Language Selection

பி.இரயாகரன் -2024
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனவாதத் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி தமக்கு வாக்களிக்கக் கோரும் தேர்தல் அரசியல், மக்களுடைய கோரிக்கைகளுக்கு உண்மையாக இருக்கின்றதா!? ஒடுக்கப்பட்ட மக்களின் சமூகப் பொருளாதார வாழ்வுடன், தமிழ்த் தேசிய அரசியல் பொருந்திப் போகின்றதா?  

துமிழ்த் தேசியம் என்பதென்ன? தேசிய அரசியலின் உள்ளடக்கமென்ன? தமிழனைத் தமிழன் அடக்கியாளும் அதிகாரத்தைப் பெறுவதா! புலிகளை முன்னிறுத்துவதா! 

இவர்கள் கோரும் தமிழ் அதிகாரம், தமிழனைத் தமிழன் அடக்கியாளும் அதிகாரத்தையா!? 13 வது திருத்தச் சட்டம், சமஸ்டி மூலம் யாரை அடக்கியாள விரும்புகின்றனர்? 13 வது திருத்தச் சட்டம், சமஸ்டி.. கோரும் இவர்களின் சமூகப் பொருளாதாரத் திட்டமென்ன? ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி முன்வைக்கப்படுகின்றதா!  

ஊழலெதிர்ப்பை முன்வைத்து அரசியலுக்கு வந்த டொக்டர் அர்ச்சுனா, ஊழலுக்கு எதிரான அரசியலை முன்வைப்பதைக் கைவிட்டு தமிழ்த் தேசியத்தின் பெயரில், குப்பை கொட்டுமளவுக்கு, தேசியம் குப்பைக் கிடங்காக மாறியிருக்கின்றது. 

தமிழ்த் தேசியத்தின் பெயரில் இவர்கள் அனைவரும் முன்வைப்பதென்ன? ஒடுக்கப்பட்ட மக்களைக் கண்டுகொள்ளாத அரசியல். தியாகங்களையும் அவர்களின்; குடும்பங்களின் சமூகப் பொருளாதார வாழ்வியலைக் கண்டுகொள்ளாத சுய பிழைப்புவாத அரசியல். 

இந்த வகையில் இனவாதத் தமிழ்த் தேசியமானது, அனைத்துக் கூட்டுக்களவாணிகளும் கூடி பேலுகின்ற மலக் கிடங்காகியிருக்கின்றது.    

யுத்தத்தில் தங்கள் அனைத்து அடிப்படை வாழ்வாதாரங்களையும் இழந்த மக்கள், தம் வாழ்வை மீட்கும் என்று நம்பி தமிழ்த் தேசியத்துக்காக போராடிய மக்கள்.. என அனைவரும்; ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்து வாழ்கின்றனர். தேசியத்தைச் சொல்லி பிழைத்த பிழைக்கின்ற கூட்டமோ, சொகுசாக வாழ்கின்றது.

நேர்மறையான இந்த உண்மையென்பது, எங்கும் எதார்த்தமாக இருக்கின்றது. யுத்தத்தில் பொருளாதாரரீதியாக அனைத்தையும் இழந்தவர்கள், தங்கள் உடல் உறுப்புகளை இழந்தவர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், போராட்டத்தின் பெயரில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள், வாழ்க்கைத் துணையை இழந்த குடும்ப உறுப்பினர்கள்  .. என்று, வகைதொகையின்றி சொல்லொணாத் துயரங்களுடன், வாழ்க்கைப் போராட்டங்களுடன் வடகிழக்கு மக்களின் பெரும் பகுதியினர் வாழ்கின்றனர். இவர்கள் தேசியமென்று கருதுவது, தம்மையொத்த ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான சமூகப் பொருளாதார விடிவுதான்.  

பொருளாதாரரீதியாக சமூக அடியாளத்தில் வீழந்துவிட்ட மக்களையும்;, ஏழ்மையில் சிக்கிக் கிடக்கும்  மக்களையும்.., தொடர்ந்து சுரண்டித் தின்னும் கூட்டம் தேசியத்தின் பெயரில், மதத்தின் பெயரில், உதவிகளின் பெயரில் .. தம் பங்குக்கு தொடர்ந்து சூறையாடுகின்றனர். இப்படி சிதைக்கப்பட்ட மக்களில் கணிசமானவர்கள் சாதிரீதியாக, தொடர்ந்து ஒடுக்கப்படுபவர்கள்.  

