தமது காணிகளை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டு முல்லைத்தீவு, கேப்பாபுலவு மக்கள் தாம் குடியிருந்த காலத்தில் தம்மால் கட்டப்பட்ட முருகன் கோவில் முன்றலில் சத்தியாக்கிரக போராட்டத்தை தொடங்கிய பின்பு அவர்களால் வெளியேற முடியாதவாறு பாதையை மூடிவிட அரசாங்க பாதுகாப்புப் பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதனை வன்மையாகக் கண்டிக்கும் சம உரிமை இயக்கம் அவர்களின் காணிகளை மீளவும் அவர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்துகின்றது.














