Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாடுகடந்த தமிழீழக்காரர்கள் எங்கும் ஒருமித்த குரலில் இப்போது வாயைப் பொத்திக் கொண்டிருங்கள் என தங்களை நோக்கி கேள்வியெழுப்புவர்களை மிரட்டுகிறார்கள்.

அதற்கு மிக அண்மைய உதாரணம் திரு வடிவேல் சிவகணேசன். தமிழரங்கத்தில் வெளிவந்த 'ஜனநாயகம்' வரும் ஆனால் வராது.   என்ற கட்டுரைக்கு அவர் அனுப்பியிருந்த பின்னூட்டத்தின் தலைப்பு வாயைப் பொத்து என்பதாகும். இவரே தான் நோர்வே ஈழத்தமிழர் அவையின் (http://www.ncet.no/tamil/index.html)தொடர்பாளர். நாடு கடந்த தமிழீழத்துக்கான பிரச்சாரகராகியிருக்கின்றார்.

 

பின்னூட்டத்தின் தலைப்பு

holder kjeft
பதிந்தவர் Sivaganesh Vadivel, April 24, 2010

1, eg har ba om ikkje sendt mail til min jobb men du har sender likevel

2, kan du seie til meg hvordan du kan hjelpe Tamiler som meg og Tamiler som dei?

3, eg jobber som VAKT for Tamiler men kva du gjer for Tamiler ?

4, eg jobbar som Leder for NCET , Tech, Vakt program og kovil vakt ( uten pengar ) derfor har ikkje eg fritid.
dersom vil hjelpe meg eller støtte meg ?? viss du ikkje, du må holder kjeft

5, Lær dei å skriv navene ditt når du send melding til andre

Siva

 

 

இந்த வடிவேல் சிவகணேசன் தன் வாயாலேயே தான் தனது பாசிசப் பட்டறையில் கேட்டதைக் கற்றதை வெளிப்படுத்தியிருக்கின்றார். போதாதற்கு தான் தமிழருக்கு செய்யும் சேவைகள் என்ன என்பதை வரிசைப்படுத்தி நீங்கள் என்ன செய்கிறீர்கள் என கேள்வியும் எழுப்பியிருக்கிறார்.

 

ஆனால் நாடு கடந்த தமிழீழம் மூலம் அவர்கள் செய்யவிருப்பது என்ன என்பதை மட்டும் மிகத்தெளிவாக அவர் தனது வாயாலேயே கூறி தானே சாட்சியமாகியும் விட்டார். நாடு கடந்த தமிழீழம் என்ற அதிகார அமைப்பு ஏகாதிபத்திய மேற்குலக நாடுகளின் வால்பிடித்து அடிதொழுது ஜனநாயக வழி மூலம் தரப்போகும் தமிழீழப் பம்மாத்து பற்றியோ அல்லது அவர்கள் முடக்கி வைத்திருக்கும் தமிழ்மக்களின் சொத்துக்கள,; அவர்களே முன்னின்று அதட்டியும் மிரட்டியும் ஏமாற்றியும் சேர்த்துக் கொண்ட வளங்களை பற்றியோ எவரும் வாயைத் திறக்கக் கூடாது. யாராவது வாயைத் திறந்தால் வாயை மூடு என்பது தான் இந்தக் கள்வர் கூட்டத்தின் பதில். ஏய்த்துப் பிழைக்கும் கயவர்கள் மக்களை என்றும் மதிப்பதில்லை. அவர்கள் எவ்வாறு இன்னும் ஏய்த்துப் பிழைக்கலாம் என்பதிலேயே குறியாகவிருப்பார்கள்.

