
கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கில் மக்களால் பரவலாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்களிற்கு ஆதரவாக சமவுரிமை இயக்கத்தினரால் கடந்த 17ம் திகதி ஆரம்பித்த ஒரு வாரகால அடையாள எதிர்ப்பு சத்தியாககிரக போராட்டம் இன்று நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது. இன்றைய தினம் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சக்திவேல், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை ஒத்த ஆட்சியையே மைத்திரி-ரணில் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக விசனப்பட்டதுடன்; ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இன்றைய ஆட்சியாளர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.














