{play}http://www.tamilcircle.org/audio/Kavithaikal/Kallar.mp3{/play}
கள்ளர் கூட்டம்
ஊரை அடிச்சு
உலையில போடுவார்
என்ர பிள்ளையள்
கொட்டின ரத்தத்த
விட்ட அரும் உயிர
சொல்லி அழுதல்லோ
ஊரெல்லாம்
உலகமெல்லாம்
சொத்துச் சேத்தாங்கள்
எங்கட ராசா ராசாத்தி
நீங்கசெத்த
வருசப்பழங்சலிப்பு
நாங்க இன்னம்
வாயாறச் சொல்லயில்ல
என்ர செல்லக் குஞ்சுகள
அவலமா சாகவைச்சு
காட்டியும் கொடுத்து நீ – கொள்ளயில போவானே
அந்திய தேசத்தில
காசாக வீடாக
காராக காசு பண்ணி
திரும்பவும் வாறாய்
என் வீட்டு வாசலுக்கு
நாடுகடந்த
தமிழீழக்
கதை சொல்லி
நாசமாய்ப் போவானே
பாடையில போவானே
செக்கப் போய்
சிவலிங்கமெண்டு
நக்கச் சொல்லுறியா
உன்ர வக்க நிரப்ப
என்ர வம்சத்த அழிச்சவனே
கொடுக்குகளும் கோமணமும்
குறுக்குகட்டுகளும்
இறுக்கி வரிஞ்சு
இறுகக் கட்டிவைச்சு - இன்னும் நீ
கொள்ளையடிக்க வந்தா
கொடுவா கத்தியொண்டும்
தீட்டி வச்சிருக்கு
வாடா நீ வா
நாடும் கடந்து போய்
எங்கள நாய்பேய்க்கு விலைபேசி
வித்துப் பிழைக்கும் தெருநாயே
விடு உன்ர
சுரண்டிக் கொழுக்கும்
சொறிக்குணத்த