 

தமிழீழம் என்பது மக்களின் இரத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு அவ்விரத்தக்காடு காயுமுன்பே இந்த நாடுகடந்த தமிழீழக் கள்வர்களின் காலடிகளில் எல்லாவற்றையும் அடகு வைக்குமாறு பொய்களோடும் புரட்டுகளோடும் இவர்கள் ருசி கண்ட பூனையாக GTV ஈறாக எல்லா வளங்களையும் துணைகொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள். ஏற்கனவே சுத்திய சொத்துக்களை முடக்கியும் இன்னும் சுத்திக் கொண்டு செல்வதற்கும் நாடுகடந்த தமிழீழம் என்ற கோசம் இநதக் கயவர் கூட்டத்தின் ஏமாற்று வழி. மேற்குலக சதிகளுக்கு துணைநின்று தனது தலைவனையே காட்டிக்கொடுத்து விட்டு, அதே மேற்கத்தைய ஏகாதிபத்தியங்களுடன் "ஜனநாயக" ரீதியாக அரசியல் வால்பிடித்து சல்லாபித்து இன்னும் இன்னும் தமிழ்ச்சாதியை ஒட்ட அறுக்கவென காட்டிக் கொடுக்கும் நயவஞ்சக பாரம்பரியம் கொண்டவர்களின் கூட்டுத் தான் இந்த நாடுகடந்த தமிழீழக் கயவர்களின் கூட்டு.

 

இன்னும் ஒர் அப்பட்டமான உதாரணம். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த தில்லுமுல்லுகள்.

 

Tromso (Norway) நகரில் இயங்கிய தமிழ்சங்கத்தை ஏகப்பட்ட சதிகள் மூலம் கைப்பற்ற முனைந்து அது முடியாது போகவே அச்சங்கத்தின் நிர்வாகசபையின் ஒப்புதல் இன்றி இந்தக் கள்வர் கூட்டம் தங்களுக்குள்ளேயே ஒரு நிர்வாகத்தை தெரிவு செய்ததோடல்லாமல் ஏற்கனவே இயங்கி வந்த சங்கத்தின பெயரையே தங்கள் புதுச்சங்கத்துக்கும் சூட்டிக்கொண்டு அடாவடித்தனம் பண்ணினார்கள். உள்ளுர் பத்திரிகைளில் அவர்களுக்கே கைவந்த சதிப்பாணியில் ஏற்கனவே இயங்கிவந்த தமிழ்சங்கத்தின் பெயரைப்பாவித்து அச்சங்கத்துக்கேதான் ஒரு புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டிருப்பதான ஒரு தோற்றப்பாட்டை நோர்வேஜிய மக்களுக்கும் மற்றும் உள்ளுராட்சி மாநகர மன்றங்களுக்கும் ஏற்படுத்துமாற் போல் ஏற்கனவே இருந்த சங்கத்தின் பெயரை  ஜனநாயகத்துக்கு புறம்பாக  அபகரித்துக் கொண்டு அறிக்கை விட்டார்கள். தாங்களே அச்சங்கத்தின் நிர்வாகிகளாகவும் ஆகிக் கொண்டார்கள் இந்த நாடு கடந்த கயவர் கூட்டம்.

 

இவைகள் நடைபெறுவதற்கு முன்னர் இவர்களில் ஒரு சிலர் ஏற்கனவே இயங்கி வந்த சங்கத்தில் அங்கத்தவராக இருந்தபோது இந்தச் சங்கத்தின் நிதியை தமக்கு ஏற்றாற்போன்ற வகையில் பயன்படுத்த தொடர்ந்து பிரயத்தனம் செய்தார்கள். இச்சங்கத்தினை எப்படியாவது அபகரிப்பது அல்லது சங்கத்தின் பெயரை முறைகேடாகப்பயன்படுத்துவது, "குதிரை" யாகப் பயன்படுத்துவது தங்களுக்கு இலாவகமாக பாவிப்பது என்பது அவர்களின் நீண்ட நாளைய நோக்கங்களில் ஒன்று.  அது கைகூடாதிருந்த வரை தாங்கள் தீர்மானிக்கும் புலிஆதரவு நிகழ்வுகளுக்கெல்லாம் சங்கம் நிதியாதரவு வழங்கவில்லை என்ற நிலைமையை மாற்றவேண்டுமாயின் சங்கம் தனது யாப்புவிதிகளையும் மீறி வர வேண்டும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதனால் பின்வளமாக கள்ளவழிகளின் மூலம் நிர்வாகசபையில் உள்ளவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் எப்படியாவது சங்கத்தின் நிதி  மறறும் அதன் பெயர் போன்றவற்றுக்கு குறிவைத்திருந்தார்கள்.


