"பாடசாலைகளில் பணம் அறவிடுவதனை நிறுத்து", "கல்விக்கு 6% த்தை ஒதுக்கு", "பல்கலைக்கழகங்களிற்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரி", "மாலபே திருட்டு பட்டக்கடையை இழுத்து மூடு" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று 11-01-2017 ஒரு நாள் விரிவுரைகளை பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தென்னிலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் பகிஸ்கரிப்பினை மேற்க்கொண்டதுடன், ஊர்வலமாக வீதிகளில் இறங்கி கோசங்களை முழங்கியதுடன் பகிரங்க கூட்டங்களையும் நடாத்தி இருந்தனர். இந்த மாணவர்களுடன் விரிவுரையாளர்களும், உள்ளுர் மக்களும் இணைந்து கொண்டிருந்ததனை பல பல்கலைக்கழகங்களில் காண முடிந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற போராட்ட படங்களை இங்கு காணலாம்.