Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

மலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரித்தை எவ்வாறு வழங்கலாம்?

மலையக மக்களுக்கு காணி உரித்துடனான வீட்டு உரிமையை உறுதிப்படுத்தக் கோரி மக்களின் பங்குபற்றலுடன் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களும் பரப்புரைகளும் இடம்பெற்றன. சில மலையக பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் இதற்கு குரல் கொடுத்தனர். இப்பின்னணியில் மீரியபெத்த அவலம் மலையக மக்களின் ஏற்படுத்திய காணி, தனி வீட்டு உரிமைக்கான எழுச்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் இருவரையுமே மலையக மக்களின் வீட்டுரிமை பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பேச வைத்தது.

Read more ...

பெருந்தோட்ட பாடசாலைக்கான ஆசிரியர் நியமனத்தில் பல குளறுபடிகள்

பெருந்தோட்ட பாடசாலைக்கு வழங்கப்பட இருந்த 3026 ஆசிரியர் உதவியாளர்கள் நியமனங்களில் 1688 நியமனங்கள் மாத்திரமே 08.05.2015ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளன. இதில் மீதமுள்ள நியமனங்கள் வழங்கப்படுமா, அப்படி வழங்கப்படுமாயின் எப்போது வழங்கப்படும் என்பது தொடர்பில் கல்வி அமைச்சோ கல்வி இராஜாங்க அமைச்சோ உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.

Read more ...

பாதுகாப்பான இடங்களில் 20 பேர்ச் காணியுடன் தனி வீடு வேண்டும்: மக்கள் தொழிலாளர் சங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பாதுகாப்பான இயற்கை அனர்த்தம் ஏற்படாத இடங்களில் 20 பேர்ச் காணி ஒதுக்கிக் கொடுக்கப்பட்டு அதில் வாழ்வதற்கேற்ற வசதிகளுடன் கொண்ட தனி வீடு கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் அல்லது வீடுகளை கட்டிக் கொள்வதற்குகேற்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி கூறுவதுடன் இது மக்கள் தொழிலாளர் சங்கத்தினது கோரிக்கை மட்டுமன்றி பல தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தனிநபர்கள் அங்கம்வகிக்கும் பெருந்தோட்ட நடவடிக்கை குழுவினது கோரிக்கையுமாகும் என்பதையும் எடுத்தக் காட்டியுள்ளது.

Read more ...

பெருந்தோட்டக் கம்பனிகள் கடந்த சில வருடங்களில் பல கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளன.

19 பெருந்தோட்டக் கம்பனிகள் 2014ஆம் ஆண்டில் தேயிலை, இறப்பரில் 2850 மில்லியன் நட்டத்தை அடைந்துள்ளதாக தோட்டத்துறைமார் சம்மேளனத்தின் தலைவர் ரொசான் ராஜதுரை அவர்களை மேற்கோள்காட்டி ஆங்கில நாளேடுகளில் செய்திகள் வெளியாகி இருந்தன. அதில் இந்த விடயத்திற்கு மேலாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் நிலையில் கம்பனிகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்து.

Read more ...

வீடு, காணி, சம்பள உரிமைகளை வென்றெடுக்க பலமான தொழிற்சங்கத்தைக் கட்டுவோம். மக்கள் தொழிலாளர் சங்க மே தின அறைகூவல்!

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மே தினக் கூட்டமும் கருத்தரங்கும் வீடு காணி சம்பள உரிமைகளை வெற்றெடுப்போம் என்ற தொனிப்பொருளில் காவத்தை கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் காலை 10 மணி முதல் இடம்பெற உள்ளதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா குறிப்பிட்டுள்ளார்.

மேதினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் எட்டு மணித்தியாலம் மட்டுமே வேலை நேரம் என்ற உரிமையை வென்றெடுத்த தொழிலாளர் போராட்ட மேதினத்தை நினைவூட்டும் இவ்வேளையில் அவ்வுரிமையை இழந்து விட்ட நாம் இன்று பல மணிநேரம் ஓய்வின்றி வேலை செய்து மாய்கிறோம். ஆரம்பத்தில் காடு வெட்டி மேடு திருத்தி பெருந்தோட்டங்களை அமைத்து பிரிட்டிஷ் கம்பனிகளுக்கு உழைத்த கொடுத்த பரம்பரைகள் இன்றில்லை. பின்னர் அரச நிறுவனங்களுக்கும் உழைத்து கொடுத்த பரம்பரைகள் போய், இன்று பெருந்தோட்ட பல்தேசிய கம்பனிகளுக்கும் சிறுதோட்ட உடைமையாளர்களுக்கும் உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். எமது பரம்பரையான வர்க்க அடையாளம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்பதாகின்ற அதே வேளை எமது அதிகப் பெரும்பான்மையினரின் இன அடையாளம் மலையகத் தமிழர்களே.

Read more ...