வன்னியில் மிக உக்கிரமான போரில் மக்களைச் சிக்கவைத்து பணயமும் வைத்து அதன் மூலம் மேற்குலகத்தின் இதயத்தில் ஈரம் வரவழைத்து கவனத்தை ஈர்த்து தமிழீழம் அதனாலேயே சாத்தியமாகும் என்று கூறி இறுதியில் காட்டியும் கொடுத்த இவர்கள் அந்த உச்ச அவலங்களின் போது நோர்வேஜிய மக்களின் கவனக்குவிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று காரணம் சொல்லி ஒரு பரதநாட்டிய நடன நிகழ்ச்சியை நடாத்தினார்கள். தாங்களே தங்களது நெருங்கிய உறவினரான நாட்டிய கலைஞர்களை விமான மூலம் வரவழைத்து நிகழ்ச்சியை நடாத்தி முடித்ததன் பின்னர் விமானப்பயணத்துக்கான பணத்தை சங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ள அடாவடியாக நின்று அழுத்தம் கொடுத்து இறுதியில் அப்பணத்தை பெற்றும் கொண்டார்கள்.

 

இவர்களுடைய இவ்வாறான அடாவடித்தனங்களுக்கும் மறைமுகமான மிரட்டலுடன் கூடிய நெருக்குதல்களுக்கும் தாக்குப்பிடிக்க முடியாதவகையில் மிகவும் நோய்வாய்ப்பட்டு உடல் உள ரீதியாக தளர்ச்சியுற்று பாரிசவாதத்திலிருந்து மீண்டுவந்தாலும் அதனது தாக்கங்களிலிருந்து பழைய தனது ஆற்றலோடு கருமமாற்ற முடியாத சங்கத்தின் தலைவரை இவர்கள் மொய்த்துக் கொண்டு தங்களது அபகரிப்புகளை மேற்கொள்வதற்கு அவரது நிலைமையை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இவர்களது பின்னணி பற்றிய அச்சமும் அவருக்கு இல்லாமலில்லை.

 

தலைவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் இவ்வேளையே சரியான வேளை எனக் குறிவைத்த இவர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டத்தினை கூட்டுமாறு அவரது உடல்நிலைமையையும் பொருட்படுத்தாது அவரது வீட்டுக்குச் சென்று வீட்டிலும் அவரது நோய்வாய்ப்பட்டிருந்த நிலைமையைக் கணக்கிலெடுக்காது அவருக்கு வேண்டியிருந்த அமைதியைக் கெடுத்து நச்சரிப்பு கொடுத்தவர்கள் அது முடியாமற்போகவே தங்களுக்குள்ளேயே கையெழுத்திட்டு பொதுக்கூட்டம் ஒன்றுக்காக காலக்கெடு ஒன்று கொடுத்து கடிதம் அனுப்பியிருந்தார்கள்.

 

இக்கடிதத்துக்கு பதில், நிர்வாகம் கொடுத்தததன் பினனாலும் தாங்கள் கொடுத்திருந்த காலக்கெடு முடிவடைவதற்கு முன்னதாகவே தங்களுக்குள்ளேயே கூடி தங்களுக்குள்ளேயே நிர்வாகத்தையும் தெரிவுசெய்து தங்கள் புதியநிர்வாகத்தை ஏற்கனவே இருந்த தமிழ்ச்சங்கத்தின் பெயராலேயே அடாவடித்தனமாக உருவாக்கிக் கொண்டார்கள் இந்த நாடுகடந்த தமிழீழத்தின் தூண்கள்.

