Language Selection

பி.இரயாகரன் -2025
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒரு ஆணுக்குள்ள உரிமையே பெண்ணுக்குமான உரிமையாகும். இந்த உரிமையைப் பெண்ணுக்கு மறுத்து, ஆணுக்கு மட்டும் உரியதென்றால், அதுதான் தமிழ் தாலிபானிசம். இந்த தாலிபானிசமானது, மனிதனின் அடிப்படை ஜனநாயகத்தையே மறுக்கின்றது. ஆண் - பெண் என்ற இயற்கையான வேறுபாட்டைக் கொண்டு, தங்கள் ஆணாதிக்க அதிகாரத்துக்காக பெண் அடிமைகளை உருவாக்குகின்றது. 

இந்த அடிமைத்தனம் என்பது வரலாற்று ரீதியானது. தீட்டு, துடக்கு என்று தொடங்கிய அடக்குமுறையானது, இன்று வரை பூனூல் போட்டு குடும்பத்துப் பெண் பூசாரியாகவே முடியாது. இந்த அடிமைத்தனத்துக்கும், கொடுமைகளுக்கும்.. பல வரலாற்றுப் படிக்கற்கள் உண்டு.      

கலாச்சாரம் தொடங்கி விமர்சனம் வரை, ஆண் - பெண்  என்று இருதரப்புக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இதைவிடுத்து பெண்ணுக்கு மட்டுமென்றால், ஆணாதிக்க தமிழ் தாலிபானிசமே. கலாச்சாரம் என்பது பொதுவானது, அதை விடுத்து பெண்ணுக்கு மட்டும் தான் கலாச்சாரம் என்றால், இழிவாகத் தரம் தாழ்ந்த சமூகத்தின் சுய நடத்தையாகும். 

இந்தத் தமிழ் தாலிபான் கலாச்சாரமானது பாலியலில் வரைமுறையற்ற கட்டாக்காலி ஆணாதிக்க பாலியல் அத்துமீறலை ஆதரிக்கின்றது. இதற்காக பெண்ணை குற்றம் சாட்டுகின்றது. இந்த ஆணாதிக்க கழிசடைத்தனத்தை புலியிசத்தின் மூலம் கோருகின்றனர்.

வன்னி ஊழல் ஒழிப்பு மாபியாக் கும்பல், தங்களுக்கு தாங்களே முகமூடி போட்டுக்கொண்டு புலியிசத்தை தங்கள் அரசியலாக முன்வைத்துக்கொண்டு, தங்கள் ஆணாதிக்க கழிசடைத்தனத்தை அரங்கேற்றி வருகின்றனர். 

பெண்களை இலக்கு வைத்து, அவர்களின் படங்களைப் போட்டு செயற்படும் இந்த ஆணாதிக்க பொறுக்கிகள், தங்கள் சொந்த ஆணாதிக்க வக்கிரங்களைக் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்கள் வேறு யாருமல்ல.
1.    பெண்ணின் நிர்வாணத்தை அவளுக்கு தெரியாமல் படமெடுத்து அதை காட்சிப்படுத்தப்போவதாக கூறி பெண்ணை தனது பாலியல் தேவைக்கு உள்ளாக்குவது, பணம் பறிப்பது, பழிவாங்க காட்சிப்படுத்துவது… என்று பல்வேறு சமூகக் குற்றங்களில் ஈடுபடும் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் கூட்டம், இந்த படங்களை வைத்து தாங்கள் ஊழலை ஒழிப்பதாகக் கூறுகின்றனர்.   

2.    காதலின் பெயரில் பெண்ணை ஏமாற்றி நிர்வாணமாக படமெடுப்பதும், அதை வைத்து பெண்ணை பாலியல் பண்டமாக்குவது, பணத்தைப் பெறுவது, மிரட்டுவது.. காட்சிப்படுத்தி அவளின் ஆளமையைச் செயல் இழக்கவைக்கும் ஆணாதிக்க குற்றங்களுக்கு, ஊழல் ஒழிப்பு புலி மாபியா தாலிபான் கும்பல் தலைமை தாங்குகின்றது.

3.    தந்தை – மகன் - கணவன் என்ற ஆணாதிக்க நிலப்பிரபுத்துவ கலாச்சார வரைமுறைகளை மீறும் பெண்களை, பாலியல் ரீதியாக "நடத்தை கெட்டவள்" என்று கூறும் கூட்டத்தின் தலைமையில் தமிழ் தாலிபான்கள் ஆபாசமாக பெண்களைச் சித்தரிக்கின்றது.    

4.    பெண்ணின் ஆளுமையானது ஆணாதிக்க சமூகத்துக்கு எதிரானதாக, சமூக மேலாதிக்கத்தில் இருக்கும் ஆணுக்கு எதிரான இருந்தால்.. அவளை பாலியல்ரீதியாக தாக்குவதன் மூலம் முடக்குவதற்கு, புலி மாபியா கலாச்சார தாலிபான்கள் தலைமை தாங்கினர்.

5.    யுத்தத்துக்குப் பிந்தைய சமூகத்தில் தனித்துவிடப்பட்ட பெண்களை திருமணம் செய்ய – வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள மறுத்த ஆணாதிக்கச் சமூகமானது, "கற்பிழக்காத" கலாச்சாரத்தைக் கொண்டு பெண்ணை வடிகட்டியது தமிழ் தாலிபான் கலாச்சாரமே, பெண்ணை இழிவுபடுத்திச் சமூகத்தில் இருந்து விலக்கியது.      

