மகிந்தாவெனும் "இனவாத புற்று நோயாளி"
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 24 January 2014
- Hits: 822
மகிந்தா யாழ் வந்தார். தெல்லிப்பளையில் நடைபெற்ற புற்றுநோய் சிகிச்சை வைத்தியசாலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். வடமாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டார். இருவரும் ஒரே மேடையில் பரஸ்பரம் கருத்து மோதலில் ஈடுபட்டனர். யாழிற்கு வந்த மகிந்தா தானொரு "இனவாத புற்றுநோயாளிதான்" என நிரூபித்து சென்றுள்ளார்.
மலையக மக்களின் “முகவரி” பற்றிய பிரச்சினை: விஜயகுமார்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 22 January 2014
- Hits: 1377
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் மூன்றாவது தீர்மானம் மார்ச் மாதம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது இலங்கை அரசாங்கத்திற்கு பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிப்பதாக அமைவதோடு ஆட்சியாளர்களிடத்தில் போர்க்குற்ற பீதியையும் வலுத்துள்ளது. இந்நிலையில் வழமை போலவே சர்வதேச அழுத்தங்களை தமது அரசியல் ஸ்திரத்துக்கு பயன்டுத்துவதற்கு ஏற்ற வகையில், மார்ச் மாதம் கடைசியில் தேர்தல் வரும் வகையில் மேல் மற்றும் தென் மாகாண சபைகள் அதன் ஆட்சி காலம் முடிடைவதற்கு முன்னமே கலைக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச நெருக்கடிகளுக்கு முகம் கொடுப்பதற்கு உள்ளூரில் தமக்கு கிடைக்கும் தேர்தல் வெற்றிகளை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளமையும் கவனிக்கத்தக்கது. எனவே ஜனாதிபதி அண்மைகாலமாக பல கூட்டங்களிலும், விழாக்களிலும் கலந்து கொண்டு பரப்புரைகளை செய்து வருகிறார். அண்மையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி தமது அரசாங்கத்தின் வீதி அபிவிருத்தி உட்பட ஏனைய அபிவிருத்திகள் யார் தடை விதித்தாலும் தொடரும் என்று குறிப்பிட்டதோடு தனது அரசாங்கத்தின் கீழ் ஹெரோயின், எத்தனோல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தோடு நுவரெலியாவில் நடந்த பொங்கல் விழாவில் தோட்டங்கள், கிராமங்கள், நகரங்கள் என்று இல்லாமல் எமது அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்ளும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ் இந்து மாணவன் யதுசனின் மரணம் ஒரு அரசியல் கொலை!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 18 January 2014
- Hits: 1993
மறைந்த போராளிகளிற்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஒரு மாணவனை, தமிழ்ச் சமுதாயத்திற்காக தம்முயிரை துறந்தவர்களை நினைவு கொண்டதற்காக தாய், தந்தையின் கண் முன்னாலேயே அவர்களின் வாழ்வின் ஒளியை கொன்றிருக்கிறார்கள். இந்த சர்வாதிகார இலங்கை அரசிற்கெதிராக ஒரு சிறு எதிர்ப்பை காட்டினாலும் கொல்லப்படுவீர்கள் என்று பயப்படுத்துவதற்காக ஒரு மாணவனைக் கொன்றிருக்கிறார்கள். கைது, வழக்கு என்று போனால் ஊடகங்களில் வெளிவரும் என்பதனால் கள்ளர்களின் மேல் பழியைப் போட்டு கொலை செய்திருக்கிறார்கள்.
"போராட்டம்" ஜனவரி இதழ்-08 வெளிவந்து விட்டது
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 8
- Created: 18 January 2014
- Hits: 1245
இந்த இதழின் உள்ளே...
- மக்கள் உரிமைகளுக்கு ஆபத்து!
- இடதுசாரிய கருத்தாடலுக்கு உயர்ந்த வரவேற்பு
- அரசாங்கம் அரத்தை நக்கும் பூனையைப் போன்றது
- வன்னி நிலம் யாருக்கு?
- சம சுகாதார ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உண்ணாவிரதம்
மன்னார் புதைகுழிக்கு அரசே பொறுப்பு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 18 January 2014
- Hits: 730
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி நேற்று எட்டாவது நாளாக தோண்டப்பட்ட போது மேலும் ஒரு மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டையோட்டுடன் இதுவரை 44 மனித எழும்புக்கூடுகளும், மண்டையோடுகளும் இந்தக் குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மீண்டும் ஜெனீவா மீட்டுத்தருமா எம் உரிமைகளை?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 3
- Created: 16 January 2014
- Hits: 1313
கடந்த முறை ஜெனீவாவில் இலங்கை குறித்த மனித உரிமை மீறல்கள் கூட்டம் நிகழ்ந்தது குறித்து "போராட்டம்" பத்திரிக்கையில் வந்த ஆக்கம் இது. வருகின்ற மாதத்தில் மீண்டும் ஜெனீவாவில் இலங்கை குறித்த மனித உரிமை மீறல்கள் கூட்டம் நிகழவுள்ளது. இலங்கை குறித்து ஜெனீவாவில் எத்தனை கூட்டம் நிகழ்ந்தாலும், அதன் ஒரே நோக்கம் இலங்கையில் அமெரிக்கா, பிரித்தானியா, ஜரோப்பிய வல்லரசுக்களின் பொருளாதார நலன்களின் அடிப்படையிலானதே ஒழிய, தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநியாயம் குறித்த கரிசனையின் பாற்பட்டதல்ல என்பதனை இந்த ஆக்கம் மிகவும் தெளிவாக விவரிக்கின்றது.
