Sun02282021

Last updateSun, 19 Apr 2020 8am

மலையத்தில் நிகழ்ந்த மக்களின் வீரம் செறிந்த போராட்ட அனுபவங்களிலிருந்து, மாற்று அரசியலை முன்னெடுப்போம்.

மலையக மக்களின் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளின்    அடையாள சின்னங்களாக விளங்குபவை பல. ஆனால் மலையக மக்களின் போராட்ட மார்க்கத்தை வெளிப்படுத்தியது சிவணு லெடசுமன் போராட்டமே.

மலையக வரலாற்றில் எத்தனையே போராட்டங்கள் நடந்துள்ளன. தோட்டத் துரைமார்களின் அடாவடித்தனதை, கறுப்பு கங்காணிமார்களின் துரைத்தனத்தை எதிர்த்து, தொழிற்சங்கள் அமைப்பதற்கான போராட்டம் எனப் பல போராட்டங்கள் நடந்துள்ளன. இவை எல்லாம்  தடம் பதித்தவை. இப் போராட்டங்கள் மலையக மக்களின் வர்க்க உணர்வுகளையும், வர்க்க ஐக்கியத்தையும் மலையக மக்களின்   இருப்பு சார்ந்த போராட்டமாக அமைந்துள்ளது.1977ஆம் ஆண்டு நுவரெலியா மஸ்கெலியா தொகுதியில் 7000 ஏக்கர் காணியினை அரசாங்கம் சுவிகரித்து நிலமற்ற கிராமவாசிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக நடவடிக்கை எடுத்தது. அன்றைய ஆட்சிபீடத்தில் சிறிலங்க சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெருந்தோட்ட காணிகளை சுவிகரிக்க மும்முரமாக ஈடுபட்டது. இதனால் சுமார் பத்தாயிரம் தோட்டத் தொழிலாளாகளின் வாழ்வு, தொழில், சொந்த மண் என்பனவற்றை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை எதிர்த்து பல தொழிற்சங்ககள் போராட்டத்தில் இறங்கின. தொழிற்சங்கம் கட்சி பேதமின்றி கலந்து கொண்டனர்.

இதனை கவனத்தில் எடுக்காத அரசாங்கம் 7000 ஏக்கர் காணியை அளவெடுப்பதற்கு அதிகாரிகளை அனுப்பியது. அதனை தொழிலாளாகள் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்தினர். பின்னா அரசாங்கம் பேச்சுவாhத்தைக்கு அழைத்து     கலந்துரையாடி காணி சுவிகரிப்பை நிறுத்துவதாக வஞ்சகமாக நாடகமாடியத

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த வேளையில் போலிஸாரின் உதவுயுடன் பத்தனை டெவன் தோட்ட காணியை அளக்க அதிகாரிகள் வந்த போது தொழிலாளர்கள் எதிர்த்து ஒன்றுபட்டு போராடினார்கள்.  இதனை மறுபக்கதிலருந்து பார்த்த வட்ட கொட தொழிலாளாகளுடன் இணைந்து வந்த சிவணுலெட்சுமன் டெவன் ஆற்றை கடந்து வந்து  போராட்டத்தில் கலந்து கொண்டார். தொழிலாளாகளுக்கும், போலிஸாருக்கும் வாய் தகராறு முற்றி போலிஸார் துப்பாக்கி ஏந்தினர். அதனையும் எதிர்த்து தொழிலாளர்கள் அணிதிரணடு நின்றனர். ஆத்திரமடைந்த போலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.   

துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட ரவைகள் சிவணுலட்சுமனின் மார்பை துளைத்ததன. குருதி சிந்தி அதே இடத்தில் வீரமரணமடைந்தார் சிவணுலட்சுமன். உடலை போலிஸார் எடுத்துச் சென்று பின்னர் மக்களிடம் ஒப்படைத்தனர். அவரின் மரண ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் பங்குபெறாத மலையகத்தின் பெரிய தொழிற்சங்கங்கள் எல்லாம் கலந்த கொண்டன. தங்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.

இப்போராட்டத்தில் கவனிக்க வேண்டிய பலவிடயங்கள் உள்ளன. தனிப்பட்ட தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரமல்ல, சிங்களத் தொழிலாள வர்க்கமும்  கலந்து கொண்டமையாகும். அத்துடன் இலங்கை முழுவதிலிருந்தும் ஆதரவுகள் வந்து சேர்ந்தன. தொழிலாளாகள் மாத்திரமின்றி புத்திஜீவிகள், மாணவர்கள், கடை உரிமையாளாகள், சிப்பந்திகள், வாகன ஓட்டுனர்கள் போன்ற பல தரப்பினரும் கலந்து கொண்டனர்.

ஹட்டன் ஹலன்ஸ் கல்லூரி மாணவர்கள் ஹட்டன் நகரில் சிவணுலட்சுமன் போராட்ட நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து நடத்திய உணர்வு பூர்வமான போராட்த்தில் போலிஸாரின் அடக்குமுறை தாணடவமாடியது. போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் நையப்புடைக்கப்பட்டனர். அவர்களுக்கு வைத்தியசாலை அனுமதியும் மறுக்கப்பட்டது. அப்பேராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாணவத் தலைவர்கள் இன்றும் அதனைப் பற்றி நினைவு கூறுகின்றனர். அது அனைத்து மக்களின் போராட்டமாக அமைந்தது. மாணவர்கள், மலையக மக்களின் வர்க்க உணர்வினை கட்டியெழுப்பக் கூடிய வகையில் போராடினர்.

