கொடியிலுள்ள சிங்கம், பத்திரகாளியம்மன் வாகனம் ----ஞானப்பால் அருந்தினார்
- Details
- Parent Category: ROOT
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
11 May 2012
- Hits: 2286
சம்பந்தர் ஜயா, கொடி பிடித்த விடயம் கூட்டமைப்பினரிடம் தமது வாக்கு வங்கியை சரித்து விடுமோ என்ற பீதியைக் கிளப்பி விட்டுள்ளது. இந்தப் புரளியோடு அம்மனின் வாகனம் சிறிலங்கா கொடியிலிருப்பதாய், தமிழரசுக்கட்சி நந்திக்கடல் வரைக்கும் சொல்லாத விடயம் சம்பந்தர் அந்நியப்பால் குடித்தவுடன் வெளிவரும் ஞாநோதயத்தைப் பாருங்கள்.
“நான் நேசிக்கும் ஒரே கொடி சிங்க கொடிதான். இந்த கொடியை வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த குழுவில் ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக்கொண்டிருந்தார். தமிழரசுக்கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை . இந்த கொடி என்னுடைய மிக விருப்பத்திற்குரிய கொடி. சிங்கம் தான் பத்திரகாளி அம்மனின் வாகனம். எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார்.”