இல்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை, யுத்தத்தில் சொத்துக்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு எவ்வித நிவாரணமோ இழப்பீடோ வழங்கப்படவில்லை, யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்களிற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை, சுதந்திரமான ஊடக செயற்பாடுகளிற்கோ அரசியல் செயற்பாடுகளிற்கோ இடமில்லை, இராணுவ முகாம்களிற்காகவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிற்காகவும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை, சுதந்திரமான மீன்பிடித்தலிற்கு இன்னும் அனுமதியில்லை, விவசாயத்தை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டங்களும் இல்லை, சீரழிந்த நீர்ப்பாசனம் மீள சீராக்கப்படவில்லை, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை, கைதுகள் கடத்தல்கள் நிறுத்தப்படவில்லை, சேதமடைந்த பாடசாலைகள் புனரமைக்கப்படவில்லை, பொது இடங்களிலிருந்தோ தேவையற்ற இடங்களிலிருந்தோ இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை, காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்வுரிமையோ உறுதி செய்யப்படவில்லை, யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில் இப்படியான இன்னல்களைத் தவிர வேறொன்றும் இல்லை.
காலாகாலமாக ஏமாற்றப்படும் மலையக தோட்டத் தொழிலாளர்கள்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
- Created: 16 January 2014
- Hits: 1016
மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்;பந்தமான கூட்டு உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் சம்பள உயர்வு சம்பந்தமான கூட்டு உடன்படிக்கையில் கையொப்பமிடும் தொழிற்;சங்க கூட்டுக்கமிட்டிக்குமிடையில் நடைபெற்று தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதன்படி சம்பள உயர்வு வழங்கப்படும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேலாயுதம், ஏனைய தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு வருகின்றனர்
சிதம்பரம் சொல்வதெல்லாம் பொய்!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 12 January 2014
- Hits: 1379
பொய் சொல்லக் கூடாது என்று ஒளவைக்கிழவி பாடினாள். குழந்தைகளை பொய் சொல்லக் கூடாது என்று பாடிய அவள் இன்றைக்கு ஏழு கழுதை வயதில் சிதம்பரம் சொல்லும் பொய்களிற்கு கையிலிருக்கும் தடியால் சிதம்பரத்தின் மண்டையைப் பிளந்திருப்பாள். இந்தியாவின் நிதியமைச்சர், இலங்கைத் தமிழ்மக்களின் இனப்படுகொலை நடந்தபோது உள்துறை அமைச்சராக இருந்த மாண்புமிகுவின் பச்சைப்பொய்யைப் பாருங்கள்.
"இறுதிக் கட்டப்போரின் போது இந்தியாவின் பேச்சைக் கேட்டிருந்தால் பிரபாகரன் உயிரோடிருந்திருப்பார் என இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு இந்தியா இரு தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்த போதிலும் இரண்டு தரப்பினரும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. போரை நிறுத்தச் சொல்லி பிரபாகரனிடம் இந்திய அரசாங்கம் எவ்வளவு சொல்லியும் கடைசிவரை அவர் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர் மரணமடைய நேரிட்டது. இந்தியா சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றைக்கு பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார்" என்று சிதம்பரம் கூறினார்.
சுவடுகள்........... (சிறுகதை)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 January 2014
- Hits: 731
வேலை முடிஞ்சு வெளியால வந்து ரெலிபோனைத் தூக்கினா, தாமுவின் மெசேச் வந்திருந்தது, நான் பல முறை எடுத்தேன் தொடர்பு கொள்ள முடியவில்லை... எப்படியும் இரவு ஏழு மணிபோல் கட்டாயமாக என் கொட்டலுக்கு வா என்று இருந்தது.
இண்டைக்கு வெள்ளி, அது தான் வரச் சொல்லியிருக்கிறான் என்ற நினைப்புடன் வீடு வந்து, இது அது என்று செய்ய வேண்டிய கடன்களை முடித்து விட்டு ஒரு சின்ன குட்டி நித்திரையும் போட்டு விட்டு, ஓர் இரவு நேரம் கொட்டலில் போய் இறங்கினேன்.
விவசாயிகளை ஒட்டாண்டிகளாக்கும் வங்கிகள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 January 2014
- Hits: 843
விவசாயிகளுக்கு உதவி செய்வதாகக் கூறி வட்டிக்கு விவசாயக் கடன் வழங்கிய வங்கிகள், இப்போது வட்டியையும் முதலையும் வழங்குமாறு விவசாயிகளின் கழுத்துக்களைப் பிடித்து நெருக்கி வருகின்றன. ஏற்கனவே பெருமழை காரணமாக வெங்காயம், கிழங்கு மற்றும் உபஉணவு உற்பத்தியில் அழிவுகள் ஏற்பட்டதனால் விவசாயிகள் பெருநட்டமடைந்தனர். பின்பு வறட்சி காரணமாகப் பெரும்போக நெற்செய்கையிலும் அழிவு ஏற்பட்டது இவ்வாறு நட்டத்தின் மேல் நட்டம் ஏற்பட்ட நிலையில் செய்வதறியாது திகைத்து தடுமாறி நிற்கும் விவசாயிகளை கடன் கொடுத்த வங்கிகள் மிரட்டியும் விரட்டியும் வருவது கண்டனத்துக்கும் விசனத்திற்கும் உரியதாகும். இதனால் சில விவசாயிகள் தற்கொலைக்கும் தற்கொலை முயற்சிகளுக்கும் தள்ளப்பட்டுள்ளனர் எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு விவசாயக்கடன் தள்ளுபடியை செய்து ஏனைய நிவாரணங்களை வழங்கவேண்டுமென விவசாயிகள் சார்பாக எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வற்புறுத்துகிறது.