நோர்வேயில் உள்ள புலிகளின் அமைப்பான NCET இலங்கை அரச தலைமையை (மஹிந்த & கோ) மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிந்தவர்கள் என விசாரிக்க நோர்வேயில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது சம்பந்தமாக நோர்வேகின் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த NCET தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா. புலிகளும் அதே குற்றத்தை (அதாவது மனித குலத்திற்கெதிரான குற்றம்கள்) புரிந்தவர்கள் ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாது, காரணம் புலிகளின் தலைமை இறந்து விட்டது . ” எனக் கூறுகிறார் .
இதுவரை புலத்தில் முதல் முறையாக புலிகளை மனித குலத்திற்கெதிரான குற்றம்கள் புரிந்தவர்கள் என பகிரங்கமாக புலிகளின் அமைப்பை சேர்ந்த எவரும் அறிகையிட முன்வரவில்லை. அந்த அளவில் பஞ்சகுலசிங்கத்தின் முயற்சி பாராட்ட தக்கது.
அது மட்டுமல்லாமல் “புலிகளின் தலைமை இறந்து விட்டது ” என கூறுவதன் மூலம் உண்மை பேச முயல்வதும் இங்கு கவனிக்கதக்கது ….. (ஆனால் இதை இவர் தமிழ் ஊடகங்களில் பகிரங்கமாக சொல்வாரா என்பது சந்தேகம் )……
http://www.aftenposten.no/nyheter/iriks/article4113498.ece
இந்த நிலமைகளைப் பாவித்து புலிகளின் கொடூரங்களை எல்லாம் கடைசி காலத்தில் மட்டும் தான் நடந்தன எனக் கதைவிட நினைக்கின்றனர் இவர்கள். புலிகள் பேர்ர்க்குற்றம புரிவதற்கு தூணாகவும், துணையாகவும் இருந்த இந்ந புலம்பெயர் போக்கிரிகள் இன்று நல்ல வேடம் போட முனைகின்றனர். இவர்கள் கொள்ளையிட்ட பணம், இவர்கள் புலிகளுக்கு சேர்த்த பாசிச வழியிலான பலமும் கூட புலிகள் பெயரில் புரிந்த போர்க் குற்றங்களுக்குள் அடங்கும். ஆயுதம் எடுத்து நடத்தியது மட்டுமல்ல, அதை ஊக்குவித்து ஆதரித்த நபர்களும் இவர்களே தான்.
இவர்களின் இந்தப் போக்குகளையும், நடத்தைகளையும் வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும்.
இவர்களும் தாங்கள், இந்தப் புலிகள் பக்கத்திலான போர்க்குற்றங்களுக்கு தலைமை அழிந்து விட்டது என தட்டிக் கழித்து தங்களைச் சுத்தப்படுத்தி விட முடியாது. வெளியே வர வேண்டும் தங்களது பங்கையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசு செய்தது பாரியது. அவர்கள் செய்தது சிறியது என்ற வாதம் பொருத்தமானதல்ல.
புலிகள் ஏனைய ரெலோ போன்ற இயக்கத்தினரையும் மற்றைய மாற்று வழிப் போராளிகளையும் கொன்று குவித்தபோது, அவற்றைக் கைகொட்டிச் சிரித்து வரவேற்று, அவற்றுக்காக புலிகளிடம் கைகுலுக்கியவர்கள் இவர்கள். இந்தப் பெரும் புள்ளிகள். புலிகள் முஸ்லீம்களை வேட்டையாடிய போதும் அவர்களை அவர்களது பிரதேசங்களிலிருந்து விரட்டியடித்த போதும் விசிலடித்தவர்கள் இவர்கள். சிங்களப் பொது மக்களைக் கொன்று குவித்த போது சிங்கள நாய்களே செத்துத் தொலையுங்கள் என்று செபித்தவர்கள் இவர்கள். இவர்களும் போர்க் குற்றவாளிகள் தான். இவைகள் கூட போர்க் குற்றங்கள் தான்.
தாங்கள் செய்த செய்யத் தூண்டிய அவற்றையெல்லாம் நியாயப்படுத்தி பேசிய இந்த முன்னணி புலம்பெயர் தலைகளெல்லாம் உலககெங்கும் வாழும் தமிழர்களிடமும், தாங்கள் விடுதலை பெற்றுத் தருவதாக கூறிய இலங்கை வாழ் தமிழ்மக்களிடமும்; தங்கள் அத்தனை படுகொலைகளுக்கும் பரிகாரமாக பகிரங்கமாக மன்னிப்புக் கோருவார்களா?
இவர்களால் அழிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இவர்கள் சொல்லப் போவது என்ன?
ரெலோ போராளிகள், பல்கலைக்கழக மாணவர்களான விமலேஸ்வரன், செல்வி, மாற்றியக்கத் தலைவர்கள், ராஜனி திரணகம போன்றவர்களின் கொலைகளை இவர்கள் அறியாதவர்கள் அல்ல. வரலாறு பூராவும் இவர்கள் இழைத்த மனித உரிமை மீறல்கள் ஆறாக் காயங்களாக இன்னமும் உள்ளது.
இவற்றையெல்லாம் தெரியாத மாதிரி இன்று கடைசி காலம் மட்டும் தான் தவறானது என்று இவர்கள் சொல்வார்களேயானால், தாங்கள் அத்தனை காலமும் மனித உரிமைகளை மதித்தவர்களாக வேடம் போடுகிறார்கள். அவற்றையெல்லாம் அன்று ஆதரித்து திரிந்தவர்கள் இன்று கயிறு திரிக்கிறார்கள.
புலிகளில் எஞ்சியவர்கள் அவர்களைப் போற்றியவர்கள், இன்று அழிந்து போன தலைமையிடம் திடுதிப்பென்று பழி அனைத்தையும் தூக்கிப் போட்டு விட்டு கைழுவுகிறார்கள். அத்தனை மனித உரிமை மீறல்களையும் செய்வதற்கு தளபாடம் பணம், பலம், பிரச்சாரம் என்று தோள் கொடுத்த இவர்களும் பொறுப்பாளிகள் தான்.
வெளியில் வரட்டும். வரலாற்றை புரட்டட்டும். எங்கெல்லாம் தவறிழைத்தார்களோ அவற்றையெல்லாம் மக்கள் முன் கொணர்ந்து மன்னிப்புக் கேட்கட்டும்.