 

பத்திரிகை அறிக்கை மூலம் இதனை அறிந்து கொண்ட நிர்வாகமும் எஞ்சிய அங்கத்தவர்களும் திகைப்படைந்தார்கள்.

 

வழக்கறிஞர் ஒருவரின் தயவும் சட்டஆலோசனையும் இதனால் சங்க நிர்வாகத்தால் நாடப்படவேண்டியதாயிற்று. வழக்கறிஞர் ஆலோசனைப்படி இந்த நிர்வாகசபைத் தெரிவு ஏற்கனவே இருக்கும் ஒரு சங்கத்தின் பெயராலேயே அதனது நிர்வாகசபையினை மீறி நடத்தப்பட்டதால் அது ஒரு அபகரிப்பு எனக்கூறி அதனை பத்திரிகைகளுக்கும் மற்றும் உள்ளுராட்சி மாநகராட்சி மன்றங்களுக்கு அவராலேயே செல்லுபடியாகாதென அறிவிக்கப்பட்டது.

 

பின்னர் வழக்கறிஞரால் நடாத்தப்பட்ட இணைப்பு முயற்சிக்கு வருகை தந்திருந்த இருபகுதியினரும் எல்லோருக்கும் பொதுவான ஒரு பொதுக்கூட்டத்திற்கான திகதியை தீர்மானித்து அவ்வாறு அழைப்புவிடுக்கப்படும் பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்படும் நிர்வாக சபையானது சங்கத்தின் நிர்வாகசபையாக ஏற்றுக் கொள்ளப்படுவதே நடைமுறையும் விதிமுறையும் சார்ந்தது என ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

இதன் பிரகாரம் தேதி குறிப்பிடப்பட்டு அழைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டம் நடத்தும் நாளும் வந்தது.


அவர்களும் கூட்டத்துக்கு வந்தார்கள். கூட்டம் ஆரம்பமாகி தலைவர் தனது உரையில் சங்கம் ஆரம்பித்ததிலிருந்து இற்றைவரையான வரலாற்றை சொல்லி அமர்ந்த பின்னர் புதிய நிர்வாகசபைத் தெரிவுக்கு அழைப்புவிடுத்தார்.

 

கனடாவிலிருந்து மிக அண்மையிலேயே இந்நகரத்துக்கு தனது குடுமப்பத்தோடு குடிபெயர்ந்து வந்து பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் பதவி வகிக்கும் புவனேந்திரன் என்ற நாமம் கொண்ட கழிசடை தனது குள்ளத்தனமான சிரிப்புக்கிடமான குற்றப்பத்திரிகையை முன்வைத்து அதற்கான பதிலின் பின்னரே எதுவும் நடக்கலாம் என்று அதட்டும் தொனியில் கட்டளையிட்டது. அதன்படி தலைவர் ஒரு இலட்சம் குரோணர்களுக்கு என்ன நடந்தது என்பதை சங்கக் கணக்கறிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் அதுபற்றி தலைவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டதற்கிணங்க இவர்கள் குறிப்பிடும் இத்தொகையை சங்கம் இதுவரையும் என்றும் புழக்கத்தில் கண்டதுமில்லை. அவ்வளவு பெருந்தொகையை யாரும் தந்ததுமில்லை தரப்போவதுமில்லை நாங்கள் அதனைப் பெற்றதுமில்லை என்றார்.

