சமவுரிமை இயக்கம், வடக்கு - கிழக்கு மக்கள் யுத்தத்தின் பின்னர் முகம்கொடுத்து வரும் பாரிய பிரச்சனைகள் குறித்து தென்னிலங்கை மக்களுக்கு பிரச்சாரப்படுத்தும் நோக்கத்தில் பல பிரச்சாரம் மற்றும் சத்தியாககிரக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. கடந்த மாதம் நுகேகொட மற்றும் கண்டியில் சத்தியாககிரக போராட்டங்களை முன்னெடுத்திருந்தது. இந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று (19/5/2017) அநுராதபுர நகரத்தில் ஒரு நாள் சத்தியாககிரக போராட்டம் மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
கேப்பாபுலவு உட்பட வடக்கு-கிழக்கில் பல இடங்களில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்ககோரும் போராட்டங்களிற்கும், அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வலிந்து காணாமலாக்கல்களை வெளிப்படுத்தக்கோரி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டங்களிற்கு ஆதரவாகவும், தென்னிலங்கை உழைக்கும் மக்களை இந்த போராட்டங்களுடன் இணைக்கும் முகமாக சமவுரிமை இயக்கம் தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.