எப்படி எப்படி
நிந்தனை செய்தாரெமை
பள்ளுப் பறைகள்
சக்கிலி நாய்கள்
கருவாட்டுக் கரையார்
பிணங்காவிக் கோவியர்
பனங்காட்டு நளவர்
எண்ணெய் சாண்டார்
அகம்படியார் ஏதும் படியார்
சைவர்
கோவில் பண்டாரி
சட்டிபானை
நெய்யும் குயவர்
திமிலர் முக்குவர்
கைக்குழவர்
கொல்லர் தச்சர்
பரவர் குறவர்
சிவியார் நட்டுவர்
அம்பட்டன் வண்ணான்
தோட்டக்காட்டான்
கள்ளத்தோணி
சொத்தி
செவிடு
குருடு
பெட்டைக் கோழி கூவி
பொழுது
விடியுமொவென
இன்னும் பற்பலவாய்
அரிசிக் கிறிஸ்தவர்
முசுலீம் தொப்பிபிரட்டி
பறைத் தமிழன்
மோட்டுச் சிங்களவன்
குட்டுப்பட்டவர் நாங்கள்
இன்னும் குனியவோ
வவுனியா நகரசபை-நீ
தளராது போராடு!
உள்ளுர நீறாய்
பூத்திருந்த
சாதி வெறித்தனங்கள்
எளிய சாதிகளுக்கு
என்னடா அலுவலென்று
வன்மம் மேலெழுந்து
வருவதை நீ
மறுத்து நில்லு