அடிப்படையான ஆதாரங்களற்ற, எந்தத் தரவுகளுமற்ற, சமூகக் கண்ணோட்டமற்ற, கற்பனையிலான அவதூறுகள், அடிப்படை உண்மைகளைப் புதைக்கின்ற பொதுச் செயற்பாடாக இருக்கின்றது. சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள்.. மூலம் ஜனநாயகம் என்ற பெயரில், எந்தச் சமூக அறமுமற்ற அவதூறுகள் விதைக்கப்படுகின்றது. செய்திகளின் பெயரில், கண்டுபிடிப்பின் பெயரில், ஊகத்தின் பெயரில் அவதூறுகளுக்குப் பஞ்சமில்லை.
இத்தகைய அவதூறுகள்
1. ஒருபுறம் உண்மைகளைப் புதைக்கின்றது.
2. மறுபக்கம் பொய்களை விதைக்கின்றது.
இவை ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். எது உண்மை, எது பொய் என்ற வித்தியாசத்தை இல்லாதாக்குகின்றது.
இதன் மூலம் உண்மையான சமூகச் செயற்பாட்டை இல்லாதாக்குகின்றது. அவதூறு செய்பவர்களின் நோக்கம், சமூக நோக்கமாக இருப்பதில்லை. அதை அவர்களின் சொந்த நடைமுறையில் காணமுடியாது. ஆரசியற் கோட்பாட்டின் பெயரில் அவதூறுகளைச் செய்யும் போது, அந்த அரசியல் பொதுப்புத்தியிலான ஊகமான சொந்த காழ்ப்பிலான வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது.
பன்முகம் கொண்ட அவதூறுகளுக்கு மத்தியில் ஆறு திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளை, துர்க்காபுரம் குறித்ததான அவதூறுக்கும் பஞ்சமில்லை. இந்த அவதூறானது அங்குள்ள உண்மைகளையும், கேள்விகளையும் மூடிமறைக்கின்றது.
16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் குளிக்குமிடம் கமராவின் கண்காணிப்பின் கீழ் இருந்ததான குற்றச்சாட்டு, 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை சட்டரீதியான அரச அனுமதியின்றி தங்க வைத்த குற்றச்சாட்டு, சிறுமிகள் தப்பியோடிய சம்பவங்கள்.. குறித்தான குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையான விசாரணையறிக்கையை துர்க்காபுரம் இன்று வரை முன்வைத்தது கிடையாது