 

அவர்களது உள்நோக்கம் வேறாக இருந்தது என்பது அவர்கள் முன்னரே சங்க நிர்வாகத்தை நெறிமுறையின்றி அபகரித்தபோதே தெரிந்தது தான். ஆனால் இப்போது அதற்கான காரணம் ஒன்றை பழியாக அபாண்டமாக அள்ளி வீசி தங்களது செயலுக்கு நியாயம் கற்பித்துவிட்டுச் செல்லலாம் என்பதே அவர்களது நோக்கமாகவும் குறியாகவும் இருந்தது. சொந்தப் புத்தியில்லாத மந்தைகளாக அவர்கள் மக்களை இருக்கச் சொல்பவர்கள். எனவே சூட்சுமமாக பொய்களை சோடிக்கத் தெரிந்தவர்கள். நேரடியான காரணங்களோடு வரவும் மாட்டார்கள். நேரடியாக தங்களை நோக்கி யாரையும் கேள்வி கேட்க விடவும் விடமாட்டார்கள். கேட்டால் வாயைப் பொத்து என்பதே இவர்களின் எங்கும் வியாபகமான ஒத்த பதிலாகும்.

 

இந்தக் கேள்விக்கான பதிலளிக்க மற்றைய அங்கத்தவர்கள் முனைந்தபோதும் தங்களது ஆட்சேபத்தை தெரிவிக்க முனைந்த எல்லாவேளையும் இந்தப் படித்த கழிசடை பொத்துவாயை என்று மிகுந்த ஆக்ரோசத்துடனும் கோபாவேசத்துடனும் ஒற்றையாகவே கூறி தனது பாசிச சாக்கடைக் குணத்தால் அங்கிருந்தவர்களின் கருத்துச் சொல்லும் உரிமையை அவமதித்தது. கொக்கரித்தது.

 

இந்தவேளையில் இன்னொரு குரலும் எந்த அச்சமுமின்றி ஒரு கேள்வியை அவர்களை நோக்கி அள்ளிவீசியது.

 

கேள்வி சுனாமிக்கென சேர்த்து வழங்கப்பட்ட நிதி பற்றியதாய் இருந்தது. கேள்வியில் குறிவைக்கப்பட்ட நபர் இன்னொருவராக இருந்தார்.

 

தொரம்சோ பல்கலைக்கழக போதனாவைத்தியசாலையில் கடமையாற்றும் நோர்வேஜிய பணியாளர் குழுவொன்று சுனாமியில் பாதிக்கப்பட்டோருக்காக சில தொகை (தொகை யாருக்கும் தெரியாது) நோர்வேஜிய குரோணர்கள், புலிகளின் பிரதிநிதிகளான இக்கள்ளர் கூட்டம் சேர்த்ததற்குப் புறம்பாக, சேர்த்து அதனை அங்கு அந்த வைத்தியசாலையிலேயே பணியாற்றும் மேற்குறிப்பிட்ட நபர் இலங்கையர் என்பதால் அவரிடம் கையளித்திருந்தது. இதே நபர் தான் புலிகளினால் சேகரிக்கப்பட்ட சுனாமி நிவாரண நன்கொடை சேகரிப்புக்கும் பொறுப்பாளராக இருந்தார். கேள்வியானது இந்த பணியாளர்கள் சேகரித்து அளித்த நிதி பற்றியதாக இருந்தது. துணிவுடன் இந்தக் கேள்வியை சந்தர்ப்பத்தோடு சந்தர்ப்பமாக அள்ளிவீசியவர் ஒரு சாதாரண பெண்மணி.

 

இக் கேள்வியை எதிர்பார்த்தார்களோ இல்லையோ பதில் இந்தநபரின் மனைவியிடமிருந்து வந்தது கொழுப்பாக.

 

"அந்தக் காசு தந்தது வெள்ளையள் வெள்ளையள் கேட்டா மட்டும் தான் அதற்கு பதில் சொல்லுவம்" என்று தனது தளராத நேர்மையை அள்ளிவீசினார் மனைவியான மற்றைய பெண்மணி.

