அழிவு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 7 வருடங்கள் உருண்டோடிவிட்ட பின்னரும் கூட, சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியற்செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்கிய அரசியற்கைதிகள் கொடூரமான அவசரகால தடுப்புச்சட்டத்தின் கீழ் எந்தவொரு நீதிவிசாரணையும் இன்றி நீதிக்குப் புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Read more ...

சமவுரிமை இயக்கம் இனவாதத்திற்கு எதிரான பிரச்சாரம் (படங்கள்)

"எந்த வகை ரத்தமானாலும், மிதிபடுவது சேர்ந்தே நித்தம்" என்ற  இனவாதத்திற்கு எதிரான துண்டுப்பிரசுரம் இன்று கொழும்பு நகரில் விநியோகிக்கப்பட்டது. சமவுரிமை இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவீந்திர முதலிகே அவர்கள் தலைமையில் துண்டுப்பிரசுர விநியோகம் நிகழ்ந்ததுடன் மக்களுடனான இனவாதத்திற்கு எதிரான கலந்துரையாடலும், ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றது.

Read more ...

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றமை சம்பந்தமாக – ஊடக அறிக்கை

இம்முறை நடைபெறவிருக்கும் சுதந்திர தின விழாவில் தேசிய கீதத்தை சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மக்களின் சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ள நிலையில் சுதந்திர தினத்தை நினைவு கூறுவது ஒரு புறம் கேலிக்கூத்தாகும். ஆகவே போலி சுதந்திர தினம் தொடர்பில் கடுமையான விமர்சனம் எமக்கு உண்டு. மேலும் தமிழ் மொழி பேசும் மக்கள் எதிர்கொண்டுள்ள தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அவர்களை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்திற்கு பின்பு சரிந்திருக்கும் வடக்கு மக்களின் வாழ்க்கையை மீளமைப்பதற்கும், அம்மக்கள் மத்தியில் உருவாகியுள்ள சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையை களைவதற்கும் எடுக்க வேண்டிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. சகல அரசியல் கைதிகளினதும் விடுதலை, காணாமல்போன சகலரினதும் தகவல்களை வெளியிடுதல், மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட காணிகளை அவர்களிடம் மீள ஒப்படைத்தல் ஆகியன முக்கிய விடயங்களாக உள்ளன. என்றாலும் அந்த விடயங்கள் சம்பந்தமாக அரசாங்கம் ஊமையாகவே இருக்கின்றது.

Read more ...

எந்த வகை ரத்தமானாலும் மிதிபடுவது சேர்ந்தே நித்தம்

ஐந்து நிமிடங்களை ஒதுக்கி இதனை முழுவதுமாக வாசியுங்கள்.

சமீபத்தில் அந்த இரத்தம், இந்த இரத்தம் என்று சொல்லி லேபல் ஒட்டிக்கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இலங்கையில் பல்வேறு இன மக்கள் இருப்பதை நாம் அறிவோம். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர், மலே ஆகிய அனைவரும் இலங்கைக் குடிமக்கள். நாங்கள் அனைவரும் ஒரே கடைக்குத்தான் செல்கின்றோம். ஒரே ஆஸ்பத்திரிக்குத்தான் செல்கின்றோம். ஒரே பஸ்ஸில், ஒரே இரயிலில் செல்கின்றோம். எமது பிள்ளைகள் ஒரே பாடசாலையிலேயே கற்கின்றனர். ஒரே பாடநெறியையே படிக்கின்றாரகள். அரிசி, மா, சீனி, பால்மா போன்றவற்றின் விலைகள் உயரும்போது சிங்களவருக்கு ஒரு விலையிலும், தமிழருக்கு ஒரு விலையிலும், முஸ்லிம்களுக்கு ஒரு விலையிலும், பறங்கியருக்கு ஒரு விலையிலும் மலே இனத்தவருக்கு இன்னொரு விலையிலும் விற்கப்படுவதில்லை. ஆஸ்பத்திரி ஓ.பி.டீ.யில் அலையும்போதும், பாமஸியில் மருந்தை வாங்கும்போதும் அப்படித்தான். பாடசாலையில் வசதிக் கட்டணம் செலுத்தும்போதும், பஸ்ஸில் டிக்கட் வாங்கும்போதும், டிஸ்பென்சரியில் ஊசி போடும்போதும் - இந்த எல்லா இடங்களிலும் நாம் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்று யாரும் கேட்பதில்லை. சற்று சிந்தியுங்கள்.

Read more ...

யாழில். மக்கள், அரச எதிர்ப்பு போராட்டம்!

இன்று காலை 10 மணிக்கு யாழ் பஸ் நிலையத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், அரசியல் கைதிகளின் உறவினர்களும் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளிற்காக போராடுபவர்களும் சமவுரிமை இயக்கத்துடன் இணைந்து அரசிற்கு எதிரான தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொணடனர்.

Read more ...