மீதொட்டமுல்ல மூவின மக்களின் வாழ்விடத்தில் குப்பைமேடு சரியுண்டதனால், மூவின மக்கள் 58 பேர் புதையுண்டுள்ளனர்... 28 சடலங்கள் மீட்பு; 30 பேர் மாயம்! இன்று 16 பேரின் இறுதிக் கிரிகைகள் இடம்பெற்றன. சடலங்கள் அமைதி பேரணியில் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டன. அமைதிப் பேரணியில் பொது மக்கள், மீதொட்டமுல்ல குடியிருப்பாளர்கள், மதகுருமார்கள், இடதுசாரிய கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்த அமைதி கண்டன பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.
கொலொன்னாவை சுற்றி சிறப்பு அதிரடிபடை, 1000 இற்கும் மேற்பட்ட படையினர் மற்றும் ராணுவ புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர் கூடவே தண்ணீர் பீச்சி அடிக்கும் வண்டிகளும் இந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன.
குப்பை மேட்டுக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் கீர்த்திரத்ன அவர்களின் மனைவி, மகன், பேத்தி உட்பட குடும்பத்தில் நான்கு பேரின் உடல்களும் இன்று அடக்கம் செய்யப்பட்டன.