 

இன்னொரு மூன்றாவது நபர் இப்போது தன்பாட்டிலேயே ஒரு ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை தந்தார். அதாவது அப்படிச் சேகரிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட பணமானது வைத்தியசாலைப் பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு பின்னால் அண்ணையிடம் கையளிக்கப்பட்டது. அண்ணை அதை எனக்குத் தந்தார் என்று கூறி தான் அந்நிதியை தனது பணமாக பெற்றுக் கொண்டதை நசிந்த தனது குரலில் ஒப்புக் கொண்டார்.

 

இதுவரையும் கிசுகிசுவாக அவர்கள் சார்பானவர்களாலேயே மூலைமுடுக்குகளில் முதுகுப்பின் பேசப்பட்ட இந்த நிதி விபரம் தற்போது கேள்விக்கிடமின்றி வெளிச்சத்துக்கு வந்தது. எனவே மக்களே எதையும் எவரையும் கேள்வி கேளுங்கள். இதுவும் ஒரு போராட்டம் தான்.

 

இவ்வாறான விவாதங்கள் வளர்ந்தால் தங்களை நோக்கி இன்னும் அதிகம் கேள்விகள் வந்துவிடுமே தாங்கள் கேள்வி கேட்டாயிற்று ஆனால் தங்களை நோக்கியும் மற்றவர்கள் வைத்திருக்கும் கேள்விகளுக்கு சந்தர்ப்பம் தரக்கூடாது, அப்படி அவர்களை யாரும் கேள்வி கேட்கவும் கூடாது என்ற செருக்குத்தனம் அவர்களிடம் இருந்தது.  இக்கேள்விகளிலிருந்து தப்புவதற்கு அவர்கள் கையாண்ட உத்தி முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது.

 

அவர்களின் தலைவராக தோன்றிய "வாயைப் பொத்து" புகழ் புவனேந்திரன் தன் கையிலிருந்த பொதுக்கூட்டத்திற்கான அழைப்புப்பத்திரத்தை சுக்குநூறாக கிழித்து மேசையில் விட்டெறிந்த பின்னர் "வெளிக்கிடுங்கோடா எல்லாரும் " என்று கட்டளையிட மந்தைக் கூட்டம் போல் பாதம்தொழுபவர்கள் நாற்காலிகளை உதறவிட்டு எழுந்து சத்தம் எழுப்பியபடி மண்டபத்தை விட்டு புவனேந்திரன் அடியொற்றி வெளியேறினார்கள்.

 

வெளியேறும் போது அவர்கள் இன்னுமொரு பிரகடனமும் செய்தார்கள். அதாவது "உங்களுடைய கொள்கைகள் வேறு எங்களுடைய கொள்கை(ளை)கள் வேறு. எங்களுக்கென்று சங்கம் நாங்களே ஏற்கனவே உருவாக்கிவிட்டோம் அதனைச் சொல்லவே நாங்கள் இங்கு வந்தோம"; என்றார்கள்.


ஆகவே உருவாக்கப்பட்டிருப்பது கொள்கை(ளை)ச் சங்கம். ஆனால் அதற்கு வைப்பதற்கு பெயரைக் கூட கொள்ளையடித்துத்தான் வைக்க வேண்டியிருக்கிறது அவர்களுக்கு. அந்தளவுக்கு அவர்கள் மிக நேர்மையானவர்கள். ஆனால் சங்கத்தின் கொள்கை என்னவென்றால் கூடிக்கெடுப்பது காட்டிக் கொடுப்பது. ஆமாம் நாடுகடந்த தமிழீழம் என்று சொல்லி மக்களை ஒட்டக் கொள்ளையடிப்பது மேற்குலக ஏகாதிபத்திய குண்டிக்குள்ளால் நாடுகடந்த தமிழீழத்தைப் பெற்றுத்தருவது என்று புதுக் கொள்கை(ளை) கூறி ஏய்த்தும் பிழைத்தும் இன்னும் காட்டியும் கொடுப்பது. வாயைப்பொத்து என்பது இவர்களது உலகளாவிய தத்துவம்.

 

சிறி

27.04.10