சாதி பார்க்கும் தமிழன் -- ஓர்
பாதித்தமிழனடா!
என்றோர் ஏட்டில்
படித்ததுண்டு! – ஆனாலெம்
நெடுந்தீவகத்தில்,
பாலியல் பசிக்காய்
பாலியலுக்கு ஆகா பாலகியை
பதம் பார்த்த பாதகன் – வெறும்
காமத்தமிழனடா! – இவனுமோர்
மானிடத் தமிழனோடா!
வன்புனர்வின் வாஞ்சை கொண்டு
தன் பசியாற்றியதோடில்லாமல், -- எம்
பச்சிளம் பாலகியை
கொலைவெறி முகம் கொண்டொழித்ததோர்
கொடுங்கூற்றுத் தமிழனடா! --
பாராள்பவர்களின்
பாசிஸத் தமிழனடா! –
இவனுமோர்
காமத்தமிழனடா!
இந்நாளில்
இவங்களில்லா உலகிற்குமாய் ---- நாம்....
-லண்டன் விஜி