சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் 1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி மாத்தளை மாவட்ட தோட்டத்தொழிலாளர்கள் இன்று காலை மாத்தளை மணிக்கூட்டு கோபுரச்சந்தியில் இருந்து பேரணியை தொடங்கி A9 பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் புதிய ஜனநாயகக் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் தொழிற்சங்கம், முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் பிற இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களின் ஒழுங்கமைப்பில் உருவான மலையக சமூக நடவடிக்கைக் குழுவின் ஏற்பாட்டில் தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரிய கட்சிகள் இணைந்து மலையக மக்களின் பிரச்சனைகள் குறித்த கலந்துரையாடல் இன்று மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்றது.