அண்ணன் பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு அ.தி.மு.க கட்சிக்காரர் என்பது தெரிந்தும் அதனால் ல, ள உச்சரிப்புகளை அவரிடம் பேசும் போது மிகக் கவனமாக உபயோகிக்க வேண்டும் என்பது தெரிந்தும் காளை, காலை என்ற சொற்களை வைத்து அண்ணன் பன்னீர்செல்வத்தை ஏமாற்றியதை மிக வன்மையாக கண்டிக்கிறோம்.
அண்ணன் பன்னீர்செல்வம் அம்மா ஜெயலலிதாவின் காலைப் பிடித்தார்.
அண்ணன் பன்னீர்செல்வம் சின்னம்மா சசிகலாவின் காலைப் பிடித்தார்
அண்ணன் பன்னீர்செல்வம் காலைப் பிடிப்பதில் ஒரு வல்லவர் என்பதை தெரிந்து கொண்டு அவரை அலங்காநல்லூருக்கு காலை பிடிக்க வாருங்கள் என்று அழைத்து காளை பிடிக்க வைத்த சதியை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அண்ணன் பன்னீர்செல்வம் அலங்காநல்லூருக்கு வந்ததில் இருந்து "எங்கே சின்னம்மா சசிகலாவைக் காணவில்லை. சசிகலா வராமல் நான் எப்படி காலைப் பிடிப்பது" என்று கேட்டுக் கொண்டு இருந்தார். லகர, ளகர உச்சரிப்பை வைத்து அண்ணனை காளை மாட்டின் காலில் மண்டியிட வைத்த சர்வதேச சதியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
PETA - People for Ethical Treatment of Arasiyalvathis