இப்படிப்பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்த, தமிழ்த் தேசியம் என்ற பெயர்ப்;பலகையை மாட்டி இயங்குகின்றவர்கள் யாரும் சமூகப் பொருளாதார கொள்கைகளை முன்வைப்பதில்லை. அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை முன்வைப்பதில்லை. மதவாதிகள் மத மாற்றத்தை செய்கின்றனர்;. உதவி செய்பவர்கள் உதவியின் பெயரில் தாம் கொழுக்கின்றனர். அரசியல்வாதிகள் தேசியத்தின் பெயரில், சொகுசு வாழ்க்கையை வாழ்கின்றனர்.       

ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத இனவாதத் தமிழ் தேசியவாத அரசியல், மக்களை சொல்லி தங்கள் ஒத்தவர்களுடன் கூடிச் சொந்தப் பிழைப்பை நடத்துகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்ரீதியாக முன்னிறுத்தாத அதேநேரம், தமக்கு ஆளும் அதிகாரத்தைக் கோருகின்றனர்;. தேசியத்தின் பெயரில் பார்பெமிட், வாகனப்பெமிட்.. என்று பலவிதமான ஊழல்கள் மூலம் கொழுக்கும் ஒரு கூட்டமும், மறுபக்கம் இவையெதுவும் தமக்கு தெரியாது போல் நடிக்கும் மற்றொரு கூட்டமும் சேர்ந்து, தேசியத்தின் பெயரில் கோரும் ஒற்றுமை - அதிகாரம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தியதல்ல. மாறாக ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை தம் பங்குக்கு ஒடுக்குகின்ற தமிழனின் அதிகாரத்தையே முன்வைக்கின்றனர்.  

உதாரணமாக மருத்துவ மாபியாக்களின் ஊழலுக்கு எதிராக டொக்டர் அர்ச்சுனா அதிகார வர்க்கத்தை உலுக்கிய போது, இந்த தமிழ்த் தேசியக் கூட்டு களவாணிகள் அனைவரும் ஒரு அணியாக அணிதிரண்டு நின்ற காட்சிகள் வெளிப்படையாக மக்கள் முன் அம்பலமானது. இவர்கள் கோரும் அதிகாரம் எப்படிப்பட்டது என்பதற்கும், யாருக்கானது என்பதற்குமான சிறந்த உதாரணங்கள் இவை. 

இந்தவகையில் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத டொக்டர் அர்ச்சுனாவின் "படித்தவர்களின்" அரசியலும், இதற்கு விதிவிலக்கல்ல. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத எந்த அரசியலும், ஒடுக்கும் அரசியல் தான். ஊழல் அரசியலை கைவிட்டு, ஒடுக்கும் இனவாத தமிழ்த் தேசியத்தில் மூழ்கிவிட்டது. 

தம் வாழ்வை இழந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகப் பண்பாட்டு பொது அடிதளத்தையெல்லாம் இழந்து போகவும், தனிமனிதர்களாக சிதைந்து சின்னாபின்னமாகிவிடக் காரணமான இனவாத தமிழ்த் தேசியம்;,  போராட்டத்தின் பெயரில் தான் அல்லாத அனைத்தையும் அழித்தது. தனி மனித சர்வாதிகாரத்தை மய்யப்படுத்தி ஒற்றைச் சிந்தனைமுறை, மனிதனின் பொது அறத்தைக் கூட உயிருடன் இருக்க அனுமதிக்கவில்லை.

