Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

எங்கே சுதந்திரம்? - கொழும்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக் கூட்டம்

"ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காக பொய்யான சுதந்திரதின நாளில் குரல் கொடுப்போம்!" என்ற முழக்கத்தை முன்வைத்து போலி சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கி ஆர்ப்பாட்டமும் பகிரங்க கூட்டமும் இன்று கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு அருகே இடம்பெற்றது. இந்நிகழ்வினை தோழிற்சங்கங்களும் னைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கூட்டாக ஒழுங்கு செய்திருந்தன.

மக்கள் பணத்தை வீணடித்து கறுப்பு ஆட்சியாளர்கள் சுதந்திர தினம் கொண்டாடுகின்றார்கள். உண்மையில் இது போலி சுதந்திரம். சுதந்திரத்தின் பெயரால் முதலாளித்துவ ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியவாதிகளுடன் இணைந்து கொள்ளையிட ஆளும் வர்க்கத்திற்கு மட்டுமே வழங்கப்பட்ட சலுகை. 

நாடடின் பெரும்பான்மை மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வாழ்கிறார்கள். அன்றாட உணவுக்கே கஸ்டப்படுகிறார்கள். அரசு நாட்டின் அனைத்து வளங்கள், நிலங்களை  விற்பனை செய்கின்றது. மக்களுக்கு நீதி கிடையாது. சுற்றுச் சூழல் பற்றி அக்கறை கிடையாது. சிறுபான்மை இன மக்களின் துயரங்களிற்கு தீர்வு கிடையாது. உரிமை மற்றும் நீதி கேட்பவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

கல்வியை தனியார் மயமாக்கி விற்பனை செய்யப்படவுள்ளதற்காக போராடும் மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர சட்டத்திற்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போராடும் உரிமை மறுக்கப்படுகின்றது. 

தொலைத்தொடர்பு ஊழியர்கள் தமது தொழில்களை நிரந்தரமாக்கக்கோரியும் மற்றும் தொழிலாளர் உரிமைகளை வலியுறுத்தியும் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒருவர் இனம்தெரியாத ஆயுததாரிகளஜினால் கடத்தப்பட்டு 3 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு போராட்டத்தை கைவிடுமாறு அச்சுறத்தப்பட்டுள்ளார். அரசு சட்டத்திற்கு முரணாக கூலிப்படைணை கொண்டு போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்துகின்றது. 

காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. மக்களது குடியிருப்பு நிலங்கள் பலவந்தமாக பறிக்கப்படுகின்றன. நீத்துறையின் குரல்வளையை நெருக்கி பிடித்து மக்களின் உரிமைகளை மறுதலிக்கும் சட்டங்களை இயற்றி மக்களை அடக்கி ஒடுக்க சகல தாயாரிப்புகளுடனும் உள்ளது. 

இந்த நாட்டின் மக்கறுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. எனவே  முற்போக்கான அரசியல்க ட்சிகள், வெகுஜன அமைப்புகள்  கூட்டாக அணி சேர்ந்து மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என பகிரங்க கூட்டத்தில் உறுதி எடுக்கப்பட்டது.