Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழும் வெளிநாடு சென்ற உழைப்பாளிகள்

பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் ஏங்கித் தவிக்கும் மக்களே, வேதனையிலும் விரக்தியிலும் மூழ்கியுள்ள மக்களே, ஒன்றுமே நடக்கவில்லை என்பதை போன்று அடுத்தநாள் எல்லாவற்றையும் மறந்துவிடும் மக்களே! இது எமது கண்ணில் படாத அல்லது நாங்களாகவே மறந்துவிட்ட எமது தோழர்களினதும் தோழிகளினதும் பரிதாப நிலையாகும்.

மஸ்கெலியாவைச் சேர்ந்த வசந்தகுமாரின் மனைவி பீ.கே. தர்ஷனீ தோட்டத் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத்தை பராமரிக்கப் போதாமையால் வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக சவூதிக்கு செல்ல தீர்மானித்தார். நாளொன்றிற்கு 600 ரூபா சம்பளத்திற்கு கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களின் வாழ்வில் சொத்து சுகம் என்ற வார்த்தை எட்டிக் கூட பார்ப்பதில்லையல்லவா. இந்த நிலைதான் தர்ஷனிக்கும். ஒரு பிள்ளையின் தாயான தர்ஷனீ அடிமைத் தொழிலுக்குச் சென்று சீல் வைக்கப்பட்ட பெட்டியில் வெறும் எலும்புக் கூடாக இந்நாட்டிற்கு வர நேருமென்று குடும்பத்தவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதுதான் நடந்தது. தான் கர்ப்பமுற்றிருந்த சமயத்தி;ல் கணவன் பட்ட கடனை திருப்பிச் செலுத்த முடியாமையாலும், தோட்டத் தொழிலாளியான அவரது கணவருக்கு கிடைக்கும் சொச்ச சம்பளத்தைக் கொண்டு குடும்ப செலவீனங்களை பூர்த்திசெய்ய முடியாமையினாலும் குடும்பத்தை சுமப்பதற்கு ஓரளவாவது ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவர் பணிப்பெண்ணாக சவூதிக்குச் சென்றார்.

Read more ...

"மத்திய கிழக்கு அடிமை உழைப்பை தடுத்து நிறுத்தும் வரை போராடுவோம்!" மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

அரசு தனது பொருளாதார கொள்கைக்காக மலையக பெண்களை மட்டுமன்றி நாட்டில் அனைத்து பிரதேச பெண்களையும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பில் ஈடுப்படுத்த அனுப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி மஜ்கெலியா நகரில் சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று (2/4/2017) ஈடுபட்டிருந்தனர்.

அண்மையில் மஸ்கெலியா பிரதேசத்தில் மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிப்பெண்ணாக சென்று பிணமாக கொண்டு வரப்பட்ட மொட்டிங்கஹம் தோட்டம், பிரவுன்ஸ்விக் என்ற முகவரியில் வசித்த கந்தையா தர்ஷனி குடும்பத்தாரையும், மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரிந்து பாதிக்கபட்ட மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த பெண்களுடைய குடும்பங்களையும் இணைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read more ...

பெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோள்

கால நிலை அனர்தனத்தால் பாதிக்கப்பட்ட, நாட்டின் சில பகுதிகளிலும்- விசேடமாக மலையகத்திலும், பெண்கள், குழந்தைகளின் விசேட தேவைகளை நிவர்த்தி செய்யும் முகமாக பெண்கள் விடுதலை இயக்கம் உதவிப் பணிகளின் ஈடுபட்டுள்ளது. பெண்கள் விடுதலை இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று நோர்வே, சுவிஸ், லண்டன்  மற்றும் பாரிஸ், கனடா  தோழர்களின் குடும்பங்கள் ஆரம்ப தேவைக்கான சிறு உதவியை செய்துள்ளனர். மற்ற தோழர்களும் கருணை கூர்ந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read more ...

வெளிநாடுகளிற்கு அடிமைத் தொழிலாளர்களை கடத்துவதை நிறுத்து!- சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பு

வெளிநாடுகளிற்கு இலங்கை பெண்களை அடிமைகளாக கடத்துவதற்கு எதிராக சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. வெளி நாடுகளிற்கு அடிமை வேலையாட்களாக சென்று பாதிக்கப்பட்ட பெண்கள், அவர்களது உறவினர்களை இணைத்து 21ம் நூற்றாண்டின் புதிய பெண்கள் அடிமை வியாபாரத்திற்கு எதிராக ஊடகவியலாளர் சந்திப்பினை இன்று 06-01-2017 கொழும்பில் நடாத்தியுள்ளது.

Read more ...

சர்வதேச பெண்கள் தின பிரச்சாரம்- கொழும்பு (படங்கள்)

இன்று (08.03.2016) சர்வதேச பெண்கள் தினமான  பங்குனி 8ம் திகதியினை கொண்ட்டாடும் முகமாக "பெண்கள் விடுதலை இயக்கம்" கொழும்பு பிரதேசத்தில் பெண் விடுதலை பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னெடுத்தது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாகவும் இதனை அண்டிய வீதிகளிலும் இந்த பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  பெண்கள் மீதான அடக்குமுறைகளிற்கு எதிராக போராட அழைப்பு விடுக்கப்பட்டதுடன், பெண் விடுதலை குறித்த பிரச்சினைக்கு சரியான தீர்பு சம்பந்தமாக சமூகக் கருத்தாடலை தொடங்குவதற்காக "எதிர்காலத்திற்காக போராடுவோம்" என்ற தொனிப்பொருளிலான  வீதி நாடகம், பாடல்கள், தெருமுனை கூட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

Read more ...