முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டை முன்னிட்டு, இடதுசாரியக் கருத்தியல், உழைக்கும் மக்களின் விடுதலை, உழைக்கும் வர்க்கம் தனது ஆட்சியதிகாரத்தை வென்றெடுக்க போராட்ட குணாம்சம் கொண்ட உழைக்கும் மக்களின் வர்க்க கட்சியின் தேவையை வலியுறுத்தி முன்னிலை சோசலிசக் கட்சியின் தோழர்களால் நாடு தழுவிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தெருமுனைக் கூட்டங்கள், மக்களுடன் கலந்துரையாடல்கள், துண்டுப்பிரசுர விநியோகங்கள் என பல்வேறு வழிகளில் இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



