முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு, எதிர்வரும் மாசி மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. "ஏகாதிபத்திய -நவதாராளவாத பொருளாதரத்துக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு கட்சி!" என்ற கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவிருக்கின்றது. இன்று கொழும்பில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சேனாதிர குணதிலக தலைமையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அங்கு பேசிய தோழர். சேனாதிர "முதலாளித்துவத்திற்கும்ம் அதன் அடிமைத்தனத்துக்கும் எதிராகப் போராடும் பாரம்பரியத்தை கட்டியெழுப்புவோம்".... எனத் தெரிவித்தார்.
சேனாதீரவுடன் முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர்கள் சமீர கொஸ்வத்த, துமிந்த நாகமுவ மற்றும் பிரச்சார செயலாளர் புபுது ஜெயகொட ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.