ஆணாதிக்கத்தை தங்கள் சிந்தனைமுறையாகக் கொண்டவர்கள், பெண்களை பாலியல் ரீதியாகவே அணுகுவார்கள். இந்த ஆணாதிக்கவாதிகளின் கலாச்சாரமென்பது பெண்ணின் பாலியல் சுதந்திரத்தை மறுக்கும். குறிப்பாக புலித்தேசியமும் - புலியெதிர்ப்பு அரசியலும், தத்தமது எதிரிகளுடன் உள்ள பெண்களை இலக்கு வைக்கின்றது. இந்த வகையில் அருச்சுனாவின் செயற்பாடானது, மறுபக்கத்தில் அர்ச்சுனாவுடன் சம்மந்தப்பட்ட கவுசல்யாவையும் விட்டுவைக்கவில்லை.
பெண்ணை பாலியல்ரீதியாக அவதூறு செய்வதும், பெண்ணை நிர்வாணமாக்கிக் காட்டுவதும், பாலியல் நடத்தை பற்றி அவதூறு செய்வதும், வன்னி ஊழல் ஒழிப்பு அர்ச்சுனா கும்பலின் அரசியல் மட்டுமல்ல - அர்ச்சுனாவுக்கு எதிரான மற்றொரு தரப்பின் அரசியலும் கூட. இதையே தங்கள் அரசியலாக அர்ச்சுனா தரப்பு மாற்றியதுடன், சர்வசாதாரணமாக்கி இருக்கின்றது.
இதன் மூலம் பெண்கள் அரசியலுக்கு வந்தால், இதுதான் கதி என்று மிரட்டுகின்றது. இதற்கு அர்ச்சுனா கும்பல் "தமிழன் - தலைவரின்" பெயரில் தலைமை தாங்குகின்றது. இந்த வக்கிரத்துக்கு பாராளுமன்றத்தில் தமிழனுக்கு அநீதி என்று, தமிழன் பெயரில் சிறிதரன் வக்காலத்து வாங்குகின்றார். தலைவர், தமிழன் என்ற பெயரில் பெண்களைத் தமது பிழைப்புவாத அரசியலுக்காக விற்றுப் பிழைக்கின்றனர்.
![]()
அர்ச்சுனாவால் தலைவன் என்று கொண்டாடப்படும் பிரபாகரன், கொலைகளையே அரசியலாகச் செய்த போது, பாலசிங்கம் அதை நியாயப்படுத்தி பாசிசமாகக் கட்டமைக்கும் தத்துவவாதியாக இருந்தார். இதேபோல் யாழ் மேலாதிக்க சுய தம்பட்டத்தையும் சுயபுராணத்தையும் அரசியலாகச் செய்யும் தற்குறி அர்ச்சுனாவுக்கு, தமிழ் அடியான் தத்துவவாதியாகியுள்ளார்.
இந்த பின்னணியில் வன்னி ஊழல் ஒழிப்பு அவதூறுப் படை இயக்கப்படுகின்றது. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் பூணூல் போட்ட சாதிய புரோக்கர்கள் போன்று, அவதூறுகளுக்கு புரோக்கராக அர்ச்சுனாவும் தமிழ் அடியானும் செயற்படுகின்றனர்.
இந்த ஊழல் ஒழிப்பு அவதூறு படையிடமும், அர்ச்சுனாவிடமும் சங்கவி எதற்காக தன் மீதான இந்த அவதூறு, நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி, வன்னி ஊழலொழிப்பு பெயரிலான புலி மாபியாகளின் கூட்டுப் பாசிச முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றது. சங்கவியிடம் நீ உன்ரை புருசனுடன் வெளியில் வா என்று தமிழ் அடியான் "அன்பு" கட்டளையிடுகின்றார். ஒரு ஆணுக்கு அடிமையாக உன்னுடைய கடிவாளத்துடன் வெளியில் வா, சுயமாக வெளியில் வராதே என்பதே இதன் பொருள்.
