பல்வேறு மாற்றுக்கருத்துக்களும் போலியான போட்டிப் பரீட்சைகளையும் நம்பி இனிமேலும் நாம் நம்பிக்கை கொள்ள தயாராக இல்லை. நல்லாட்சி அரசாங்கம் எமது கோரிக்கைகளை செவிமடுத்து விரைவில் அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சம் அற்ற விதத்தில் தொழில் வாய்பை வழங்க வேண்டும் எனும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் காலவரையறையற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தை கடந்த 27 ஆம் திகதி கல்முனை பொத்துவில் பிரதான வீதியின் காரைதீவு சந்தி பிரதேசத்தில் ஆரம்பித்தனர்.
அந்தவகையில் இன்றுடன் நான்காம் நாள் தொடரப்படும் போராட்டமானது நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் கலந்து கொண்டதுடன், இப்பிரச்சனைக்கான தீர்வினை வழங்குமாறும் குறித்த அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.