இப்படிபட்ட ஆணாதிக்க சமூகத்தில் இருந்து வந்த
 
1.    அர்ச்சுனா என்ற தற்குறி ஊழல் ஒழிப்பு என்ற பெயரில், ஊழல் ஒழிப்புக்கு எதிராக மக்களைத் திரட்ட வக்கற்ற தனது பன்னாடையைக் கொண்டு, பெண்களின் விபச்சாரம் பற்றியும் - ஆதாரம் பற்றியும் பேசுகின்றது. 

2.    அன்றாடச் செய்தி தொடங்கி சமூகத்துக்குக் குறுகிய தமிழினவாதம் மூலம் வடிகட்டி உபதேசம் செய்யும் தமிழ் அடியான், தமிழ் தாலிபான்களின் கலாச்சாரத்துக்கு வில்லுப்பாட்டு போட்டு, விபச்சாரம் பற்றியும் - ஒழுக்கம் பற்றியும் வகுப்பெடுக்கின்றார். அண்மையில் யாழ் பல்கலைக்கழக ராக்கிங் வன்முறையை, நாட்டில் நடந்த பல சித்திரவதை முகாம்களுடன் ஓபிட்டவர் புலிகளின் வதை முகாம்களுடன் ஒப்பிட முடியாதளவுக்கு வடிகட்டிய உபதேசம்.
   
இப்படிப்பட்டவர்கள், விபச்சாரம் குறித்த நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க தற்குறித்தனங்களையே தீர்வாக முன்வைக்கின்றனர். 

ஆணின் வரைமுறையற்ற பாலியல் நடத்தையே (ஒழுக்கக்கேடுகளே) விபச்சாரம். ஆணை மய்யப்டுத்திய சமூக அமைப்பில், பெண் சுதந்திரமாக வாழுகின்ற உரிமை மறுக்கப்படுவதும், பெண் பாலியல் பண்டமாகப்படுவதுமே சமூக நடத்தைமுறையாகும்.   

இன்று ஆணாதிக்க தனியுடமைவாத கலாச்சாரத்தில் நுகர்வு என்பது வரைமுறையற்ற, விதவிதமாக அனுபவிக்கக் கோருகின்ற சூழலில், திருப்தியென்பதும் – மகிழ்ச்சியென்பதும் இருப்பதில்லை.

இந்தத் திருப்தியின்மை, மகிழ்ச்சியின்மை பாலியலை விட்டு வைக்கவில்லை. இயற்கை தூண்டும் பாலியல், அதில் இருக்கின்ற சமூகத்தன்மையை இழந்து நுகர்வாகக் குறுகி, ஆண் - பெண் திருப்தியற்ற  விதவிதமான உறவை - தனியுடமைவாத ஆணாதிக்க நுகர்வுக் சுலாச்சாரம் முன்வைக்கின்றது. இது இன்றைய உற்பத்தி - நுகர்வுக் கலாச்சாரத்தில் புரையோடி, சமூகத்தின் பொது விளைவாக இருக்கின்றது.

தமிழ் தாலிபான்களோ தங்கள் நிலப்பிரபுத்துவ கலாச்சார ஒழுக்ககோவையுடன், பெண்களை கண்காணிக்க கமராவுடன் அலைகின்றது. ஆணாதிக்கத்தின் வரைமுறையற்ற நுகர்வுகளையும் - இந்த கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்ளும் இந்தத் தமிழ் தாலிபான்கள், தங்கள் வீட்டுப் பெண்களை சிறை வைக்க பிற பெண்களின் ஒழுக்கம் பற்றிப் பேசுகின்றது. தங்கள் ஒழுக்கம் குறித்தும், பிற ஆண்களின் ஒழுக்கம் குறித்தும் பேசுவதில்லை.                          

இஸ்லாத்தின் பெயரில் தாலிபான்கள் எப்படி ஆணாதிக்க சொந்த வக்கிரங்களுடன் பெண்ணை மூடி -  வீட்டுக்குள் பூட்டி வைக்கின்றானோ, அப்படி தமிழ் (புலித்) தாலிபான்கள் பெண்களை தங்கள் கலாச்சார வேலிக்குள் அடைத்து வைக்க முனைகின்றனர்.

ஒரு பெண் ஆணைப்போல், எல்லா வகையிலும் வாழும் உரிமையுள்ளவள். அதை கேள்விக்குள்ளாக்கும் உரிமையென்பது, ஆணின் அதே நடத்தைக்கு எதிரானதாகவே அமையவேண்டும்.

05.04.2025      

1.யாழ் முஸ்லிம்கள் மேல் சீமெந்திட்டிருக்க வேண்டுமாம்!?

சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம்

கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம்

முகமூடி போட்ட சமூகவிரோதிகளும் - அதற்கு உசுப்பேற்றும் தற்குறிகளும்

ஊழல் ஒழிப்பு முகமூடி போட்ட புலிப் பாசிட்டுகளின் இரு வேறு முகங்கள்

சாதி குறித்து டொக்டர் அருச்சுனாவின் வெள்ளாளியக் கண்ணோட்டம்