பெண்கள் குறித்தான அவதூறுகளை கண்டிக்கவும் – விமர்சிக்கவும் வக்கில்லை. பெண்ணுக்கு ஆணாதிக்க உபதேசங்கள். எத்தகைய ஜனநாயகம்! எத்தகைய தமிழ் தேசிய வண்டவாளங்கள். ஒரு பெண் யாருடன் படுக்கையைப் பகிர்வது – பகிராமல் விடுவதும், திருமணம் செய்ததைக் காட்டுவது – காட்டாமல் விடுவது, பெண்ணின் சுதந்திரம். இதைக் கேள்வி கேட்கும் உரிமை ஆணாதிக்கவாதிகளான உங்களுக்கு யார் தந்தது? பெண்களை குற்றவாளியாக்கும் அதிகாரம் "தமிழ் தேசியம் - தலைவர்" என்று, கூச்சல் போட வைக்கின்றது. இந்த அதிகாரத்தின் பொது அளவுகோல் தான் என்ன?
பெண்ணை நடுவீதிக்குக் கொண்டு வந்து சகட்டு மேனிக்கு பாலியல் ரீதியாக தாக்குவது, பிறகு ஆலோசனை கூறுவதும், எந்தவகையில் தர்க்க ரீதியானது? 1986 ஆண்டு போராட புறப்பட்ட இளைஞர்களை யாழ்ப்பாணச் சந்திகளில் நிறுத்தி, சுட்டும் - உயிருடன் கொளுத்திய பரம்பரையல்லவா நீங்கள்.
போராட வந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை (பாருங்கள் 1986 எப்பிரல் மாத முதல் பத்து நாட்கள் வெளி வந்த பத்திரிகைகளில் இவற்றில் ஒரு பகுதி வெளியாகியுள்ளது - நூலக இணையத்தில் பத்திரிகைகளைப் பார்க்க முடியும்) கொன்று குவித்ததற்காக மன்னிப்புக் கேட்டு, மனிதப் பண்பாட்டை வெளிப்படுத்த முடியாதவர்கள் "தமிழ் தேசியம் - தலைவர்" என்று கடைவிரிக்கின்றனர். நூற்றுக்கணக்கான கொலைகளை நியாயப்படுத்துகின்ற பரம்பரையில் வந்த பாசிசக் கழிசடையில் புரளும் தற்குறிகள், தமிழன் பெயரில் பாராளுமன்றதுக்கு சென்றுள்ளனர். தலைவர் சிங்கள மக்களை எதிரியாக பார்க்கவில்லையாம். படித்த பகுத்தறிவற்ற முட்டாள்களை நம்புங்கள். 14.05.1985 உங்கள் தலைவர் 146 சிங்கள மக்களை அனுராதபுரத்தில் வீதிகளில் படுகொலை செய்த காட்சியைப் பாருங்கள் .
இதையெல்லாம் மறுக்கும் பொய்யன், யாழ்ப்பாண மக்களின் பெருமை பற்றி பாராளுமன்றத்தில் ஊளையிடுகின்றான். நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள் என்று சாதிய வெறியுடன், காலாகாலமாக அடக்கியொடுக்கிய யாழ்மையவாத வெள்ளாளிய மேலாதிக்கத்துடன், தாம் அல்லாத மற்றவர்கள் அனைவரும் எங்கள் அடிமைகள் என்று கூவுகின்றது. பிறப்பின் அடிப்படையிலேயே குணம் என்று, வெள்ளாளிய இழிவான அதிகாரத்தை முன்னிறுத்தி தற்குறிக் கூச்சல்களைக் கொண்டாடும் புலித் தமிழ்தேசிய பன்னாடைகள் குசியேற்றி, தமிழ்மக்களின் பணத்தையும் - வாக்கையும் இலக்கு வைத்திருக்கின்றது.
இப்படிப் பெருமைப்பட்டு போற்றும் கும்பல் பிறப்பின் அடிப்படையில் சாதியில் பிறந்த ஒருவனை முன்னிறுத்தி கோயில்களிலும், வீட்டுச் சடங்குகளையும் செய்கின்ற குறுகிய மனப்பாங்கு கொண்ட மனிதவிரோத சமூகத்தை பிரதிபலிக்கின்றது. தீட்டு, தீண்டாமை.. என்று கோயில் கருவறைக்கு வெளியில் கைகட்டி தற்பெருமை சுய தம்பட்டத்தைப் பேசும் தலைவர் வழிவந்த தமிழன், தமிழ் அல்லாத சமஸ்கிருதத்தை பிறப்பின் அடிப்படையாகக் கொண்ட சாதிய இடைத் தரகர்களைக் கொண்டு யாழ்ப்பாண வாழ்வியல் நடத்தையைப் பற்றி பாராளுமன்றத்தில் கூறி, ஒரு தற்குறி பெருமைப்படுகின்றது. சாதி பார்த்து வாழும் யாழ்ப்பாணச் சமூகத்தில், அதை கொண்டாடும் மனப்பிறழ்வு கொண்ட ஆணாதிக்கவாதிகளால் தான், பெண்ணை பாலியல் மூலம் இழிவாட முடிகின்றது.
பெண் பிறப்புறுப்பிலிருந்து மாதவிடாய் கழிவாக வெளியேறுவதைத் தீட்டு - துடக்கு என்று கூறி பெண்ணை ஒடுக்குவதை கொண்டாடும் பகுத்தறிவற்ற யாழ்ப்பாணத்து காட்டுமிராண்டி சமூகத்தில் இருந்து, பெண்ணைப் பாலியல்ரீதியாக கொச்சைப்படுத்தி ஒடுக்க முடிகின்றது.
1960 களில் அரசு பாடசாலைகளைத் தேசியமயமாக்கும் வரை தமிழ்மக்களை சாதிய ரீதியாக தரப்படுத்தி கல்வியை மறுத்து உருவான தமிழ் தேசியம், இன்று வரை சாதிய அமைப்பை போற்றிப் பாதுகாப்பதை அடிப்படையாகக் கொண்ட சடங்குகள், வழிபாடுகள் என அனைத்தும், லும்பன் அர்ச்சுனாவின் தற்பெருமை சுயபுராண அரசியலாக - அதை யாழ் மக்களின் பெருமையாக முன்வைக்கின்றது.
வன்னி ஊழல் ஒழிப்பு கும்பல் தொடங்கி இந்த கூட்டுக்களவாணிகளின் சமூக வலைத்தள பின்னோட்டங்களில், ஆணாதிக்க பாலியல் ஆபாசங்களை அள்ளித்தெளிக்கும் ஆணாதிக்க பாலியல் வக்கிரங்களுக்கு எல்லாம் தலைமை தங்கும் வண்ணம், நாட்டின் சட்டதிட்டங்களை இயற்றும் பாராளுமன்றத்தில் பெண்ணை விபச்சாரி என்று ஆணாதிக்க கழிசடைகளின் தலைவனாக நின்று ஊளையிட முடிகின்றது. பெண்ணை பாலியல் மூலம் பார்க்கின்ற இந்த கழிசடைக் கூட்டம், தங்கள் வீட்டுப் பெண்கள் முதல் கவுசல்யா வரை பாலியல் பொருளாகவே பார்க்கின்றது.
சங்கவிக்கு எதிராக முகமூடிபோட்ட வன்னி ஊழல் ஒழிப்பு புலி பாசிச ஆணாதிக்கக் கும்பல் பாலியல்; ரீதியாக அவதூறு செய்த போது, அதையொட்டி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அல்லது நக்கல் நையாண்டியுடன் இவர்களால் கொக்கரிக்க முடிகின்றது, ஆலோசனை முன்வைக்கின்றது. படித்த கழிசடையால் மானம் வெட்கமின்றி சுயபுhரண சுய தம்பட்டத்தை விபூதி அடிப்பது போல் அரசியலாக தமிழ்மக்கள் மேல் அடிக்க முடிகின்றது. இது இன்றைய தமிழ் சமூகத்தின் பொது அவலநிலையாகும்.
21.03.2005
இதையொட்டிய பிற கட்டுரைகள்
முகமூடி போட்ட சமூகவிரோதிகளும் - அதற்கு உசுப்பேற்றும் தற்குறிகளும்ஊழல் ஒழிப்பு முகமூடி போட்ட புலிப் பாசிட்டுகளின் இரு வேறு முகங்கள்
கவுசல்யாவையும் பாலியல் அவதூறு செய்யும் அருச்சுனாவின் ஆணாதிக்கம்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode