Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

சம உரிமை இயக்கத்தின், சர்வதேச மனித உரிமைகள் தின லண்டன் கூட்ட செய்தி

நேற்றைய தினம் (15/12/2013) சம உரிமை இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மனித உரிமை தின கூட்டம் லண்டன் கரோ பகுதியில் இடம் பெற்றது. சீரற்ற காலநிலை நிலைவிய போதும், அறுபதிற்கும் அதிகமானவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் இலங்கையில் இடம்பெற்ற சகல அடக்கு முறைகளிற்கும் எதிராக போராடி மரணித்த போராளிகளிற்கும் பொது மக்களிற்கும் இரு நிமிட மௌன அஞ்கலியுடன் கூட்டம் ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து சமஉரிமை இயக்கத்தின் சார்பில் தோiர்கள் சீலனும் நுவானும் முறையே தமிழிலும் சிங்களத்திலும் உரையாற்றினர்.

இதனை தொடர்ந்து தோழர் சிவலிங்கம் அவர்கள் புலம்பெயர் இலங்கையர் மத்தியில் சம உரிமை இயக்கத்தின் அவசியம் குறித்து உரையாடினார் இதனை தொடர்ந்து தோழர் பவுசர் அவர்கள் சம உரிமை இயக்கத்தின் தேவை குறித்தும் அதில் அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினர்.

சட்டத்தரணியும், மனித உரிமைவாதியுமாக பிரின்ஸ் குணசேகரா அவர்கள் 90களில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த தனது அனபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் இலங்கையில் மனித உரிமைக்காக போராட வேண்டியதே இன்றைய உடனடித் தேவை என வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய போராசிரியர் கணேசன் அவர்கள், இன்றைய சர்வதேச பொருளாதார கட்டமைப்பு மற்றும் உலக பொருளாதார நெருக்கடி குறித்தும் அது எவ்வாறு 90 வீதத்திற்கும் அதிகமான மக்களை உலகெங்கும் பாதிப்புக்கு உள்ளாக்ககியுள்ளது, இதன் தாக்கம் இலங்கையில் எவ்வாறு எதிரொலிக்கின்றது என்பது குறித்து மிகவும் சிறப்பான ஆய்வு ஒன்றினை வழங்கினார்.

தொடர்ந்து உரையாற்றிய புதிய திசைகள் அமைப்பினை சேர்ந்த தோழர் பாலன் அவர்கள, மகிந்தா அரசு சொல்கின்ற சம உரிமையும் இந்த சம உரிமை இயக்கமும் ஒன்றல்ல. இது வித்தியாசமானது. இந்த சம உரிமை இயக்கத்தின் செயற்பாடுகளிற்கு தமது அமைப்பின் ஆதரவு எப்போதும் உண்டென்றும், இந்த அமைப்பு ஆரம்பமே மேலும் வளர்த்து முன்னெடுத்து செல்லப்படுவது அவசியம் என கருத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஸ்கைப் மூலமாக சம உரிமை இயக்கத்தின் பொறுப்பாளர்களாக செயற்படுகின்ற தோழர்கள் ரவீந்திர மதலிகே அவர்களும் யுட் பெர்ணான்டோ புள்ளே அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.