பண மோசடிகளில் ஈடுபடும் புலம்பெயர் தரகர்களினால் இயக்கப்படுகின்றவர்கள் தான், சீமான் முதல் அருச்சுனா வரை. புலம்பெயர் மோசடிக்காரத் தரகுப் பணம் இல்லையென்றால், கட்டுப்பணத்தைக் கூட செலுத்தத் தயாரற்றவர்கள் இவர்கள்.
தமிழினவாத பாசிச தலைமைகளால் தவறாக வழிநடத்தப்பட்டுப் பலியிடப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்களால் கொல்லப்பட்ட குடும்பங்கள், தவறான போராட்டத்திலிருந்து தப்பி பிழைத்தவர்களின்.. வாழ்க்கைக்கு ஒளியூட்ட முடியாதவர்களே, வாக்கு அரசியலில் தம்மை முன்னிறுத்துகின்றனர். தொடர்ந்து தமிழ் தேசியம் என்று கூறுகின்ற இந்தப் பிழைப்புவாத அரசியலை, சொந்தப் பிழைப்புக்காக முன்வைக்கின்றனர். கடந்தகாலத்தில் அரச சலுகைகளைப் பெறுவதற்குத் தயங்காதவர்கள். அதற்காக குறுக்கு வழிகளில் நக்கிப் பிழைத்தவர்கள்.
அன்றும் இன்றும் தமிழ் தேசிய வாக்கு அரசியலை கடைவிரித்து வியாபாரம் செய்யும் கூட்டத்துக்கு, புலம்பெயர் நிதியே ஆதாரம், அடித்தளம். தற்குறித்தனத்தால் பலர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தனர். இதன் மூலம் புலம் பெயர் தரகர்களின் நிதிச் சலுகைகளை இழக்க, மறுபுறம் புலம்பெயர் தரகர்களின் வசூல் வேட்டைக்கு பாரிய இழப்பு. அரசியல் வியாபாரம் மண்ணைக் கவ்விய கூட்டுத் துயரம்.
![]()
தேசியம், தலைவர்.. எல்லாம் புலம் பெயர் வசூல் வேட்டைக்கு உச்சரிக்கும் சரக்குப் பொருள். தலைவர் என்று கூறுவது, புலம்பெயர் வசூலுக்கும், வாக்குப் பெறுவததற்காகவுமே.
புலம்பெயர் பணத் தரகர்கள் இன்றி, சீமான் முதல் அர்ச்சுனா வரை அரசியலில் நீடிக்க முடியாது. கிடைக்கின்ற பணத்தின் தளத்துக்கேற்ப ஆடுகின்றவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுய அரசியலற்ற தற்குறிகள். வெற்று சொற்களைக் கண்டால் விசிலடிக்கும் தற்குறிக் கூட்டத்தின் தலைவர்கள்.
இவர்கள் மட்டுமல்ல, வாக்கு அரசியலுக்கு வெளியில் மக்களுக்கான சமூக வேலைத் திட்டத்துடன் இயங்காத அனைவருக்குப் பின்னாலும், புலம்பெயர் பணமே இருக்கின்றது.
இந்தப் புலம்பெயர் பண மாபியாக்களின் தாளத்துக்கு இயங்கினால் மட்டும் தான், புலம்பெயர் மக்களிடமிருந்து பணத்தைத் திரட்ட முடியும். இதற்காக இலங்கை - இந்தியாவில் தேசியத்தை உணர்ச்சிகரமாக உச்சரிக்கும் தற்குறிகளுக்கு பணம் கொடுப்பார்கள். புலம்பெயர் மக்களை ஏமாற்றி பணத்தைத் திரட்டுவதற்காக மட்டும்தான், பணத்தைக் கொடுப்பார்கள். இதுவொரு வியாபாரம். தேசியத்தின் பெயரில், தலைவனின் பெயரில் … சந்தை.
சந்தையில் இருந்து வெவ்வேறு வாக்கு அரசியலுக்கு வந்து சேரும் பணம், புலம்பெயர் மக்களை ஏமாற்றிப் பெறுகின்ற வெவ்வேறு தரகர்களுடன் தொடர்புபட்டது.
