அன்புக்குரிய அன்னையரே, தந்தையரே, சகோதர, சகோதரிகளே, மீண்டும் பற்றவைக்கத் துடிக்கும் இனவாத தீயின் கொடிய மரணச் சுவாலை இலங்கை சமூகத்தை தொட்டுச் சென்றுகொண்டிருக்கிறது. அவ்வாறான துரதிஷ்ட நிலைமையை தோற்கடிப்பதற்கு நீங்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக சமூகத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய கருத்தாடலுக்கு அழைப்பு விடுவதற்காக, அதற்காக அனைத்து மக்களிடையே, பரந்த மக்கள் ஒன்றிணைப்பை கட்டியெழுப்புவதற்காகவும், அதன் ஆரம்பப் படியாக இந்த துண்டு பிரசுரத்தை உங்கள் கைகளுக்கு கிடைக்க, நாங்கள் சிந்தித்தோம்.
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)
கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பாகங்களில் விசேடமாக முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் வியாபார நிலையங்கள், மத வழிபாட்டு ஸ்தலங்களை இலக்கு வைத்து இனவாத குழுக்கள் தாக்குதல்கள் நடத்தியமை உங்களுக்குத் தெரியும.; என நாம் நினைக்கிறோம். கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் இவ்வாறான இனவாத உச்ச செயற்பாடுகள் நடந்தேறியது. இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால் இருக்கும் இயக்கத் தன்மையின் சுயரூபத்தை அவதானிக்கும் போது, மோசமான விளைவின் பாரதூரத் தன்மையினை உங்கள் அவதானத்திற்கு உட்பட வேண்டிய தொன்றாகக் கருத்தில் கொள்வோம்.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் காலி, அக்குரஸ்ஸ, அம்பாறை, பொலன்னறுவை, பாணந்துறை, வெல்லம்பிட்டிய, திருகோணமலை, தோப்பூர், சிலாபம், இரத்தினபுரி, மஹரகம ஆகிய 19 பிரதேசங்களில் முஸ்லிம் இனத்தவர்களின் வியாபார நிலையங்கள், மத வழிபாட்டுத் தளங்கள் பலவற்றுக்கு பெட்ரோல் குண்டு மற்றும் கம்பு, தடி, வாள் போன்ற ஆயுதங்களை பாவித்து தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது. இது மிகவும் பாரதூரமான நிலைமையின் ஆரம்பம் என புதிதாக கூறத்தேவை இல்லை.
மூன்று தசாப்தம் இரத்தம் சிந்திய யுத்தத்தின் பிடியில் சிக்கியிருந்த சமூகத்திற்கு மீண்டும் அவ்வாறான துரதிஷ்டமான நிலைமை எப்போதும் தேவை இல்லை. யுத்தத்தை தமது வயிற்றுப்பிழைப்பாக மாற்றியமைத்தவர்களுக்கும், அதன் மீது தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிப்பவர்களுக்கும், இனவாதத்தை, மதவாதத்தை தவிர்ந்த நிலைபேறு இல்லை.
மூன்று தசாப்த யுத்தத்தின் தற்காலிக முடிவின் பின்னர் மீண்டும் சிங்கள, முஸ்லிம் மோதல், இல்லையெனில் வேறு ஏதோவொரு வடிவில் இனவாத மோதல்கள் ஏற்படுத்துவது அவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. சிங்கள இனவாதிகள் தமது இனவாத நடத்தையினை நியாயப்படுத்துவதற்கு எப்போதும் கூறியது, தாம் சிங்கள இனத்தினதும், பௌத்த மதத்தினதும் நிலைப்பேறுக்காக அவ்வாறு செய்வதாக. அதேபோல் தமிழ் இனவாதிகள் கூறுவது தாம் தமிழ் இனத்தின் கீர்த்திமிக்க வரலாற்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக. முஸ்லிம் இனவாதிகள் தம் இனம் உலகின் பெறுமதிமிக்க இனம் என்பதை ஒப்புவிப்பதற்காக செயற்படுவதாக. இவர்கள் அனைவரும் போட்டிப்போட்டுக் கொண்டு பொய் சொல்லுகிறார்கள். மக்கள் மனதை இனவாதத்தில் மூழ ;கடிக்கிறார்கள். இரத்தம் சிந்தி கொடிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள ஒடுக்கப்பட்ட மக்களை மீண்டும் மீண்டும் மரணப் பொறியில் ஏற்றுகிறார்கள். எந்த இனவாதியும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசாரத்தை, மொழியை வளர்க்க அல்லது பாதுகாக்க எதையும் செய்தது இல்லை. வரலாறு முழுவதும் கலாச்சாரம், மொழி வலுவூட்டப்பட்டுள்ளது இனவாதத்திற்கு எதிரானவர்களாலேயே.
அன்புக்குரிய மக்களே.....!
கல்வி, சுகாதாரம் என்பவற்றை விற்பனை செய்வது, அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவது, வாழ்க்கைச் செலவை உயர்த்துவது போன்ற நாம் உண்மையிலேயே முகங் கொடுக்கும் பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாது இனவாதம் எங்களுக்கு, சிங்கள எதிராளி, முஸ்லிம் எதிராளி, தமிழ் எதிராளி என முன்னிறுத்தியிருப்பது உண்மையான எதிராளியை மறைத்தே. ஆட்சியாளர்கள் உண்மையான எதிராளிக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களும் ஒன்றிணைவதை தடுத்து, உங்களிடம் இருக்கும் அனைத்து சக்திகளையும் போலியான எதிராளிக்கு எதிராக பயன்படுத்துவதற்கு தூண்டுவதையே செய்கிறார்கள். அனைத்து விதத்திலும், இனவாதம், அனைத்து காலங்களிலும் மனித சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்துதது பிணங்களையும், சுடர்விட்டெரியும் தீச்சுவாலையையும் தவிர ஒன்றும் இல்லை.
அதனால், இந்த இனவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக முன்வருமாறும், இனவாதிகளின் இரத்தம் சிந்தும் சூழ்ச்சியினை தோற்கடிக்க உங்களிடம் இருக்கும் சகல இயலுமைகளையும், சக்திகளையும் தைரியமாக பயன்படுத்துமாறும் சகோதரத்துவத்துடன் உங்களிடம் வேண்டி நிற்கின்றோம்.
இனவாதத்திற்கு தோல்வி......!