அடிபட்டோம், இரததம் சிந்தினோம்,  எங்கள் போராட்டம் விட்டுக் கொடுப்பிற்கும், சமரத்திற்கும் இடமில்லாமல் அமைந்தது, என அப்போராட்டத்தில் தலைமை தாங்கிய மணவர் ஒருவர் குறிப்பிடுகின்றார். "சங்களுக்காக செத்தது போதும், இனி எங்களுக்காக சாவோம்" என எழுதப்பட்ட முதல் அத்தியாயம் சிவணுலடசுமன், என மலையக மத்திய தரவர்க கவிஞன் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவணு லட்சுமனின் போராட்ட மரணம் மலையகத்தில் புதிய போராட்ட மார்க்கத்தனை வெளிப்படுத்தியது. தொழிலாளர்கள் ஐக்கியப்பட வேண்டும், ஒற்றுமையுணர்வுடன் போராடவேண்டும் என்ற சிந்தனை வெளிப்பட்டு நிற்பதனை அவதானிக்கலாம்.

எமக்காக வானத்திலிருந்தோ, இந்தியாவிலிருந்தோ, அமெரிக்காவிலிருந்தோ யாரும்வர மாட்டார்கள். எமது உரிமைளுக்காக எமது மண்ணில் கால்பதித்து வாழ்ந்து வரும் நாம் தான் போராட வேண்டும். என்ற யதர்த்தை வெளிப்படுத்தியது சிவணு லட்சுமனின் போரட்டமாகும். பொது வேலைதிட்டத்தின் கீழ் மலையக தொழிலாளர்கள், புத்திஜீவிகள், மத்தியதர வர்க்கதினர், ஆசிரியர்கள், கடை உரிமையாளர்கள், சிப்பந்திகள், வகன ஒட்டுனர்கள் அனைவரும பொது வேலைத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும். இந்த முடிவினை, மலையகத்தில் நடந்த கடந்த கால போராட்டங்களின்  அனுபவ உரைகல்லாக எடுத்துக் கொள்ளலாம்.   

இந்திய வம்சாவளியினர் என்ற அடையாளத்தை நிராகரித்து, மலையக மக்கள் நிலையில் நின்று  அவாகளின் தேசிய அடையாளங்களை வளர்தெடுப்பதற்கான போராட்டமாகவும் பார்க்கலாம். ஏனெனில் வடக்கு- கிழக்கு தமிழ் தேசிய போராட்டம் முளைவிட்ட போதே அது இந்திய நலன்களை சார்ந்தும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அரவணைத்தும் சென்றது. அதன் இறுதி விளைவானது எங்குபோய் முடிந்தது என்ற பட்டறிவினை விளங்கிக் கொண்டால் சிவணு லட்சுமனின் போராட்டத்தினை  விளங்கிக் கொள்வதில் சிரமிருக்காது.

தமது சுயத்தை இருப்பை அடையாளத்தை  விட்டுக் கொடுக்காத மலையக மண்ணின் மக்களை அணிதிரட்டிய போராட்டமாக விஞ்ஞான ரிதியாக பார்க்கலாம். இதே சிவணு லட்சுமன் இறந்த இடத்தில் மலையக மக்களுக்கு அழிவை தரமக்டகூடிய மேல்கொத்மலை திட்டத்தை எதிர்த்து மேல்கொத்மலை திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பியக்கம்  போராட்டத்தினை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. (அப்போராட்டமும் பதவிகளுக்காக காட்டிக் கொடுக்கப்பட்டது. அது வேறு கதை)


இன்று ஏகாதிபத்திய உலகமயமாக்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை கொண்டு வரப்பட்ட பின்னர், மலையக மக்கள் மீதான அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் குறைவேயில்லை. இருக்கின்ற தொழிற்சங்கள் மரபு பரம்பரியத்திலிருந்து மாறவில்லை. தவிரவும் மலையகத்தில் தோட்டத் தொழிலாளிகள் போக புதிய வகுப்பு சார்ந்த சமுகஅமைப்பு உருவாகி வருகின்றது. அத்துடன் இச்சமுகதிலிருந்து உருவாகிவ ரும் மத்திய வகுப்பானது, சமுக  அரசியல் பண்பாட்டுத்தளத்தில் தாக்கத்தினை செலுத்தி வருகின்றது. இதனை கவனத்தில் எடுத்து சிவணு லெட்சுமனனின் போராட்ட அனுபவங்களை உள் வாங்கி மாற்று அரசியலுக்கான ஐக்கியப்பட்ட அமைப்புடன் முன்நோக்கி செல்வதே அவரின் போராட்டத்திற்கு கொடுத்த விலையாக அமையும்

--குருநாதன் (19/05/2012)