இனவாத தமிழ்த் தேசியமானது போராட்டத்தின் மூலம் வெறுமையையும், நம்பிக்கையற்ற விரக்தியையும், மற்றவரை குழிபறிக்கும் வக்கிரத்தையும், உழைத்து வாழாதிருக்க முனையும் முனைப்பையும், சட்ட ஒழுங்குகளை மறுக்கும் அராஜகத்தையும்.. உருவாக்கியுள்ளது. இதுவே இன்று தமிழ்த் தேசியமாக  பரிணமித்திருக்கின்றது. தேசியப் போராட்டத்தின் பெயரில் இப்படி சிதைந்து சின்னாபின்னமாகிய மக்களை, தொடர்ந்து அடக்கியாளவே தம் பங்குக்கு 13வது திருத்தச் சட்டம் தொடங்கி சமஸ்டி வரை கோருகின்றனர்.  

ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி தேசிய இனங்களுக்கான சுயாட்சி என்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் அனைத்து விடுதலையுடன் இணைந்தது. இதை தமிழனைத் தமிழன் ஒடுக்கும் இனவாத தமிழ் தேசியமும், 13 வது திருத்தச் சட்டம் தொடங்கி சமஸ்டி வரை மறுக்கின்றது.       

தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற தங்கள் இனவாத ஆட்சியைக் கோரியும், இருக்கும் சமூக மேலாதிக்க அதிகாரத்தை அங்கீகரிக்கக் கோரியும், சமூக ரீதியான தமது அதிகார மேலாண்மையைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காகவே.. தமக்கு (தேசியத்துக்கு) வாக்களிக்க கோருகின்றனர். இதுதான் தேசியத்தின் பெயரில் முன்வைக்கும், இனவாத தமிழ்த் தேசியத்தின் சாரம்.

ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களை முன்னிறுத்திய அரசியலையோ, நடைமுறையையோ.,. அதாவது சமூகப் பொருளாதாரக் கொள்கைகளையோ இவர்களின் இனவாத தமிழ்த் தேசிய அரசியலில் காணமுடியாது.

முடிவாக 

    யாரெல்லாம் உண்மையாக ஒடுக்கப்பட்ட மக்களுடன் கடந்தகாலத்தில் நடைமுறையில் நின்றனரோ, அதற்கான சமூகப் பொருளாதார கொள்கையுடன் செயற்பட்டனரோ, அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தனரோ அவர்களுக்கு வாக்களியுங்கள்.

    உங்கள் அருகில் அவர்கள் உங்களுடன் பயணிக்கா விட்டாலும், உங்களைப் போன்ற மக்களுக்காக யார் நின்றனரோ, அர்களை இனங்கண்டு வாக்களியுங்கள். 

04.11.2024

  1. டொக்டர் அர்ச்சுனாவும் யாழ்ப்பாண மாபியாக்களும் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி – 08
  2. உதய கம்மன்பில தொடங்கி டொக்டர் அருச்சுனா வரை, மீண்டும் இனவாதம் - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 7
  3. தேசிய மக்கள் சக்தியின் அரசு மதச்சார்பற்றதா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி -6
  4. .யார் செழுமையடைய போகின்றார்கள்? மக்களா!?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 5
  5. .டொலர் பொருளாதாரமா? தேசியப்  பொருளாதாரமா?-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 4
  6. .சமூக மாற்றத்தை மறுதலிக்கும் தேசிய மக்கள் சக்தி-யாருக்கு வாக்களிக்க வேண்டும். பகுதி - 3
  7. .கள்ளரை வெளியேற்ற அனுரவுக்கு ஆதரவு" தெரிவிக்க வேண்டுமா!? - யாருக்கு வாக்களிக்க வேண்டும்-பகுதி - 2
  8. .மக்களின் குரலாக யார் இருக்கின்றனர்? யாருக்கு வாக்களிக்க வேண்டும் பகுதி - 1
  9. .ஜே.வி.பியின் வெற்றியும் சமூகத்தின் தோல்வியும்
  10. .பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஜே.வி.பி. குறித்த கற்பனைகளும் நிஜங்களும்.
  11. .ஜே.வி.பி. மீதான அரசியல் அழுத்தங்கள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்
  12. .தமிழ் தேசியமும் - சாராயக் கடையும் - பொலிஸ் அதிகாரமும்
  13. .யாருக்கு வாக்களிக்க வேண்டும்!? ஏன்!? எதற்காக!?