வரலாற்றிலிருந்து ஹிட்லரை எடு
மனித மாண்போடு மன்னிப்புக் கொடு
சொல்கிறார்கள் சுக்ரீவனை கொன்ற இராமாயணர்கள்
அசோக மன்னன் அவன் அடி மனம் துடித்தது.
போர் வெறியினைக் களைந்ததால்
மக்கள் மனதினில் மன்னிப்பும் எழுந்தது.
ராஜபக்ச நீ தொடர்ந்து நட
உன்னுடையதும் உனது பரிவாரங்களதும்
பாவங்களையும் பாதங்களையும் கழுவ
கேளாமல் மன்னிப்பு வழங்க
இன்னும் இருக்கிறோம் நாங்கள்.
அட இழந்ததென்ன இது ஒரு தூசு
துவம்சம் செய்ய இனியொரு வம்சமே இருக்கு
இராமாயணப்படி நிர்மூலமானது வேசி பிள்ளைகளும்
வீழ்ந்தது என்னவோ வெறும் சுடுகாடும் தான்.
இலங்கையையே எரித்தான் ஹனுமான்.
வன்னியில் விழுந்தது என்ன
அட புறங்காலால் தள்ளு.
போர்க்குற்றமா போங்கடா போங்கள்
வாழும் கலை இனியென்ன வாருங்கள்
ராஜபக்சவின் காலினில் விழுங்கள்.
யோகங்கள் கிடைத்தால் ராசாக்கள் ஆகலாம்.