சயிட்டத்துக்கெதிரான மாணவ மக்கள் அமைப்பினால் வவுனியாவில் நேற்று (27.09.2017 ) ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கையின் போது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை தெரிவத்திருந்தனர்.
அங்கு பல்வேறு அமைப்புகள் தமது காட்டமான தமது எதிர்ப்புக்களை உரை வடிவிலும், ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டு “வேண்டாம் வேண்டாம் பட்டக் கடை” போன்ற சையிட்டத்துக்கு எதிரான பல கோசங்களினூடு வெளிப்படுத்தியிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தினை புகைப்படங்களிலும் உரையாற்றுகைகளின் ஒரு பகுதியை இங்கு காணொளியிலும் காணலாம்.