தேசியம், தலைவர்.. என்று கூறி நிதிகளை கொள்ளையிடும் தரகுக் கூட்டத்தின் பிடியில், தமிழ் தேசிய அரசியல். இந்தப் பணத்துக்கு வெளியில், தமிழ் தேசியமென்பது கடுகளவுக்குக் கூட இன்று கிடையாது.
பிரபாகரனின் பெயரில் தமிழ் நாட்டில் பாசிச பார்ப்பனியக் கூத்தாடியான சீமான், ஊடக வியாபாரிகளைக் கூட்டிப் பரபரப்பு அரசியல் செய்வது போல், அர்ச்சுனா என்ற தற்குறியும் தன் பங்குக்கு களமிறங்கி இருக்கின்றது.
காசுக்காகப் பரபரப்பான விளம்பரங்களை நடத்தும் ஊடகங்களினதும், யூ-ரியூப் புல்லுருவிகளினதும் தயவில், அர்ச்சுனா என்ற தற்குறி பரப்பரப்பு வாக்கரசியலில் இறங்கியிருக்கின்றது. தன்னை அன்றாடம் பேசு பொருளாக்கும் செயற்பாட்டுக்காக, தனிமனித அவதூறுகளைக் கட்டவிழ்த்து விடுவதே, இவர்களின் உச்சபட்ச அரசியலின் எல்லை. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த, எந்த அரசியல் கிடையாது.
இதன் பின்பாக புலம்பெயர் மாபியாக்கள் இயங்குகின்றனர். இந்தப் புலம்பெயர் மாபியாக்கள் மக்களின் பணத்தைத் திரட்டுகின்ற செயற்பாட்டுக்கு, இலங்கையில் குரைக்க வேண்டும். உணர்ச்சிகரமாக நடிப்பதற்கு, கூலியாக புலம்பெயர் பணம் கிடைக்கின்றது.
புலம்பெயர் தரகர்களின் பணம் தான், தமிழர் பகுதியில் எத்தகைய தேசிய வாக்கு அரசியல் என்பதைத் தீர்மானிக்கின்றது. அர்ச்சுனா "தலைவர்' என்று உச்சரிக்கும் குறியீடு, இன்று புலம்பெயர் நிதி மோசடிக் கும்பலின் விளம்பரத்துக்கான அரசியல் குறியீடு. தமிழ் தேசியமென்பது, தங்கள் சுயநலன்களைப் பூர்த்தி செய்வதற்கான மூலப்பொருள்.
இந்தப் புலம்பெயர் தரகர்களின் நிதியில் அரசியல் செய்யும் யாரும், கடந்தகால போராட்டத்தில் பங்குபற்றியவர்களல்ல. கடந்தகால போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள், தங்கள் வாழ்க்கையை இழந்து நிற்கின்றனர். இன்று பாதிக்கப்பட்ட மக்களின் சமூக வாழ்வியலுக்கான சமூகத் திட்டத்தை முன்வைத்து நடைமுறையில் செயற்படுபவர்களல்ல. புலம்பெயர் நிதியில்லை என்றால், அரச சலுகைகள் இல்லையென்றால், குறிப்பாக அரசியலால் வருமானமில்லை, புகழ் இல்லை என்றால், அரசியலில் இருந்து விலகிவிடுவார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது, சொந்த வருமானத்துக்கான கருவி. இவர்கள் ஒடுக்கப்பபட்ட மக்களின் வாழ்வியலை முன்வைத்து அதற்காகக் கடுகளவு கூட உழைக்கத் தகுதியற்ற மோசடிக் கும்பல்.
இந்த உண்மையைப் புரிந்து கொள்வதே, இன்றைய வரலாற்றின் தேவையாகும். இதுதான் நாளைய வரலாற்றை உருவாக்கும்.
25.03.2025
தலைவனைச் சொல்லி தலைவன் வழியில் மண்ணைக் கவ்விய அவதூறு மன்னன்
கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம்
முகமூடி போட்ட சமூகவிரோதிகளும் - அதற்கு உசுப்பேற்றும் தற்குறிகளும்
ஊழல் ஒழிப்பு முகமூடி போட்ட புலிப் பாசிட்டுகளின் இரு வேறு முகங்கள்
சீமான் முதல் அருச்சுனா வரையான அரசியலின் பின்புலம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode