பாலியல் காட்சிகளைப் போடுவது, பாலியல் காட்சிகளையிடும் சமூக வலைத்தளத்தை விளம்பரம் செய்வது என்பவை ஊழல் ஒழிப்பாகியிருக்கின்றது. இதுதான் அர்ச்சுனாவினதும் – தமிழடியானினதும் சமூக அக்கறைக்கான, பொது அளவுகோலாகி இருக்கின்றது.
பெண்களை ஒடுக்கப் பாலியல் காட்சிகளைப் பதிவிடுவது, தமிழனின் ஒழுக்கத்தையும் - கலாச்சாரத்தையும் பாதுகாப்பதாம். இத்தகைய தமிழ் பாசிச அரசியலை முன்னிறுத்தி, சுயபிழைப்பை தொடருகின்றனர் கூட்டுக் களவாணிகள்.
கோயில் கோபுரங்களில் நிர்வாணக் காட்சிகளையும் - புணருகின்ற காட்சிகளையும் அமைத்து, அதை கைகூப்பிக் கும்பிடுகின்ற ஆணாதிக்கச் சமூகத்தின் கலாச்சாரம் தான், சமூக வலைத்தளத்தில் பாலியல் காட்சிகளைப் போட்டு அதை உணர்ச்சிகரமான தமிழ் தேசியமாக்கி கொண்டாடுவது சமூக செயற்பாடாகி இருக்கின்றது. தங்கள் சுய பாலியல் வக்கிரங்களை, தமிழ் தேசியத்தின் பெயரில் பின்னோட்டமாக்கி அவர்களை தம்மை தொடர்பவர்களாக உருவாக்குகின்றது. வாக்குப் போடக் கோருகின்றது. யாருக்கு வாக்கு போடவேண்டும் என்று நேரடியாகவோ - மறைமுகமாகவோ பிரச்சராம் செய்கின்றது.
![]()
புலிப் பாசிசம் பெற்றுப் போட்ட இந்த தமிழ்தேசிய கற்றுக் குட்டிகள் வேறுயாருமல்ல, புலியைக் கொண்டாடும் முந்நாள் - இந்நாள் வியாபாரிகள். "தலைவர்" என்று சொல்லி பணத்தையும், வாக்குகளையும், யூரியூப் பார்வையாளர்களையும் அணிதிரட்டிக் கொள்ளும் இந்தப் பிழைப்புவாத மாபியா லும்பன்கள் புலியை வைத்துத் தொடர்ந்து பிழைக்கின்ற நரிக் கூட்டமாகும்.
இவர்கள் எல்லாவிதமான மனிதவிரோத கிரிமினல் காரியங்களிலும் ஈடுபடக் கூடியவர்கள். பெண்களை ஏமாற்றிப் புணர்ந்த "ஒழுக்கமான" ஆணாதிக்க ஆண்களிடம் காட்சிகளை விலைகொடுத்து வாங்கியோ அல்லது மிரட்டிப் பெற்றோ அல்லது அந்த பொறுக்கிகளின் சுய பொறுக்கித்தனத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யக் கூடியவர்களே இந்த தமிழ் தேசியப் பன்னாடைகள். தங்களின் இத்தகைய இழி நடத்தையை ஊழல் ஒழிப்பாகவும் – தங்கள் சமூக ஊடகங்களின் பொது அறமாக்கி பறைசாற்றுகின்றதையும், "தேசியம் - தலைவர்" என்று கூறிக் கூவி விற்கின்றனர். இந்த மாபியாத் தமிழ் தேசியப் பொறுக்கிகளுக்கு தங்கள் சம்மந்தப்பட்ட பாலியல் காட்சிகளை கொடுப்பவர்கள், ஒழுக்க சீலர்களாம்.
பெண்களை இழிவுபடுத்தும் வன்னி ஊழல் ஒழிப்பு சமூக வலைத்தளத்தின் சொந்த ஒழுக்கக்கேட்டை மூடிமறைக்க பதிவிடுவதை, இந்த கூட்டுக்களவாணிகள் பகிர்ந்துவிடும் அதேநேரம், ஜயோ தமக்கும் அந்த சமூக வலைத்தளத்திற்கும் தொடர்பில்லை என்று கூறுமளவுக்கு புலியிடம் பயிற்சிபெற்றவர்கள்.
2009 இற்கு முன் எல்லாளன் படை முதல் பல படைகள் தங்களுடையதல்ல என்று கூறிக்கொண்டு, புலிகள் நடத்திய மனிதவிரோத செயற்பாடுகள் போன்றது இவர்களின் சுய தம்பட்ட சுயபுராணங்கள்.
லும்பன் அருச்சுனாவின் யாழ் மேலாதிக்க வக்கிரங்கள், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கும் தமிழனின் அதிகார அரசியலை அடிப்படையாகக் கொண்டது. பிரபாகரன் தானல்லாத கருத்துகளை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள வக்கற்று, சொந்த இன மக்களையே கொன்று பாசிட்டானானோ அந்த பாசிட்டின் பெயரை சொல்லிக் கொண்டு பெண்களையும் பாலியல் ரீதியாக குறிவைத்து குதறுகின்றது.
இன்றைய வாள்வெட்டு லும்பன்கள் போல், சமூகப் பிரச்சனைகளை மூடிமறைக்க தனிப்பட்ட பெண்களை இலக்கு வைத்து குதறுகின்றனர். இந்த வாள்வெட்டு லும்பனின் சுயதம்பட்ட சுயபுராண அரசியல் சாவகச்சேரி வைத்தியசாலையில் தொடங்கியது. அன்று வைத்தியசாலையில் லும்பன் அர்ச்சுனா நடத்தியது ஊழலுக்கு எதிரான அரசியல் போராட்டமல்ல. வைத்தியசாலையில் தனது சொந்த அதிகாரத்தை நிலைநிறுத்த நடத்திய அதிகாரத்துக்கான மோதலே ஒழிய, ஊழலுக்கு எதிரான அரசியல் போராட்டமல்ல. அதிகாரவர்க்கத்திற்கு இடையிலான அதிகார மோதல், தனது எதிராளிகளின் ஊழல்களை பேசவைத்தது. இதன் மூலம் தன்னையும், தன் அதிகார நோக்கத்தையும் மூடிமறைத்துக் கொள்ளமுடிந்தது.
ஊழலுக்கு எதிரான பொதுமக்களின் பொது அபிப்பிராயத்தை, போலியான சுய தம்பட்ட சுயபுராண ஊழல் ஒழிப்புக்குப் பின்னால் அணிதிரளவைத்தது. ஊழல் ஒழிப்புக்கு எதிரான மக்கள் அரசியல் இன்று வரை இந்த அதிகார வர்க்க லும்பனிடம் கிடையாது. பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதை அரசியலாகச் செய்யும், மூன்று பல்கலைக்கழகத்தில் படித்த மக்கிடம் இருப்பது, தற்புகழ்சி கொண்ட சொந்த சுயபுராணங்களே.
இன்று தனது அரசியல் வங்குரோத்தை மூடிமறைக்க "தலைவர்" என்று கூறிக் கொண்டு, தமிழன் என்று இனவாதத்தைக் கக்கிக் கொண்டு, சொந்த பிழைப்புவாத அரசியல் வியாபாரத்தைத் தொடங்கியுள்ளான்.
ஊழல் ஓழிப்பு என்பது மக்கள் திரள் அரசியலாக மட்டுமே இருக்க முடியும். இதுவல்லாத தற்புகழ்ச்சி கொண்ட சொந்த சுயபுராணங்களை முன்னிறுத்திக்கொண்டு, கடந்தகால மனிதத் தியாகங்களை வாக்கு அரசியலாக்கி பிழைக்கமுனையும் புதிய கூட்டத்தின் வக்கிரங்கள், தொடர்ந்து தமிழ்மக்களை ஏமாற்றிப் பிழைக்க புதுப்புது வேசங்களோடு களமிறங்கி வருகின்றது.
மக்கள் பகுத்தறிவுள்ளவர்களாகச் சிந்திப்பதைத் தடுக்கும் இந்த அரசியல், இயக்கங்களின் - புலிகளின் காலத்தில் இருந்து தொடங்கியது. இதை அக்குவேறாக வேர் அறுக்கவேண்டியிருக்கின்றது. தொடர்வோம்.
19.03.2025
முகமூடி போட்ட சமூகவிரோதிகளும் - அதற்கு உசுப்பேற்றும் தற்குறிகளும்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode